ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கர்ப்பிணிகள் உணவில் நெய் சேர்த்துக்கொண்டால் ஆபத்தா..? தெரிந்துகொள்ள வேண்டியவை..!

கர்ப்பிணிகள் உணவில் நெய் சேர்த்துக்கொண்டால் ஆபத்தா..? தெரிந்துகொள்ள வேண்டியவை..!

14. நெய் : நெய் இந்திய உணவு வகைகளில் ஒரு முக்கிய பகுதியாகும், ஆனால் இது உடலை சூடாக வைத்திருப்பதற்கும் அறியப்படுகிறது, கடுமையான வெப்பத்தில் இது உங்களுக்கு தேவைப்படாது.

14. நெய் : நெய் இந்திய உணவு வகைகளில் ஒரு முக்கிய பகுதியாகும், ஆனால் இது உடலை சூடாக வைத்திருப்பதற்கும் அறியப்படுகிறது, கடுமையான வெப்பத்தில் இது உங்களுக்கு தேவைப்படாது.

கர்ப்ப காலத்தில் பெண்கள் நல்ல, சுத்தமான, ஆரோக்கியமான சத்துணவுகளை சாப்பிட வேண்டும். தானியங்கள், பருப்புகள், பயிறுவகைகள், காய்கறி, பழங்கள், பால், வெண்ணெய், வேர்க்கடலை, முட்டை, இறைச்சி, என அனைத்து வகை உணவுகளையும் கர்ப்பிணிகள் சாப்பிடலாம்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :

  பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உடலின் எடை அதிகரிப்பதை கவனமாக கண்காணிக்க வேண்டும். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அதிகரிக்க வேண்டிய எடையை விட கூடுதலாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ எடை இருக்க கூடாது. சராசரி எடை கொண்ட பெண்கள் 10 முதல் 16 கிலோகிராம் வரை எடை கூடலாம். முதல் மூன்று மாதங்களில் 1 முதல் 1.5 கிலோ, அடுத்த மூன்று மாதங்களில் 5 முதல் 7 கிலோ வரை எடை அதிகரிக்கலாம். இறுதி மூன்று மாதங்களில் 2 முதல் 3 கிலோ வரை எடை அதிகரிக்கலாம்.

  உடல் பருமனான பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் 7 முதல் 11 கிலோ வரை எடை அதிகரிக்கலாம். உடல் எடை மிகவும் குறைவாக உள்ள பெண்கள் கரிப்ப காலத்தில் 12 முதல் 18 கிலோ வரை எடை ஏறலாம். அந்த வகையில் எடை மிகவும் அதிகரித்தாலோ, அல்லது சரியாக அதிகரிக்காமல் இருந்தாலோ மருத்துவரின் ஆலோசனைப்படி உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளலாம். அதுவும் உணவை மூன்று வேளையாக மட்டும் சாப்பிடாமல் 6 வேளையாக பிரித்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

  கர்ப்ப காலத்தில் பெண்கள் நல்ல, சுத்தமான, ஆரோக்கியமான சத்துணவுகளை சாப்பிட வேண்டும். தானியங்கள், பருப்புகள், பயிறுவகைகள், காய்கறி, பழங்கள், பால், வெண்ணெய், வேர்க்கடலை, முட்டை, இறைச்சி, என அனைத்து வகை உணவுகளையும் கர்ப்பிணிகள் சாப்பிடலாம். குறிப்பாக இரும்பு சத்து நிறைந்த முருங்கை கீரை பேரிச்சம் பழம், தர்பூசணி, உலர்ந்த திராட்சைகள், காய்ந்த சுண்டைக்காய், வெல்லம், பனங்கற்கண்டு, பாதாம், ஆட்டு ஈரல் ஆகியவற்றை பெண்கள் சாப்பிடுவது நல்லது.

  கால்சியம் அதிகரிக்க தயிர், கேழ்வரகு, கறிவேப்பிலை, மணத்தக்காளி கீரை, மீன், நல்லெண்ணெய் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதனுடன் மருத்துவர்கள் தரும் சத்து மாத்திரைகள் மற்றும் டானிக்குகளை தவறாமல் சாப்பிட வேண்டும். உடலுக்கு அதிகம் சூடு தரும் பப்பாளி, அன்னாசி பழம், எள்ளுருண்டை போன்றவற்றை குறைவாக சாப்பிடுவது நல்லது. ஆனால் கர்ப்பிணி பெண்கள் நெய்யை சாப்பிடலாமா என சிலருக்கு சந்தேகம் எழும். ஏனெனில் அதில் அதிக கொழுப்பு இருப்பதால் அதனை சாப்பிடலாமா என்ற தயக்கம் இருக்கும். அதுவே குறிப்பிட்ட அளவு நெய்யை சேர்த்துக்கொண்டால் அதிக பலனைப் பெறலாம் என்பதையும் தெரிவித்து கொள்ள வேண்டும்.

  நெய்யின் குணப்படுத்தும் பண்பு :

  பழங்கால நூற்றாண்டுகள் பழமையான ஆயுர்வேத நூலான சரகா சம்ஹிதாவில் மனித நுகர்வுக்கு ஏற்ற அனைத்து எண்ணெய்களிலும் நெய் சாப்பிட சிறந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ‘குணப்படுத்தும் எண்ணெய்’ என்றும் அழைக்கப்படுகிறது. பல உணவியல் நிபுணர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் நெய்யை தினசரி சமையலில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயோடு சேர்க்க பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காக நெய்யை உட்கொண்டு வருகின்றனர்.

  கர்ப்பிணிகளுக்கு நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள் :

  * நெய் என்பது ஆரோக்கியமான கொழுப்பின் ஒரு வடிவமாகும். இது கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு ஊட்டமளிக்க உதவுகிறது.

  * இது நல்ல சுவை மட்டுமல்லாமல், தாய்மார்களுக்கு நாளுக்கு போதுமான ஆற்றலையும் தருகிறது.

  * இது நச்சுகளை வெளியேற்றுவது முதல் சேதமடைந்த திசுக்களை சரிசெய்வது வரை, நெய் நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக்க உதவுகிறது.

  * உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

  * சாதாரண பெண்களைவிட கர்ப்பிணிப் பெண்களுக்கு தினமும் 200-300 கலோரிகள் அதிகமாகத் தேவைப்படும். இந்த அதிகக் கலோரிகளை நெய்யை உணவில் சேர்த்துக்கொள்வதன்மூலம் எளிதாகப் பெறலாம்.

  உங்களுக்கு தெரியுமா..? வீட்டில் நாம் பயன்படுத்தும் இந்த பொருட்களே கர்ப்பிணிகளுக்கு ஆபத்தாகலாம்..

  * நெய் லட்டுகள் கர்ப்ப காலத்தில் பசியைத் தூண்டும். அதே வேளையில், நெய்யுடன் உணவை சமைப்பது ஊட்டச்சத்து காரணியை அதிகரிக்கும்.

  குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இந்த உணவுகள அறவே தவிர்த்திருங்க!

  * குழந்தைப் பிறப்பதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு நெய்யை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது அதிக பலனைத் தரும். அதாவது அதிகபட்சமாக 1-3 டேபிள்ஸ்பூன் எடுத்துக்கொள்ளலாம்.

  உங்கள் உடல்நிலையைப் பற்றி தெரிந்துகொள்ள மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற்று, நெய்யை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் சிறந்தது. அதேபோல, அதிக நெய்யை உட்கொள்வது உடலில் உள்ள கலோரிகளை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. கர்ப்ப காலத்தில் உங்கள் உணவில் அதிகமாக அளவு நெய்யை உட்கொள்ள வேண்டாம். கர்ப்ப காலத்தில், தாய் பித்தப்பைகளால் அவதிப்படுகிறார் என்றால் குறைந்த பட்சம் நெய்யை உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Ghee, Pregnancy