முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இளம் வயதிலேயே முதுமை தோற்றம் வருவது குறைபாடா..? ஆரம்பகால அறிகுறிகள் எப்படி இருக்கும்..?

இளம் வயதிலேயே முதுமை தோற்றம் வருவது குறைபாடா..? ஆரம்பகால அறிகுறிகள் எப்படி இருக்கும்..?

Werner syndrome

Werner syndrome

இந்த குறைபாடு கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்க தொடங்கும் பொழுது, வயதாவதால் ஏற்படக்கூடிய பல்வேறு தொந்தரவுகளை இளம் வயதிலேயே எதிர்கொள்ள நேரிடும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரு சிலருக்கு இளம் வயதிலேயே முதியவர் போல காணப்படுவார்கள். ஏஜிங் சைன்ஸ் என்று கூறப்படும் வயதானவர்களுக்கு சருமத்தில் காணப்படும் சுருக்கம் கண்கள் இடுங்கி இருப்பது உள்ளிட்ட அறிகுறிகள் இளம் வயதிலேயே சிலருக்குத் தோன்றும். இதற்கு வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் ஆகியவை காரணமாக இருந்தாலுமே, இது மரபு வழியாக தோன்றக்கூடிய ஒரு குறைபாடாகும். விரைவாக முதுமையடைவதற்கான அறிகுறிகள் உள்ளது தோற்றத்தில் மற்றும் சருமத்தில் தெரிவதன் பெயர் வெர்னர் சிண்ட்ரோம் ஆகும்.

வெர்னர் சிண்ட்ரோம் என்பது, சாதாரணமாக ஒரு நபருக்கு தோன்றக்கூடிய வயதாகும் அறிகுறிகளை விட மிக விரைவில் அறிகுறிகள் தோன்றும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, பருவ வயது அடையும் வரை சாதாரணமாக வளர்ச்சி காண்பார்கள். அதன் பின்னர், தீவிரமாக அவர்களுக்கு வயதான தோன்றம் ஏற்படத் தொடங்கும். 20களின் தொடக்கத்திலேயே இந்த அறிகுறிகள் தெரியத் துவங்கும்.

வெர்னர் சிண்ட்ரோமுடன் தொடர்புடைய அறிகுறிகள் : 

* வழக்கமான உயரத்தை விட கொஞ்சம் குறைவு

* முடி இழப்பு, நரை மற்றும் சொட்டை விழுதல்

* குரல் கரகரப்பாக மாறுவது

* சருமம் கடினமாக மாறுதல்

* பருமனான உடல்பகுதி ஆனால் மெல்லிய கைகள் மற்றும் கால்கள்

* முகத்தில் அசாதாரணமான மாற்றங்கள்

வெர்னர் சிண்ட்ரோம் பாதிப்பு இருந்தால் என்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்படலாம்?

இந்த குறைபாடு கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்க தொடங்கும் பொழுது, வயதாவதால் ஏற்படக்கூடிய பல்வேறு தொந்தரவுகளை இளம் வயதிலேயே எதிர்கொள்ள நேரிடும். உதாரணமாக ரத்தக் குழாய்கள் கடினமாவது, நீரிழிவு நோய், ஸ்கின் அல்சர், கேட்டராக்ட் ஆஸ்டியோபோரோஸிஸ் என்று கூறப்படும் எலும்புகள் பலவீனமடைதல், மகப்பேறு சார்ந்த பிரச்சனைகள் ஆகியவை ஏற்படலாம். அதுமட்டும் இல்லாமல் வெர்னர் சிண்ட்ரோம் பாதிப்பு இருக்கும் நபர்களுக்கு கேன்சர் ஏற்படக்கூடிய அபாயம் அதிகமாக இருக்கிறது. 40 அல்லது 50 வயதுகளில் இருப்பவர்கள் எதிர்கொள்ளும் பொதுவான உடல்நல பிரச்சனைகள் 20 வயதுகளில் இருப்பவர்களுக்கு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெர்னர் சிண்ட்ரோம் என்பது மரபு வழியாக பெறப்படும் ஆட்டோசமல் ரிசசிவ் பேட்டர்ன் என்பதாகும். WRN என்ற மரபணுவில் பிறழ்வு இருப்பதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இந்த மரபணு வெர்னர் புரதம் உருவாக்கத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்குகிறது. இந்த புரதம் தான் மரபணுவில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வது மட்டுமல்லாது பல்வேறு பிரச்சனைகளை சரி செய்கிறது.

Also Read : எந்த வயதில் ஜிம்மில் சேர்வது நல்லது..? அதை எப்படி தெரிந்து கொள்வது..?

WRN பிறழ்வுகளால் ஏன் இந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பது பற்றி மருத்துவ ஆய்வாளர்களால் சரியாக கண்டறிய முடியவில்லை. வெர்னர் புரதத்தால் செல்களின் வளர்ச்சி பாதிப்படையும் மற்றும் வேகம் குறையும் என்று கூறியுள்ளனர். இந்த மாற்றம், மரபணுவில் சேதங்களை ஏற்படுத்தி, வளர்ச்சியில் பிரச்சனைகளை உண்டாக்கும். இதனால் சாதாரண செல்களின் செயல்பாடுகளில் குறைபாடு ஏற்பட்டு, உடல் ரீதியான பாதிப்புகள் தோன்றும்.

First published:

Tags: Disease, Health tips, Skin Disease