கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முக்கியத்தும் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் அறிவுறுத்தப்பட்ட அனைத்தையும் மக்கள் முயற்சித்தனர்.
தொற்று நோய்களுக்கு எதிராக நம்மை பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியானது போதுமான அளவில் இருப்பது அவசியமாகும். கொரோனா போன்ற கொடிய வைரஸின் தாக்கங்களிலிருந்து நம்மை பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தி கண்டிப்பாக அனைவருக்கும் தேவையானது ஆகும். கொரோனா மட்டுமல்ல, பல நோய்த்தொற்றுகளையும் வெல்ல நோய் எதிர்ப்பு சக்தி நமக்கு உதவும். குறிப்பாக மழைக்காலத்தில் நோய்த்தொற்றின் ஆபத்து பல மடங்கு அதிகரிக்கும்.
இருமல் மற்றும் சளி தொல்லை ஏராளமானோருக்கு ஏற்படுத்துவதை நாம் பார்க்க முடியும். இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.
நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது ஒரு கடினமான வேலையாக தோன்றலாம், ஆனால் நமது அன்றாட வாழ்க்கை முறையில் சிறிய மாற்றங்கள் செய்தால் மிகவும் எளிதாக நோய் எதிர்ப்பு சக்தியை நாம் அதிகரிக்க முடியும். ஆயுர்வேதத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல பானங்கள் மற்றும் உணவுகள் உள்ளன. அத்தகைய சுலபமாக கிடைக்கும் பானங்களில் ஒன்று தான் தக்காளி ஜூஸ்.
Must Read | ‘இனியும் தயங்காதீங்க’ | பெண்களே… மெனோபாஸ் குறித்து நீங்கள் தயங்காமல் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!
பருவமழை காலத்தில் தக்காளி சாறு குடிப்பதால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும். ஏனெனில் தக்காளியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது மற்றும் நமது உடலில் ஆன்டிஆக்ஸிடன்ட்டாக செயல்படுகிறது. மேலும் தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில் பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிவு நோய், நுரையீரல், மார்பகம் மற்றும் ப்ரோஸ்டேட் (Prostate) புற்றுநோய் ஆகியவை வராமல் காப்பதற்கும் தக்காளி ஜூஸ் உதவுகிறது. மேலும் பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது. தக்காளியை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி சரும பொலிவும் மேம்படும். இதனால் உங்கள் சருமம் எப்போதும் இளமையாக காட்சியளிக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தக்காளி ஜூஸ் செய்வது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
தக்காளி - 2
செய்முறை:
முதலில் தக்காளி பழத்தை எடுத்து நன்கு கழுவி கொள்ளுங்கள். பின்னர் அதனை சிறிய துண்டுகளாக வெட்டி ஜூஸர் ஜாடியில் போட்டு அதனுடன் ஒரு கப் தண்ணீரைச் சேர்த்து 4-5 நிமிடங்கள் அரைக்கவும். இந்த சாறை ஒரு கோப்பைக்கு மாற்றி இதனுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து பருகவும். தேவைப்பட்டால் தேன் சேர்த்து கொள்ளலாம். இந்த ஜூஸை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வர உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே பருவகால நோய்களை தவிர்க்க தினமும் குடித்து வாருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Healthy juice, Healthy Lifestyle, Immunity, Immunity boost