CoronaVirus : லேசானது முதல் தீவிரமான கொரோனா அறிகுறிகள் வரை..கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் இவைதான்..!

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் பதிவு மற்றும் அதன் அறிகுறிகள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

  • Share this:
இந்தியாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பெரும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசியை செலுத்தி வரும் மத்திய அரசு, இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பெரும்பாலும் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து மட்டுமே பரவுகிறது. இருமல், தும்மல் மற்றும் பேசும்போது காற்றில் பரவும் சுவாசத் துகள்கள் வழியாகவும் கொரோனா பரவுகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பதிவு மற்றும் அதன் அறிகுறிகள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பதிவு

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை பொறுத்தவரையில், சந்தேகம், வாய்ப்புள்ள நபர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என மூன்று நிலைகளில் பதிவு செய்யப்பட வேண்டும். இருமல், காய்ச்சல் மற்றும் உடல்வலி ஆகிய அறிகுறி உள்ளவர்கள், ஏற்கனவே தொற்று பாதிப்பு இருந்த இடத்தில் இருந்தவர்கள் கொரோனா தொற்றுக்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

கொரோனா பாதித்தவர்களுடன் உடன் இருந்தவர்கள், கொரோனா தொடர்பில் இருந்தவர்கள், அவர்களுக்கு சுவாச இழப்பு, சுவை இழப்பு ஆகியவை ஏற்பட்டால் கொரோனா தொற்று இருப்பதாக கருதப்பட்டு, அடுத்த கட்ட சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவார். மூன்றாவதாக, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர். பி.சி.ஆர் டெஸ்ட் உள்ளிட்ட சோதனைகள் வழியாக கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை எடுத்து வருபவர்கள் ஆவர்.



கொரோனா தொற்று மருத்துவ அறிகுறிகள்

* காய்ச்சல், இருமல், சோர்வு, தலைவலி, தொண்டை புண், குமட்டல் / வாந்தி, வயிற்றுப்போக்கு, மாற்றப்பட்ட மனநிலை

* சுவாச அறிகுறிகள் தோன்றுவதற்கு முந்தைய வாசனை இழப்பு, சுவை இழப்பு ஆகியவை பதிவாகியுள்ளன. கோவிட் தொற்று தீவிரத்தன்மை தொடங்குவதற்கு முன்பே சுவாச இழப்பு அதிகமானோருக்கு உள்ளது

* வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உடையவர்கள் வயிற்றுப்போக்கு, பசியின்மை, மயக்கம் மற்றும் காய்ச்சல் ஆகியவை இருக்காது. குழந்தைகளுக்கும் பெரியவர்களைப் போல அடிக்கடி காய்ச்சல் அல்லது இருமல் இருக்காது.



லேசான அறிகுறி உள்ளவர்கள்

லேசான அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளலாம். அருகில் உள்ள அரசு தனிமைப்படுத்துதல் மையம், சுகாதார மையம் ஆகியவற்றுக்கு சென்று உரிய ஆலோசனையின்பேரில் தங்கிக்கொள்ளலாம். ஒருவேளையில், மூச்சுவிடுவதில் சிரமம், கடுமையான காய்ச்சல் மற்றும் இருமல், தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கொரோனா செய்திகள் உங்களை மனப்பதற்றம் அடைய செய்கிறதா..? இனி இப்படி செய்யுங்கள்..!

60 வயதுக்கு மேலானவர்கள், இதயம் சார்ந்த பிரச்சனை, உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஏற்கனவே சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் தாமதிக்கக்கூடாது.

மிதமான அறிகுறி உள்ளவர்கள்

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுடன் இருந்தவர்கள் அல்லது தொற்றுக்கான அறிகுறி இருப்பவர்களுக்கு அடிப்படை மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ஆக்சிஜன் அளவை பரிசோதித்து, அதன் அளவு 90 -93 விழுக்காடுக்குள் இருந்தால் கொரோனா தனிமைப்படுத்துதல் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.



தீவிர கொரோனா நோயாளிகள்

* தீவிர கொரோனா தொற்று இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டும். பாராசிட்டமால் மற்றும் ஆன்டிடூசிவ்ஸுடன் சிகிச்சை தொடர வேண்டும்.

* யுவோலெமியாவைப் (euvolemia) பராமரிக்கவும், கடுமையான தொற்றிலும் இயல்பான நிலையில் இருந்தால் ஏற்கனவே இருக்கும் சிகிச்சை முறையை பின்பற்றலாம்.

* கடுமையான தொற்று மற்றும் சுவாசக்கோளாறு, ஹைபோக்ஸீமியா உள்ளவர்களுக்கு உடனடியாக ஆக்சிஜன் சப்போர்ட் கொடுக்க வேண்டும்.

இப்படி பண்ணா கொரோனா பரவும் ஆபத்து குறைவா? அப்போ டிரை பண்ணலாமே!

* கர்ப்பிணி பெண்களின் ஆக்சிஜன் அளவு 92 -96 விழுக்காடு இருந்தால், ஆக்சிஜன் உதவி கொடுக்க வேண்டும். மற்றவர்களுக்கு 90 விழுக்காடு இருக்கும்போது ஆக்சிஜன் உதவி வழங்கப்பட வேண்டும்.

* சுய நினைவு இழத்தல், உறுப்புகள் சேதமடைதல், நிலைத்தன்மை இழப்பு, கடுமையான சுவாசப் பற்றாக்குறை ஆகிய பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களுக்கு உடனடியாக இன்டூபேஷன் சிகிச்சை தொடங்கப்பட வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published: