முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உயர் ரத்த அழுத்தம் இருந்தால் கண் பார்வை பாதிக்கப்படுமா..?

உயர் ரத்த அழுத்தம் இருந்தால் கண் பார்வை பாதிக்கப்படுமா..?

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தம் காரணமாக மூளைக்குச் செல்லும் நரம்புகளில் ரத்த ஓட்டம் தடைபட்டு, அதன் காரணமாக ஸ்ட்ரோக் ஏற்படும் நிலையில் மூளையில் படங்களை புரிந்து உணரும் தன்மை பாதிக்கப்படலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆரோக்கியமற்ற வாழ்வியல் பழக்க வழக்கங்கள், துரித வாழ்க்கை முறை, மன நெருக்கடி போன்ற பல்வேறு காரணங்களால் இன்றைக்கு இளம் வயதினரையும் பாதிக்கக்கூடிய பரவலான பிரச்சனைகளில் ஒன்றாக உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது. இந்த பிரச்சனையால் உடல் நலன் பல வகைகளில் பாதிக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

குறிப்பாக உயர் ரத்த அழுத்த பிரச்சனையின் எதிரொலியாக கண்களுக்கு செல்லக்கூடிய நுண்ணிய நரம்புகள் மெலிவடைந்து ரத்த ஓட்டம் தடைபடுவதன் காரணமாக கண் பார்வை பாதிக்கப்படலாம். இந்த பிரச்சனைக்கு பெயர்தான் ஹைப்பர் டென்சிவ் ரெட்டினோபதி என்று அழைக்கப்படுகிறது.

உயர் ரத்த அழுத்தம் காரணமாக கண்களுக்கு எந்தெந்த வகைகளில் பாதிப்பு ஏற்படும் :

கண் கருவிழி திரை பகுதிக்கு பின்னால் உள்ள மெல்லிய தசைகளை உயர்த்த அழுத்தம் பாதிக்கக்கூடும். இதனால் கண்களில் கசிவு ஏற்பட்டு, மங்கலான பார்வை மற்றும் முற்றிலுமான பார்வை இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். கருவிழிக்கு ரத்த ஓட்டம் தடைபடும்போது முற்றிலுமாக பார்வை குறைபாடு ஏற்படும்.

ஸ்ட்ரோக் மற்றும் கண் பார்வை பாதிப்பு : 

உயர் ரத்த அழுத்தம் காரணமாக மூளைக்குச் செல்லும் நரம்புகளில் ரத்த ஓட்டம் தடைபட்டு, அதன் காரணமாக ஸ்ட்ரோக் ஏற்படும் நிலையில் மூளையில் படங்களை புரிந்து உணரும் தன்மை பாதிக்கப்படலாம்.

அறிகுறிகள் மற்றும் சிகிச்சை : 

பொதுவாக ஹைப்பர் டென்சிவ் ரெட்டினோபதி பிரச்சனைக்கு பெரிய அளவில் அறிகுறிகள் எதுவும் தென்படாது. வழக்கமான கண் பரிசோதனை மூலமாகவே இந்த பாதிப்பை தெரிந்து கொள்ள முடியும். அதே சமயம் இரத்த அழுத்தம் மிகத் தீவிரமானதாக இருந்தால் மங்கலான பார்வை மற்றும் தலைவலி ஏற்படக்கூடும்.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதன் மூலமாக தான் ரெட்டினோபதி பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். உப்பின் அளவை குறைப்பது, உடற்பயிற்சி செய்வது, தியானம் அல்லது யோகா செய்வது போன்ற நடவடிக்கைகளின் மூலமாக உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க முடியும்.
சர்க்கரை நோய் பாதிப்பு அல்லாத பெரியவர்களில் 10 சதவீத நபர்களுக்கு ரெட்டினோபதி பாதிப்பு இருப்பது தெரிய வருகிறது. உடலில் அடுத்த கட்டமாக முக்கிய உறுப்புகள் செயலிழப்பதன் அறிகுறியாகவும் ரெட்டினோபதி பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஸ்டோக் ஹார்ட் அட்டாக் மற்றும் இதய நோய் பிரச்சினைகள் வருவதற்கான அறிகுறியாக இது அறியப்படுகிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்து நார்ச்சத்து மிகுதியான உணவுகளை எடுத்துக் கொள்வது நல்ல பலனை குறிப்பாக காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஹைப்பர் டென்சிவ் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு இன்னும் பல காரணங்கள் இருந்தாலும், உரிய காலத்தில் கண்டறிந்து, துரிதமாக சிகிச்சைகளை மேற்கொள்வதே பெருமளவிலான பாதிப்புகளை தடுக்க உதவும்.
First published:

Tags: Eye Problems, Eyes, High Blood Pressure