H3N2 Influenza Symptoms : டெல்லி, சென்னை போன்ற பெரும் நகரங்களில் மர்ம காய்ச்சலின் தாக்க அதிகரித்துள்ளது. இது, H3N2 இன்ஃப்ளூயன்ஸா என மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். H3N2 இன்ஃப்ளூயன்ஸா "ஹாங்காங் காய்ச்சல்" என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் ஆகும். இது சுவாச நோயை ஏற்படுத்துகிறது.
புது தில்லியில் H3N2 இன்ஃப்ளூயன்ஸா A வகை தொற்றுக்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர, கடுமையான குளிரிலிருந்து வெப்பத்திற்கு வானிலை மாறும் போதும் காய்ச்சல் அறிகுறிகள் ஏற்படலாம்.
H3N2 இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகள் என்ன?
காய்ச்சல், இருமல், தொண்டை புண், தொண்டை கரகரப்பு, மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கு அடைத்தல், உடல் வலி, தலைவலி, குளிர் மற்றும் சோர்வு ஆகியவை H3N2 இன்ஃப்ளூயன்ஸாவின் பொதுவான அறிகுறிகளாகும். சில சமயங்களில், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். இந்த பொதுவான அறிகுறிகள் ஒரு வாரத்திற்கு அல்லது அதற்கு மேலும் நீடிக்கலாம். எனவே, மருத்துவர்களை அணுகுவது நல்லது.
இதற்கு எப்படி சிகிச்சையளிப்பது?
H3N2 காய்ச்சல் ஏற்பட்டால், நன்றாக ஓய்வு எடுப்பது மிகவும் அவசியம். அத்துடன், திரவ நிலையில் இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். காய்ச்சல் மற்றும் உடல் வலியைக் குறைப்பதற்கு அசெட்டமினோஃபென் அல்லது இப்யூபுரூஃபன் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளவும்.
Also Read | மருந்துகளுக்கு கட்டுப்படாமல் விடாது துரத்தும் சளி மற்றும் காய்ச்சல் : காரணம் என்ன..?
H3N2 இன்ஃப்ளூயன்ஸாவின் அறிகுறிகள் கடுமையாக இருந்தால், ஒசெல்டமிவிர் மற்றும் ஜானமிவிர் போன்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். கடுமையான அதிகுறிகள் நீடித்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.
H3N2 இன்ஃப்ளூயன்ஸாவில் இருந்து எப்படி உங்களை பாதுகாப்பது?
H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்றை தடுக்க, ஆண்டுதோறும் தவறாமல் காய்ச்சல் தடுப்பூசியை போட்டுக்கொள்வது, சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளை தவறாமல் கழுவுதல், நோய்வாய்ப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பது, தும்மும்போது அல்லது இருமும்போது வாய் மற்றும் மூக்கை மூடுவது, மக்கள் கூட்டமான இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது, வெளியில் செல்லும் பொது மாஸ்க் போடுவது, அனாவசியமாக வெளியில் செல்வதை தவிர்ப்பது போன்ற சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.
இது கொரோனா போன்று பரவக்கூடிய நோயா?
H3N2 இன்ஃப்ளூயன்ஸா வேகமாக மற்றவர்களுக்கு பரவும். H3N2 வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் பேசும்போது, இருமல் அல்லது தும்மும்போது வெளியாகும் நீர்த்துளிகள் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிமையாக பரவும். கொரோனாவை போல வைரஸால் மாசுபட்ட மேற்பரப்பைத் தொட்டபின்னர், கைகளை சுத்தம் செய்யாமல் ஒருவர் வாய் அல்லது மூக்கைத் தொடுவதன் மூலமும் இது பரவுகிறது. கர்ப்பிணிப் பெண்கள், இளம் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே இதயம், சர்க்கரை மற்றும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona safety, Fever, Health Checkup