• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மட்டும்தான் உடல் எடை அதிகரிக்க காரணமா?

கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மட்டும்தான் உடல் எடை அதிகரிக்க காரணமா?

மாதிரி படம்

மாதிரி படம்

உங்கள் மூளை பெரும்பாலும் கொழுப்புகளால் ஆனது மற்றும் ஒழுங்காக செயல்பட கொழுப்புகளின் நிலையான ஓட்டம் தேவைப்படுகிறது.

  • Share this:
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் அதிக உடல் பருமனை பெறுகிறார்கள். ஆனால், அதற்கு காரணம் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதால்தான் ஏற்படுகிறது என கருதுகின்றனர். மேலும் அதிக கொழுப்பு இதய பாதிப்பை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. இதன் காரணமாக உடல் எடை குறைப்பில் ஈடுபடுபவர்கள் குறைந்த கொழுப்பு அல்லது கொழுப்புகளே இல்லாத உணவுகளை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறாரகள். ஆனால், உண்மையில் கொழுப்பு உடல் எடையை அதிகரிக்கிறதா? என்றால் கட்டாயம் இல்லை என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழுப்புகள் உண்மையில் ஆரோக்கியமற்றவையா? அவை இதயத்தை பாதிக்கிறதா? போன்ற சந்தேகங்களுக்கு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. கொழுப்பை சாப்பிடுவது உங்களை கட்டாயம் குண்டாக மாற்றாது. உண்மையில், குறைந்த கொழுப்பு உணவுகள் எடை இழப்புக்கு அல்லது அதிக கொழுப்பு உணவுகளுடன் ஒப்பிடும்போது நோய் அபாயத்தை குறைக்க உதவுவதாக ஆராய்ச்சி காட்டுகிறது. ஆனால் தவறான வகை கொழுப்பை சாப்பிடுவது அல்லது அதிக கொழுப்பை சாப்பிடுவது உங்கள் எடையை கட்டாயமாக அதிகரிக்கும்.

நம்முடைய தற்போதைய இதய ஆரோக்கியமான உணவு கலாச்சாரத்தில் கொழுப்புகளுக்கு ஒரு கெட்ட பெயர் இருந்தாலும், அவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டாம். அவற்றை சரியான அளவு மற்றும் தரத்தில் உட்கொள்ளப்பட வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.



இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் கூறியதாவது, "கொழுப்பில் நல்ல கொழுப்புகள் மற்றும் கெட்ட கொழுப்புகள் உள்ளன. பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட மற்றும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட உணவுகளில் பொதுவாக மோசமான கொழுப்புகள் இருக்கும். இவற்றில் டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் தாவர எண்ணெய் ஆகியவை அடங்கும். துரதிர்ஷ்டவசமாக, இந்த கொழுப்புகள் நம் உணவில் தற்போது அதிகரித்துள்ளன. இவை உடலில் கெட்ட கொழுப்பு சேருதல் மற்றும் வீக்கத்திற்கு வழிவகுக்கும். ஒவ்வொருவருக்கும் ஏற்படும் நாள்பட்ட நோய்களுக்கு பின்னால் வீக்கமே காரணமாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

நல்ல கொழுப்புகள் என்றால் என்ன?

பொதுவாக இயற்கை உணவுகளில் நல்ல கொழுப்புகள் உள்ளன. ஏனெனில் இதில் பாலி மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. நல்ல கொழுப்புகள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றன. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க தூண்டுகின்றன. பசியைக் குறைக்கின்றன. மேலும் டைப் 2 நீரிழிவு நோயைத் தலைகீழாக மாற்றி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. உங்கள் மோசமான கொழுப்பை எல்.டி.எல் குறைப்பதன் மூலமும், உங்கள் நல்ல கொழுப்பை எச்.டி.எல் அதிகரிப்பதன் மூலமும், கொழுப்புகள் உங்கள் ட்ரைகிளிசரைடுகளையும் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.



கொழுப்புகள் ஏன் தேவை?

உங்கள் உடல் கொழுப்பு அமிலங்களை தானாக தயாரிக்காது. மேலும் நல்ல கொழுப்புகள் அத்தகைய கொழுப்பு அமிலங்களின் மூலமாக செயல்படுகிறது. உங்கள் மூளை பெரும்பாலும் கொழுப்புகளால் ஆனது மற்றும் ஒழுங்காக செயல்பட கொழுப்புகளின் நிலையான ஓட்டம் தேவைப்படுகிறது. இந்த கொழுப்பின் மிகப்பெரிய பகுதி ஒமேகா 3 கொழுப்புகளிலிருந்து வருகிறது. இது செல்கள் இடையே எளிதாக இயக்க தேவையான DHA என்றும் அழைக்கப்படுகிறது. இது செல்களை பயணிக்க நல்ல தரமான கொழுப்புகளை எடுத்துக்கொள்வது அறிவாற்றல், மகிழ்ச்சி, கற்றல் மற்றும் நினைவகத்தை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

பெண்கள் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பாகவே இந்த உணவுகளை தவிர்க்கவேண்டும்.. ஏன் தெரியுமா..?

மேலும், உடலில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் குறைபாடு இருந்தால் அது மனச்சோர்வு, பதட்டம், இருமுனை கோளாறுகள் மற்றும் ஸ்கிசோஃப்ரினியா, மலட்டுத்தன்மை ஆகிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. எனவே சீரான ஹார்மோன்களுக்கு போதுமான கொழுப்புகளை சாப்பிடுவது அவசியம். குறிப்பாக, வைட்டமின் ஏ, டி, கே மற்றும் ஈ ஆகியவை கொழுப்பில் கரையக்கூடியவை. அதாவது உடலில் கொழுப்புகள் மேற்கண்ட வைட்டமின்களை உறிஞ்சிவதற்கு தேவைப்படுகின்றன. இந்த ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உங்கள் குடலில் உணவு கொழுப்புகள் அவசியம் தேவைப்படுகின்றன.

தினசரி எவ்வளவு கொழுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்?

உங்கள் தினசரி கலோரி உட்கொள்ளலில் சுமார் 20 சதவீதம் கொழுப்புகளை எடுத்துக்கொண்டால் போதும். உங்கள் தோல், முடி, மூளை, இதய செயல்பாடு, மற்றும் உடல் வெப்பநிலையை சீராக்க கொழுப்புகள் தேவை என்பதை மறவாதீர்கள். கொழுப்புகளை அதிகளவிலோ அல்லது பதப்படுத்தப்பட்ட கொழுப்புகளை மட்டும் உணவில் சேர்த்துக்கொள்ளாதீர்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: