முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / H1N1 வைரஸால் உருவாகும் பன்றி காய்ச்சலின் அறிகுறிகள் என்ன..? எப்படி பரவுகிறது..?

H1N1 வைரஸால் உருவாகும் பன்றி காய்ச்சலின் அறிகுறிகள் என்ன..? எப்படி பரவுகிறது..?

காய்ச்சல்

காய்ச்சல்

பொதுவாக ஸ்வைன் ஃப்ளூ என்று குறிப்பிடப்படும் H1N1 வைரஸ் காய்ச்சல் அதாவது பன்றி காய்ச்சல் ஒரு தொற்று சுவாச நோய் மற்றும் மக்களுக்கு பருவகால காய்ச்சல் அறிகுறிகளை உருவாக்குகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொதுவாக ஸ்வைன் ஃப்ளூ என்று குறிப்பிடப்படும் H1N1 வைரஸ் காய்ச்சல் அதாவது பன்றி காய்ச்சல் ஒரு தொற்று சுவாச நோய் மற்றும் மக்களுக்கு பருவகால காய்ச்சல் அறிகுறிகளை உருவாக்குகிறது. முதன் முதலில் 2009ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட இந்த காய்ச்சல் swine influenza வைரஸ்களால் பாதிக்கப்பட்ட பன்றிகள் அல்லது சுற்றுச்சூழலுடன் மனிதர்கள் தொடர்பு கொள்ளும் போது பரவுகிறது.

இந்த வைரசால் பாதிக்கப்படும் பன்றிகளுக்கும் மனிதர்களைப் போலவே காய்ச்சல் வரும். H1N1 ஃப்ளூ வைரஸ், பன்றிகள், பறவைகள் மற்றும் மனிதர்களிடையே பொதுவாக பரவும் பல காய்ச்சல் வைரஸ்களின் மரபணுக்களால் ஆனது. வழக்கமான காய்ச்சலை போலவே swine flu-வும் நுரையீரல் தொற்று, நிமோனியா மற்றும் பிற சுவாசப் பிரச்சனைகள் போன்ற சில தீவிர நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதால் அறிகுறிகள் மற்றும் அதை சமாளிக்க பயனுள்ள தீர்வுகளை தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

H1N1 வைரஸ் எப்படி பரவுகிறது.?

பன்றி காய்ச்சல் H1N1 வைரஸால் ஏற்படுகிறது. நம் மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரலில் உள்ள செல்களை H1N1 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் முதன்மையாக பாதிக்கிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நபரின் இருமல் அல்லது தும்மலில் இருந்து வரும் நீர்த்துளிகள் அல்லது அவர்கள் தொட்ட ஒரு பொருள் அல்லது பயன்படுத்திய மேற்பரப்பிலிருந்து நம் கண்கள், மூக்கு அல்லது வாய்க்கு நேரடியாக வைரஸ் பரவும் போது வைரஸ் நம் உடலில் எளிதாக நுழைகிறது.

சிறிய சிறுநீரக கற்களை அலட்சியம் செய்வதால் பெரும் பாதிப்புகள் ஏற்படலாம் - ஆய்வில் தகவல்!

பன்றிகள் மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட பன்றி இறைச்சியை உண்பதன் மூலமாகவோ நமக்கு பன்றிக்காய்ச்சல் வரும் என்று தவறாக நம்பப்படுகிறது. ஆனால் இது பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவது இல்லை. மாறாக இந்நோய் பாதிக்கப்பட்ட மனிதர்களிடமிருந்து மட்டுமே பிறருக்கு பரவுகிறது.

H1N1 வைரஸின் சில பொதுவான அறிகுறிகள்..

ஜலதோஷம், சளி, தொண்டை புண், மூக்கு ஒழுகுதல், அதிக காய்ச்சல், சிவந்த மற்றும் அரிக்கும் கண்கள், உடல் வலி, இருமல், தலைசுற்றல், மூச்சு திணறல், வாந்தி,குளிரால் நடுக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும்.

H1N1 வைரஸ் பாதிப்பை சமாளிக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்:

வீட்டிலேயே இருக்க வேண்டும்: H1N1 வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் உடல்நிலை சரியில்லை என்றால் எப்போதும் வீட்டிலேயே இருப்பது நல்லது. இது பிறருக்கு எளிதில் பரவ கூடியது என்பதால், காய்ச்சல் குணமாகும் வரை வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டும்.
கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்: பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் குறிப்பிட்ட இடைவெளியில் கைகளை நன்றாக மற்றும் அடிக்கடிவும் கழுவுவதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். குறிப்பாக உணவு உண்பதற்கு முன் கைகளை நன்கு கழுவ வேண்டும்.
இருமல் மற்றும் தும்மல் : பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு அடிக்கடி இருமல் மற்றும் தும்மல் வரும். எனவே கைகள் அசுத்தமாவதை தவிர்க்க பயன்படுத்தும் கைக்குட்டை மற்றும் டிஷ்யூக்களை அடிக்கடி மாற்றவும்.
நிறைய தண்ணீர்.. H1N1 வைரஸ் பாதிப்பின் போது ஏற்படும் நீரிழப்பைத் தவிர்க்க ஒருவர் நிறைய திரவங்களை குடிக்க வேண்டும். சூடான சூப்கள், தண்ணீர், புதிய பழங்கள் மற்றும் காய்கறி சாறுகள் உள்ளிட்ட நாள் முழுவதும் ஹைட்ரேட்டாக இருக்க உதவும் பொருட்களை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.
கூட்டத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்: முடிந்த வரை கூட்டத்திலிருந்து விலகி இருக்க வேண்டும். காய்ச்சலினால் ஏற்படும் சிக்கல்கள் அதிக அளவில் இருந்தால் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் நெரிசலான மற்றும் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
First published:

Tags: Fever, Flue, Virus