ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Hand Sanitiser : சானிடைசர் பயன்படுத்தும் அளவு முறை என்ன..? எப்போதெல்லாம் பயன்படுத்தலாம்..? WHO பகிர்ந்துள்ள செய்ய வேண்டியவை , செய்யக் கூடாதவை

Hand Sanitiser : சானிடைசர் பயன்படுத்தும் அளவு முறை என்ன..? எப்போதெல்லாம் பயன்படுத்தலாம்..? WHO பகிர்ந்துள்ள செய்ய வேண்டியவை , செய்யக் கூடாதவை

கிருமிநாசினி

கிருமிநாசினி

உலக சுகாதார அமைப்பு சானிடைசரை எப்படி , எப்போது பயன்படுத்த வேண்டும் , செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை போன்ற பல உதவிகரமான குறிப்புகளை பகிர்ந்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதில் சானிடைசர்களுக்கும் முக்கிய இடம் உண்டு. பெரும்பாலான மக்களுக்கு இதை தடவிக்கொள்வதால் கொரோனாவிலிருந்து தப்பித்துவிட்டோம் என்கிற பெரும் நம்பிக்கையை அளிக்கிறது. உங்களுக்காகவே உலக சுகாதார அமைப்பு சானிடைசரை எப்படி , எப்போது பயன்படுத்த வேண்டும் , செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை போன்ற பல உதவிகரமான குறிப்புகளை பகிர்ந்துள்ளது. அதில்...

  சானிடைசர் எவ்வளவு அளவு கொண்டு தடவ வேண்டும்..?

  சானிடைசர் உள்ளங்கையில் வைத்து கை முழுவதும் தேய்த்து தடவ வேண்டும். 20-30 நொடிகள் தேய்க்க வேண்டும். சானிடைசர் காய்ந்து போகும் வரை தேய்க்க வேண்டும்.

  ஆல்கஹால் அடங்கிய சானிடைசர் பாதுகாப்பானதா..?

  ஆல்கஹால் அடங்கிய சானிடைசர் எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது என இன்ஸ்டாகிராம் போஸ்டில் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. குறைந்த அளவு ஆல்கஹாலே பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான பொருட்கள் எமொலியன்ட் அதிகம் கொண்டுள்ளது, இது சரும வறட்சியை தடுக்க உதவும்.

  சானிடைஸர் (கோப்புப்படம்)

  எத்தனை தடவைக்கு ஒரு முறை சானிடைசர் தடவலாம்..?

  ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர் ஆண்டிபயாடிக் எதிர்ப்பை உருவாக்காது என்று WHO கூறுகிறது. "பிற கிருமி நாசினிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் போல் இல்லாமல், நோய்க்கிருமிகள் (தீங்கு விளைவிக்கும் கிருமிகள்) ஆல்கஹால் சார்ந்த சானிடைசர்களுக்கு எதிர்ப்பை வளர்ப்பதாகத் தெரியவில்லை." எனவே, ஹேண்ட் சானிடிசர்களை அடிக்கடி பயன்படுத்துவது பாதுகாப்பானது.

  வீட்டை கொரோனா வைரஸிடமிருந்து பாதுகாக்க கிருமிநாசினிகளை அதிகம் பயன்படுத்துகிறீர்களா..? கெமிக்கல் ஆபத்து என எச்சரிக்கும் மருத்துவர்கள்..!

  பொதுவெளியில் வைத்திருக்கும் சானிடைசர்களை பயன்படுத்துவதால் தொற்று வருமா..?

  இல்லை, என WHO கூறுகிறது. “நீங்கள் உங்கள் கைகளை சுத்தப்படுத்திய பிறகு, பாட்டிலில் இருந்திருக்கக்கூடிய எந்த கிருமிகளையும் அழிக்கிறீர்கள். எல்லோரும் ஒரு பொது இடத்தில் சானிடைசரைப் பயன்படுத்தினால்… அங்குள்ள பொருட்களில் கிருமிகளின் ஆபத்து குறைவாக இருக்கும், மேலும் அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்கும். அந்த இடமும் பாதுகாப்பானதாக இருக்கும் ”.

  அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் அல்லது கையுறைகளை அணிதல் இவற்றில் எது சிறந்தது..?

  கையுறைகளை அணிவது கிருமிகளை ஒரு மேற்பரப்பில் இருந்து மற்றொரு மேற்பரப்பிற்கு மாற்றும் அபாயத்தை ஏற்படுத்தும். அவற்றை அகற்றும்போது உங்கள் கைகளையும் மாசுபடுத்தலாம். நீங்கள் கையுறைகளை அணிந்திருந்தால், அவற்றை அகற்றிய பின் உங்கள் கைகளையும், கையுறைகளையும் சுத்தம் செய்வது அவசியம். “ கையுறைகள் அணிந்திருந்தாலும் கைகளை சுத்தம் செய்து கழுவுதல் அவசியம்.எனவே கையுறைகள் கைக்கழுவதற்கான மாற்றுவழி அல்ல. சுகாதார ஊழியர்கள் கூட குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டுமே கையுறைகளை அணிவார்கள், ”என்று WHO குறிப்பிடுகிறது.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Covid-19, Hand Sanitizer, WHO