ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மருந்துச்சீட்டில் டாக்டர் என்ன எழுதிருக்காருனு புரியலையா..? இனி கூகுளே படிச்சு சொல்லும்..!

மருந்துச்சீட்டில் டாக்டர் என்ன எழுதிருக்காருனு புரியலையா..? இனி கூகுளே படிச்சு சொல்லும்..!

மருத்துவர்கள் வழங்கும் மருந்துச் சீட்

மருத்துவர்கள் வழங்கும் மருந்துச் சீட்

Ai தொழில்நுட்பத்தில் இயங்கும் செயலி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே இந்த செயலி உருவாக்கப்பட்டு இருந்தாலும் தற்பொழுது ஆய்வு நிலையில்தான் இருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மருத்துவர்கள் வழங்கும் மருந்துச் சீட்டில் என்ன இருக்கிறது என்பது கிட்டத்தட்ட அனைவருக்கும் புரிவதே இல்லை. ஏதோ கிறுக்கி கொடுத்து இருக்கிறார் என்று நினைக்கும் பொழுது மருந்து கடைக்காரர்கள் என்ன மருந்து என்பதை சரியாக கொடுத்து விடுகிறார்கள். எவ்வளவோ முயற்சி செய்தும் பல ஆண்டுகளாக மருத்துவர்கள் எழுதுவது என்னவென்று புரிவதில்லை. மற்றொரு பக்கம் மருந்தங்ககளுக்கே மருந்து சீட்டின் உள்ளடக்கம் புரிவதில்லை. ஆனால் இதற்கான தீர்வை, கூகுள் நிறுவனம் சமீபத்தில் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

கூகுள் ஃபார் இந்தியா என்ற கான்ஃபரன்ஸில் மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் சீட்டில் என்ன இருக்கிறது என்று என்பதை எளிதில் புரிந்து கொள்ள உதவுவதற்காக ஒரு செயற்கை நுண்ணறிவு புரோகிராமை உருவாக்கி வருவதாகவும் அது விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் பலவிதமான தொழில்நுட்ப அம்சங்கள், செயலிகள் மற்றும் மேம்பாடுகளை செய்து வருகிறது. இதனால் பலருக்கும் வேலை பளு குறைந்து, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு என்பது வருங்காலத்தின் மிகப்பெரிய அங்கம் வகிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இந்நிலையில் அவசியமான விஷயங்களுக்கு கூட செயற்கை நுண்ணறிவு பெரிய அளவில் பயன்படும் என்பதை கூகுள் நிறுவனம் சமீபத்தில் நிரூபித்துள்ளது. மருத்துவர்கள் கையெழுத்து யாருக்கும் புரிவதில்லை என்பது நீண்ட கால குறையாக இருந்தது. சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட மருந்து சீட்டில் என்ன இருக்கிறது என்பது மருந்தகங்களுக்கு கூட புரியவில்லை. அதுமட்டுமில்லாமல் தோராயமாக ஏதாவது ஒரு மருந்தை கொடுக்கும் நிலையம், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளும் நடந்திருக்கின்றன. அதைத் தவிர்ப்பதற்காக புது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கூகுள் உருவாக்கி வருகிறது.

Ai தொழில்நுட்பத்தில் இயங்கும் செயலி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே இந்த செயலி உருவாக்கப்பட்டு இருந்தாலும் தற்பொழுது ஆய்வு நிலையில்தான் இருக்கிறது. இது அனைவரின் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்வதற்கு இன்னும் காலம் ஆகும்.

Also Read : குறைந்த ரத்த அழுத்தம் என்றால் என்ன..? அறிகுறிகள் மற்றும் சிக்கல்கள்!

இந்த செயலியின் மூலம் மருத்துவரின் பிரிஸ்கிரிப்ஷனை புகைப்படம் எடுத்த உடனே அதில் என்ன எழுதி உள்ளது என்பது ‘text’ ஆகக் காண்பிக்கும் என்று நிறுவனம் தெரிவித்தது. மருந்துத் துறை மற்றும் ஹெல்த்கேர் துறையில் பணியாற்றுபவர்களுக்கு மருத்துவர்கள் என்ன எழுதி இருக்கிறார்கள் என்று மிகவும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் நாங்கள் ஒரு மாடலை, செயற்கை நுண்ணறிவாக உருவாக்கி வருகிறோம் என்று கூகுள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

கையால் எழுதப்பட்ட அனைத்து மருத்துவ ஆவணங்களையும் இந்த தொழில்நுட்ப உதவியுடன் டிஜிட்டல் கோப்புகளாக பயன்படுத்த முடியும். எனவே இது அனைவருக்குமே பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும் இந்த Ai மூலம் பெறப்படும் முடிவுகளை வைத்து எந்த முக்கியமான முடிவுகளையும் எடுக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்தியிருக்கிறது.

First published:

Tags: Doctor, Google, Handwriting