18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தொற்றுக்கு எதிரான பூஸ்டர் டோஸாக போடப்படும் தடுப்பூசி பட்டியலில் மூக்கு வழியே செலுத்தப்படும், பாரத் பயோடெக்கின் இன்ட்ராநாசல் கோவிட்-19 தடுப்பூசிக்கு (intranasal Covid-19 vaccine - iNCOVACC) மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
முதற்கட்டமாக இந்த ஊசி இல்லாத தடுப்பூசி தனியார் மையங்களில் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் இன்ஸ்டிட்யூட்டின் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸ், ரஷ்யன் ஸ்புட்னிக் V மற்றும் பயோலாஜிக்கல் இ லிமிடெட்டின் Corbevax உள்ளிட்டவை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளாக Cowin போர்ட்டலில் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், iNCOVACC புதிதாக இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
நாட்டின் முதல் நாசி தடுப்பூசி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:
இது BBV154, நாவல் அடினோவைரஸ் வெக்டார்டு, கோவிட்-19க்கான இன்ட்ராநாசல் தடுப்பூசி ஆகும்.
இந்த நாசி வழி தடுப்பு மருந்து ஒரு பரந்த நோயெதிர்ப்பிற்கான மறுமொழியை தூண்டுவதாகவும் மற்றும் IgG, mucosal IgA மற்றும் T செல் ரெஸ்பான்ஸ்களை நியூட்ரலைஸிங் செய்வதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் கூறுகிறது.
மூக்கின் சளிச்சுரப்பியில் தொற்று ஏற்படும் இடத்தில் இருந்து இந்த தடுப்பு மருந்து தனது நோயெதிர்ப்பு திறனை தொடங்குகிறது. அதாவது தடுப்பூசி மூக்கில் கொடுக்கப்படுவதால் இது சளி சவ்வுகளில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. எனவே நோய் தொற்று மற்றும் பரவுதலை தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
இது இன்ட்ராநாசல் தடுப்பூசியாக இருப்பதால் மேல் மற்றும் கீழ் சுவாசக் குழாயில் லோக்கல் ஆன்டிபாடிகளை உருவாக்கலாம். இதனால் மேல் மற்றும் கீழ் சுவாசக் குழாயில் கொரோனா வைரஸ் தொற்றை இது தடுக்கிறது.
நாசல் ஸ்ப்ரே மூலம் தடுப்பு மருந்து வழங்கப்படுவதால், தற்போது கிடைக்கும் அனைத்து கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும் தேவைப்படும் ஊசிகள் மற்றும் சிரிஞ்ச்களின் தேவையை நீக்குகிறது. குறிப்பாக ஊசிகள் மற்றும் சிரிஞ்ச்களுடன் தொடர்புடைய காயங்கள் ஏற்படாது. எனவே குழந்தைகளுக்கும் இது ஏற்றது.
மற்ற தடுப்பூசிகளைப் போலல்லாமல் மூக்கின் வழியே இதை எளிதாக ஒருவருக்கு செலுத்தலாம். விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் விரைவில் CoWIN போர்ட்டலில் அப்டேட் செய்யப்படும்.
இந்த iNCOVACC தடுப்பு மருந்துக்கு கடந்த செப்டம்பர் 6 அன்று 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அவசரகால சூழ்நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டின் கீழ் Drugs Controller General of India-விடமிருந்து இருந்து ஒப்புதல் பெறப்பட்டது.
இதற்கிடையே BF.7 கோவிட் வேரியன்ட் பாதிப்புகள் நாட்டிலில் கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து விமானம் மற்றும் விமான நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் மாஸ்க் அணிவது மற்றும் சமூக இடைவெளி மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.