PCOS நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போது பெண்களால் கர்ப்பம் தரிக்க முடியுமா? மருத்துவர்கள் கூறும் ஆலோசனை என்ன?

மாதிரி படம்

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்பது பெண்களில் இனப்பெருக்க அமைப்பில் குறுக்கிடும் ஒரு ஹார்மோன் நிலை.

  • Share this:
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்பது பெண்களில் இனப்பெருக்க அமைப்பில் குறுக்கிடும் ஒரு ஹார்மோன் நிலை. இதன் பொதுவான அறிகுறிகளில் ஒழுங்கற்ற காலங்கள் மற்றும் உடல் பருமன் ஆகியவை அடங்கும். இது பெண்களுக்கு கருத்தரிப்பு பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் இனப்பெருக்க வயதைச் சேர்ந்த பெண்களில் சுமார் 10 சதவீதம் பேர் இந்த பதிப்பால் பாதிக்கப்படுகின்றனர்.

பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் என்றால் என்ன?

பாலிசிஸ்டிக் ஓவரீஸ் என்பது சினைமுட்டைப் பையில் முட்டைகளைச் சுற்றி, நீர் கொப்பளங்கள் உருவாகும் நிலையைக் குறிக்கும். ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் பிரச்சனைகளாலும், சிலருக்கு பரம்பரையாகவும், மரபணு மூலமாகவும் இப்பிரச்னை ஏற்படுகிறது. ஒவ்வொரு சினை முட்டையிலும் கோடிக்கணக்கான முட்டைகள் இருக்கின்றன. இவற்றில் ஒரு முட்டை முழு வளர்ச்சியடைந்து தன்னை உடைத்துக் கொண்டு வெளிவரும் போது தான், விந்துகளோடு இணைந்து கருவாக உருவாகுகிறது. மீதியிருக்கும் அத்தனை முட்டைகளும் அழிந்து மறைந்து போகின்றன, இது ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிற சாதாரண நிகழ்ச்சியாகும்.

ஆனால், பாலிசிஸ்டிக் ஓவரீ சின்ட்ரோம் இருப்பவர்களுக்கு என்ன நடக்கிறது? அத்தனை முட்டைகளில் ஒன்றுகூட முழு முதிர்ச்சி அடைந்து, உடைந்து வெளி வருவதில்லை, அந்த முட்டைகள் அழிவதுமில்லை. அவற்றைச் சுற்றி நீர் சேர்ந்து கொண்டு நீர்க் கொப்பளங்களாக சினை முட்டைப் பையை சுற்றி ஆக்கிரமித்துக் கொள்கின்றன.



PCOS-ன் பொதுவான அறிகுறிகள்:

ஒழுங்கற்ற மாதவிடாய், முகம் மற்றும் மார்பில் மிகையாக முடிகள் வளர்ந்திருத்தல், எடை அதிகரிப்பு, முடி உதிர்தல், எண்ணெய் வடியும் சருமம் அல்லது முகப்பரு போன்ற பொதுவான அறிகுறிகள் ஏற்படுவதுண்டு. இந்த பிரச்சனை பெண்களை உடல் ரீதியாக பாதிப்பது மட்டுமல்லாது அவர்களின் மன நலனுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடும்.

ஆனால் இத்தகைய பிரச்சனைகளுக்கு இடையேயும் இருக்கக்கூடிய நல்ல செய்தி என்னவென்றால், சரியான உணவு மற்றும் முறையான உடற்பயிற்சியைப் பின்பற்றுவதன் மூலம் இந்த அறிகுறிகளை எளிதில் மிக சுலபமாக நிர்வகித்திட முடியும் என்பது தான். மறுபுறம் பி.சி.ஓ.எஸ் பிரச்சனையோடு இருக்கும் பெண்களும் கர்ப்பம் தரிக்க முடியும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கர்ப்பம் மற்றும் பி.சி.ஓ.எஸ் பற்றி அவர் பதிலளித்த சில பொதுவான சந்தேகங்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில ஆலோசனைகளை கீழே காண்போம்.

மாதவிடாயின்போது எம்மாதிரியான சிக்கல்கள் உங்களுக்கு ஏற்படும் என்று தெரியுமா?

PCOS நோயால் பாதிக்கப்படும் போது கருத்தரிக்க முடியுமா?

பி.சி.ஓ.எஸ் மற்றும் பி.சி.ஓ.டி நோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்கள் அல்லது மாதவிடாய் தவறுதல் மிகவும் பொதுவானது ஆகும். ஆனால் இந்த பிரச்சனைகளால் பெண்கள் ஒருபோதும் கர்ப்பமாக இருக்க முடியாது என்று அர்த்தமல்ல. இது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது, " இந்த ஹார்மோன் நிலைமைகளால் அவதிப்படும் போது கர்ப்பம் தரிப்பது சாத்தியம். இது கொஞ்சம் கடினமாக இருக்கலாம், ஆனால் சாத்தியமற்றது அல்ல" என்று பகிர்ந்து கொண்டார். அண்டவிடுப்பின் (Ovulation) பிரச்சினைகள் மற்றும் குறைந்த முட்டையின் தரம் பொதுவானது. ஆனால் உங்கள் ஆரோக்கியத்தை சரியான முறையில் கவனிப்பதன் மூலம், இந்த நிலைமைகளால் பாதிக்கப்பட்ட எந்த பெண்களும் கர்ப்பமாகலாம் என்று தெரிவித்துள்ளனர்.



PCOS ஏன் கருவுறாமை பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது?

கருவுறாமை அடிப்படையில் இரண்டு காரணங்களால் ஏற்படுகிறது. அவை ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் முட்டையின் தரம். ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக, முட்டையின் தரம் குறைகிறது. இதனால் கர்ப்பம் தரிப்பது கடினம். இரண்டாவது காரணம் உடலில் ஆண்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு அதிகரிப்பதாகும். இது ஒரு ஆண் ஹார்மோன். பெண் உடலில் இந்த ஆண்ட்ரோஜன் அளவு உயரும் போது பல இனப்பெருக்க ஹார்மோன்களை தொந்தரவு செய்யலாம்.

பி.சி.ஓ.எஸ் நோயால் பாதிக்கப்படும் போது கர்ப்பத்தை எவ்வாறு நிர்வகிப்பது?

இந்த ஹார்மோன் சிக்கல்களை ஒரு சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வதன் மூலம் எளிதாக நிர்வகிக்க முடியும். ஆரோக்கியமான கர்ப்பத்தை உறுதிப்படுத்தக்கூடிய மூன்று விஷயங்களைச் செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உங்கள் லைஃப்ஸ்டைல் ஹெல்தியாக இருக்கனும்னு நினைக்கிறீங்களா? 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள்: அனைத்து வகையான ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளையும் சாப்பிடுவது அவசியம். போதுமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் வழங்குவது இந்த நிலைமைகளின் அறிகுறிகளைக் கடக்க உதவும்.

உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள்: உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது அவசியம். இது நாள்பட்ட நோய்களைத் தடுக்கிறது.



மனஅழுத்தத்தை கைவிடுங்கள்: நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது அதிக மன அழுத்தத்துடன் இருக்க வேண்டாம். உங்கள் கர்ப்பத்தைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். நீங்கள் கர்ப்பகாலத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்றால் நிலைமையை நிர்வகிப்பது மிகவும் எளிதாக இருக்கும்.

இந்த மாதிரியான ஹார்மோன் நிலைமைகளைக் கையாளும் ஒவ்வொரு நோயாளியும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் இந்த பிரச்சனை உங்களுக்கு மிகவும் கடுமையானதாக இருக்கும் பட்சத்தில், மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று மருந்துகளை எடுத்துக்கொள்வது சிறந்தது. பி.சி.ஓ.எஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பெண்கள் கருத்தரிக்க முயற்சிக்கும்போது தங்கள் மருத்துவரை அணுக வேண்டும். உங்கள் காலம் ஒழுங்கற்றதாக இருக்கும்போது, நீங்கள் ஒரு குழந்தையைத் திட்டமிடும்போது மருத்துவரின் கருத்தை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது.

Published by:Sivaranjani E
First published: