• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • நீரிழிவு நோயில் இருந்து தப்பிக்க இதய ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டுமா..? ஆய்வு தரும் புது தகவல்..!

நீரிழிவு நோயில் இருந்து தப்பிக்க இதய ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டுமா..? ஆய்வு தரும் புது தகவல்..!

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் நடுத்தர வர்க்கத்தினர் இதய ஆரோக்கியத்தை முறையாக பேணினால், டைப் 2 நீரிழிவு நோயில் இருந்து தற்காத்து கொள்ளலாம் என தெரியவந்துள்ளது.

  • Share this:
சுமார் 70 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், உலகின் நீரிழிவு நோயின் தலைநகரம் என இந்தியா அழைக்கப்படுகிறது. வயதானவர்கள் மட்டுமில்லாது இளைஞர்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இது மிகவும் கவலைக்குரிய தகவலாக உள்ளது. சரியான நேரத்தில் உடலைக் கவனித்துக் கொள்ளாவிட்டால், நீரிழிவு நோயால் சிக்கலான உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

குறிப்பாக, டைப் 2 நீரிழிவு நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றால் இதய ஆரோக்கியத்தை பேணுவது அவசியம் என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் நடுத்தர வர்க்கத்தினர் இதய ஆரோக்கியத்தை முறையாக பேணினால், டைப் 2 நீரிழிவு நோயில் இருந்து தற்காத்து கொள்ளலாம் என தெரியவந்துள்ளது. இதய ஆரோக்கியம் இருந்தால் வயதான பெரியவர்களுக்கூட டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என தெரிவித்துள்ள அந்த ஆய்வு, நடுத்தர வயதுடையவர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

டைப் 2 நீரிழிவு என்றால் என்ன?

இன்சுலின் புற எதிர்ப்பால் டைப் 2 நீரிழிவு நோய் உருவாகிறது. குடல், கல்லீரல் மற்றும் தசைகளில் உள்ள திசுக்கள் ரத்த ஓட்டத்தில் இருந்து குளுக்கோஸை எடுத்துக்கொள்வதற்கு இன்சுலின் முறையாக ரியாக்ட் செய்யாது. அப்போது, கணையப் பகுதிகளில் கூடுதல் இன்சுலின் சுரக்கிறது. இதுவும் நாளாக குறையும்போது டைப் 2 நீரிழிவை ஒருவர் எதிர்கொள்கிறார்.



கூடுதலாக இன்சுலின் சுரந்து உடலின் உயிரணுக்களுக்கு தேவையான குளுக்கோஸை ஒழுங்குப்படுத்துகிறது. காலப்போக்கில் ரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரை அளவுகள் பிற உடல் உறுப்புகளை சேதப்படுத்தும். இதனால், டைப் 2 நீரிழிவு நோய் அபாயம் அதிகரிக்கிறது. எளிய வாழ்க்கை முறை, டைப் 2 நீரிழிவில் இருந்து தப்பிக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது தொடர்பாக, டைப் 2 நீரிழிவு நோய் இல்லாத 5,993 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதிகமாக மது குடிப்பவர்களுக்கு எளிதில் கல்லீரல் பாதிப்பு - மருத்துவர்கள் எச்சரிக்கை!

ஆய்வில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் சராசரி வயது 69 ஆக இருந்தது. 58 விழுக்காடு பெண்களே இந்த ஆய்வில் பங்கேற்றவர்களாகவும் இருந்தனர். இதில், புகைப்பிடிப்பு, ரத்த அழுத்தம், உணவு முறை, வாழ்க்கை முறை என பல்வேறு அளவுகளில் 0 முதல் 12 மதிப்பெண்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.



மதிப்பெண்களின் அடிப்படையில், ஏழை, நடுத்தர மற்றும் பணக்காரர்கள் என 3 வகைகளாக அவர்கள் தரம் பிரிக்கப்பட்டனர். மூன்றிலும் கார்டியோவாஸ்குலர் பிரச்சனை இருப்பவர்கள் தனியாக வகைப்படுத்தப்பட்டனர். இதில் குறைவான கார்டியோ வாஸ்குலர் அபாயத்தை கொண்டிருப்பவர்கள் குறைவான ஆபத்தை மட்டுமே எதிர்கொள்கின்றனர். அதிக சி.வி.எச் பாதிப்பு உள்ளவர்கள் அதிக ஆபத்தை எதிர்கொள்வது ஆய்வின் முடிவில் தெரியவந்தது.

அதேநேரத்தில், இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாகவும், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தனிநபர் சிவிஹெச் அளவுகளின் அடிப்படையில் ஆய்வு வரையறுக்கப்பட்டிருப்பதாலும், இன்னும் கூடுதல் ஆய்வு தேவை என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: