இன்றைய நல்ல தூக்கம் நாளைய முதுமை காலத்தை இளமையாக்கும் : ஆய்வு சொல்லும் தகவல்

தூக்கமின்மை , மன அழுத்தம் போன்ற காரணங்கள் உங்கள் நினைவுகளை , ஞாபகங்களை குறைத்துக் கொண்டே வருகிறது

news18
Updated: May 21, 2019, 11:34 PM IST
இன்றைய நல்ல தூக்கம் நாளைய முதுமை காலத்தை இளமையாக்கும் : ஆய்வு சொல்லும் தகவல்
தூக்கமின்மை , மன அழுத்தம் போன்ற காரணங்கள் உங்கள் நினைவுகளை , ஞாபகங்களை குறைத்துக் கொண்டே வருகிறது
news18
Updated: May 21, 2019, 11:34 PM IST
காலம் செல்ல செல்ல நம்முடைய ஞாபகத் திறன் குறைந்து கொண்டே வரும். 30 வயதைத் தாண்டிய சிலர் ஞாபக மறதி அதிகரித்துவிட்டாலே எனக்கு வயதாகிறது என்று சொல்லிக்கொள்வார்கள். ஆனால் இதை எதிர்கொள்ள வேண்டுமானால் நீங்கள் நன்குத் தூங்கி எழ வேண்டும் என்கிறது ஒரு ஆய்வு.

நியூரோசைக்கலாஜிகல் சொசைட்டி வெளியிட்ட ஆய்வில் தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற காரணங்கள் உங்கள் நினைவுகளை, ஞாபகங்களை குறைத்துக் கொண்டே வருகிறது என்கிறது.

அதுமட்டுமன்றி ஆய்வாளர்கள் இந்த ஆய்வின் மூலம் தூக்கம், வயது மற்றும் மனநிலை இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என உறுதியாக தீர்மானிக்கிறது.
ஆற்றலில் இருக்கும் நினைவுகள் அதாவது நிகழ்கால நினைவுகள் என்பது குறுகிய கால நினைவுகள்தான் என்கிறது. அவை சூழ்நிலைக்கு ஏற்ப கற்றுக்கொள்ளவும், திறமையை வளர்த்துக்கொள்ளவும், புரிதலுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தூக்கம், sleeping

அதேபோல் உங்கள் ஞாபகத் திறனின் ஆற்றலும் உங்கள் வயதும் தொடர்புடையது என்பதையும் உறுதி செய்கிறது. இதற்கு முன் வெளியிட்ட ஆய்வுகளில் இவை மூன்றும் தனித்தனியே நிகழ்கால ஞாபகத் திறனோடு தொடர்புடையது என கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் இதில் மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்றும் அதன் ஆற்றல் குறித்தும் ஆய்வு செய்து தொடர்பு படுத்தியுள்ளதாக இதன் ஆராய்ச்சியாளர் வெய்வெய் ஸாங் குறிப்பிடுகிறார்.
Loading...
வயது முதியவர்கள் அதிக மன அழுத்தத்தில் இருப்பார்கள். தூக்கமின்மையால் அவஸ்தைப்படுவார்கள். ஆனால் இளைஞர்கள் அவ்வாறு அல்ல. இதற்காகவே இரண்டு ஆய்வுகளை நடத்தியுள்ளது. அதில் 110 கல்லூரி மாணவர்களின் தூக்கம், மன நிலை மற்றும் அவர்களின் உறவுகள் நினைவுகளை ஆய்வு நடத்தியுள்ளது.

இரண்டாவது ஆய்வில் 21 முதல் 77 வயது கொண்ட 21 பேரிடம் ஆய்வு நடத்தியுள்ளது. அதில் வயதையும் அவர்களின் ஞாபகத் திறனையும் ஆய்வு செய்துள்ளது. அதில் அவர்களின் பதில்கள் ஒன்றோடு ஒன்றை தொடர்பு படுத்துவதாக இருந்துள்ளது.

எனவே நிம்மதியாக இன்று தூங்கி, அதிக மன அழுத்தத்தால் உடலை வருத்திக் கொள்ளாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் உங்களின் இன்றைய நிகழ்வுகள்

மேலும் இந்த ஆய்வு எதிர்கால ஆய்வுகளுக்கு ஒரு தொடக்கமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...