முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மாதவிடாய் பிரச்சனைகளை குணமாக்க உதவும் மூலிகை தேநீர்...

மாதவிடாய் பிரச்சனைகளை குணமாக்க உதவும் மூலிகை தேநீர்...

காட்சி படம்

காட்சி படம்

உங்கள் மாதாந்திர சுழற்சிக்கு முன் மூன்று நாட்களுக்கு மட்டும் இந்த தேநீரை அருந்துங்கள்.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :

பெண்கள் மாதந்தோறும் சந்திக்கும் தவிர்க்க முடியாத பிரச்சனை மாதவிடாய். மாதவிடாய் காலத்தில் பெண்கள் மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், அடிவயிறு வலி, முதுகு வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும். பல சமயங்களில் பெண்கள் குறைவான மாதவிடாயை எதிர்கொள்கின்றனர், இது மன அழுத்தம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்ற பிரச்சனைகளால் ஏற்படும்.

இதுகுறித்து விளக்கும் யோகா பயிற்சியாளர் ஜூஹி கபூர், குறைவான மாதவிடாய் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெறுவதற்கு முன்னால் வீட்டிலேயே இயற்கை முறையில் மூலிகை தேநீர் தயாரித்து அருந்துவது நல்ல பலனை தரும்.

இது குறைவான மாதவிடாய் சிக்கலை சரி செய்வது மட்டுமல்லாமல் மாதவிடாய் வலியையும் குறைக்க உதவுகிறது. ஜூஹி கபூர், கூற்றுப்படி, மூலிகை தேநீர் தயாரிக்கும் முறைகளை குறித்து இங்கு காண்போம்., இதற்கு முக்கியமாக ஓமம் தேவைப்படுகிறது. ஓமம், சீரகம் போல காட்சியளிக்கும். இது சீரகத்தை விட கருமையாகவும், சுவையாகவும் இருக்கும்.

மூலிகை தேநீர் - தேவையான பொருட்கள் :

ஓமம் - 1 ஸ்பூன்

தண்ணீர் - 2 கப்

வெல்லம் - தேவையான அளவு

செய்முறை :

ஒரு டீஸ்பூன் ஓமத்தை இரண்டு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை, இதனை எடுத்து கொதிக்கவைக்கவும். இரண்டு கப் தண்ணீரை ஒரு கப் அளவிற்கு குறையும் வரை நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர் தேவையான அளவு வெல்லம் சேர்த்து அருந்தினால் குறைவான மாதவிடாய் பிரச்சனை சரியாகும்.

குறிப்பு :

* இந்த மூலிகை தேநீரை காலை, மாலை என இரண்டு வேலை அருந்துவது நல்ல பலனை தரும்.

* உங்கள் மாதாந்திர சுழற்சிக்கு முன் மூன்று நாட்களுக்கு மட்டும் இதை செய்யுங்கள் என்று ஜூஹி கபூர் பரிந்துரைத்துள்ளார். இதனை சரியாக அருந்தி வந்தால் மாதவிடாய் வலிக்கும் பெரிதும் உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

also read : முடி உதிர்வை பற்றிய கட்டுக்கதைகள் - சரும நிபுணர் விளக்கம்

* இந்த தேநீரை தயார் செய்ய ஓமத்தை தான் பயன்படுத்த       வேண்டும். அதற்கு பதிலாக சீரகத்தை பயன்படுத்தி குழப்பமடைய வேண்டாம்.

* இந்த மூலிகை தேநீரை மாதம் முழுவதும் நீங்கள் குடிக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் நீங்கள் எதிர்பார்க்கும் மாதவிடாய் தேதி நெருங்கும் நேரத்தில் அருந்தினால் போதுமானது.

* ஒரு டம்பர் நீரில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஓம விதைகளை ஊறவைத்து குடித்து வந்தால், மாதவிடாய் தாமதம் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்.

* மேலும் ஓம விதையுடன் இஞ்சி, தேநீர், தேன் கலந்து குடித்தால் மாதவிடாய் விரைவில் ஏற்படும்.

First published:

Tags: Periods pain