ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

PCOS பாதிப்பு பெண்களை மலட்டுத்தன்மையாக்குகிறதா..? உண்மை என்ன..?

PCOS பாதிப்பு பெண்களை மலட்டுத்தன்மையாக்குகிறதா..? உண்மை என்ன..?

PCOS பாதிப்பு

PCOS பாதிப்பு

புள்ளிவிவரங்களின்படி நாட்டில் சுமார் 9%-க்கும் அதிகமான இளம் பெண்கள் PCOS-ஆல் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். PCOS ஏற்படுத்தும் அறிகுறிகளில் எடை அதிகரிப்பது, எளிதில் எடையை குறைக்க முடியாமல் அவதிப்படுவது, சீரற்ற மாதவிடாய் சுழற்சி, முகம் அலல்து மார்பு பகுதிகளில் முடி வளர்ச்சி, முகப்பருக்கள் உள்ளிட்டவை முக்கியமானவை.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

PCOS எனப்படும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பெண்களை பாதிக்கும் ஒரு ஹார்மோன் கோளாறு ஆகும். சமீப காலமாக பெண்களிடையே காணப்படும் ஒரு பொதுவான சிக்கலாக PCOS மாறி இருக்கிறது.

புள்ளிவிவரங்களின்படி நாட்டில் சுமார் 9%-க்கும் அதிகமான இளம் பெண்கள் PCOS-ஆல் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். PCOS ஏற்படுத்தும் அறிகுறிகளில் எடை அதிகரிப்பது, எளிதில் எடையை குறைக்க முடியாமல் அவதிப்படுவது, சீரற்ற மாதவிடாய் சுழற்சி, முகம் அலல்து மார்பு பகுதிகளில் முடி வளர்ச்சி, முகப்பருக்கள் உள்ளிட்டவை முக்கியமானவை. இனப்பெருக்க வயதுடைய பெண்களுக்கு ஹார்மோன் கோளாறால் ஏற்படும் இந்த PCOS பாதிப்புக்கு தகுந்த சிகிச்சை பெறாவிட்டால் நாளடைவில் அதீத உடல் பருமன், இதய நோய்கள், எண்டோமெட்ரிக் கேன்சர், நீரிழிவு நோய், ஹைப்பர் இன்சுலினீமியா போன்ற கடும் நிலைகள் ஏற்பட கூடும்.

எனினும் PCOS பாதிப்புகளை பற்றி பல தவறான கருத்துக்களும் மக்கள் மத்தியில் நிலவி வருகின்றன. அதில் முக்கியமான ஒன்று தான் PCOS பாதிப்பை எதிர்கொள்ளும் அனைத்து பெண்களும் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படுவார்கள் என்பது. ஆனால் இது உண்மையா என்ற கேள்விக்கு பிரபல மகப்பேறு மருத்துவர் டாக்டர் மான்சி வர்மா பதில் அளித்துள்ளார்.

இல்லை, இது முற்றிலும் தவறான கருத்து என்று குறிப்பிட்டிருக்கும் மான்சி வர்மா, " PCOS பாதிப்பு பெண்களை மலட்டுத்தன்மையாக்குவதில்லை. மாறாக இது ஓவலேஷன் எனப்படும் அண்டவிடுப்பு நிகழ்வு எப்போது இருக்கும் என்பதை கண்காணிப்பதை கடினமாக்குகிறது" என்று குறிப்பிட்டு உள்ளார்.

தவிர PCOS-ன் விளைவுகள் கருத்தரிப்பதில் சிரமம் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வளர்சிதை மாற்ற சிக்கல்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிப்பதன் மூலம் கர்ப்பத்தை பாதிக்கும். இதனால் கருவிலிருக்கும் குழந்தையின் ஆரோக்கியமும் ஆபத்தில் ஆழ்த்தப்படும் என்கிறார்.

Ovulation அதாவது அண்டவிடுப்பு என்பது கருமுட்டையிலிருந்து முதிர்ந்த முட்டையை வெளியாகும் செயல்முறையாகும். இது வெளியான பிறகு, முட்டை ஃபலோபியன் குழாயின் கீழே நகர்ந்து 12 முதல் 24 மணி நேரம் வரை அங்கேயே இருக்கும். இந்த நேரத்தில் வைத்து கொள்ளப்படும் தாம்பத்தியம் கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கும். PCOS கொண்ட பெண்களுக்கு பெரும்பாலும் சீரற்ற மாதவிடாய் சுழற்சி இருப்பதன் காரணமாக இந்த ஓவலேஷன் பீரியட்டை சரியாக கணிக்க முடியாமல் போகிறது. இதனால் கருவுறுதல் தாமதமாகும் என்பதே மருத்துவர் மான்சி வர்மாவின் கூற்றாக இருக்கிறது.

Intimate Hygiene : இன்டிமேட் வாஷ் தயாரிப்புகளை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

கர்ப்ப காலத்தில் என்ன சிக்கல்களை சந்திக்க நேரிடும்?

குழந்தை முன்கூட்டியே பிறப்பது, கர்ப்பகாலத்தில் ஏற்படும் நீரிழிவு, கர்ப்ப கால உயர் ரத்த அழுத்தம், கருச்சிதைவு அபாயம்.

அப்படி என்றால் PCOS உள்ள பெண்கள் வெற்றிகரமாக கருத்தரிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

அவர்கள் செய்ய வேண்டியது தங்களது அன்றாட உணவு மற்றும் வழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். தங்களது டயட்டில் எப்போதுமே ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கிய உணவுகளை மட்டுமே சேர்ப்பது, தினசரி வொர்கவுட்கள் செய்வது, கருமுட்டை வெளிப்படுவதை கண்காணிப்பது குறிப்பாக தகுந்த உடல் எடையை பராமரிப்பதை உறுதி செய்வது ஆகியவை கருத்தரிக்க உதவும்.

PCOS உள்ள பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்ஸ், ஒயிட் பிரட், நன்கு வறுத்த உணவுகள், சோடாக்கள், எனர்ஜி டிரிங்ஸ், சர்க்கரை பானங்கள், டீக்ஸ் & ஹாம்பர்கர்ஸ் & டீக்ஸ் போன்ற சிவப்பு இறைச்சி மற்றும் ஏற்கனவே ஆரோக்கியமற்றது என்று பரவலாகக் கூறப்படும் பல உணவுகளை தவிர்க்க வேண்டும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: PCOS, Pregnancy