கருச்சிதைவுக்குப் பிறகு கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படுமா..? மீண்டும் கருத்தரிக்க முயற்சிக்கும் தம்பதிகளுக்கு டிப்ஸ்...

கருத்தரிப்பு

கருச்சிதைவுக்கு பிறகு மீண்டும் கருத்தரிப்பதை பற்றி கவலைப்படுவது இயல்பானது. ஆனால் நீங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், எதை பற்றியும் கவலைப்படத்தேவையில்லை.

  • Share this:
கருத்தரித்த சில மாதங்களில் கருவிலேயே குழந்தையை இழப்பது என்பது குழந்தையின் வருகையை உற்சாகத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் தம்பதியினருக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும். மேலும் முதல் கருச்சிதைவுக்கு பிறகு மீண்டும் கருத்தரிக்க முடியுமா என்ற பயமே முறையாக கருத்தரிப்பதில் தாமதத்தை ஏற்படுத்தும். கருச்சிதைவு தொடர்ந்து உங்களில் கவலையை ஏற்படுத்தினாலும், குழந்தை பெற்றுக்கொள்வதில் நீங்கள் உறுதியாக இருந்தால், எந்த ஒரு தடையும் மகப்பேறுக்கு முட்டுக்கட்டை போடாது.

தெளிவாக கூறவேண்டுமானால், கருச்சிதைவு உங்கள் கருவுறுதலை எந்த வகையிலும் பாதிக்காது. இருப்பினும் கருச்சிதைவுக்கு பிறகு மீண்டும் கருத்தரிக்கும் முயற்சியில் வெற்றிபெற நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால் மட்டும் போதும். இதுபற்றிய தெளிவான விளக்கங்களை பின்வருமாறு காணலாம்.

கருச்சிதைவுக்கு பிறகு எப்போது மீண்டும் கருத்தரிக்க முடியும்?

கர்ப்பமடைந்த ஒரு பெண்ணின் உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதேபோல், கருச்சிதைவும் ஒரு பெண்ணின் ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே கருச்சிதைவுக்குப் பிறகு மீண்டும் கருத்தரிக்க முயற்சிக்கும் முன்பு ​​ஓரிரு மாதங்கள் காத்திருப்பது பாதுகாப்பானது. ஏனெனில் கருச்சிதைவிலிருந்து கருப்பையை மீட்க இந்த இடைவெளி மிக முக்கியம். பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான கர்ப்பத்திற்கான வலிமையை மீண்டும் பெற ஒரு சிறிய இடைவெளி உதவலாம்.

ஆனால், மீண்டும் கருத்தரிக்க 1 அல்லது 2 மாதம் தான் இடைவெளி விட வேண்டும் என்பது கட்டாயமல்ல. ஏனெனில் இந்த விஷயத்தில் ஒருவரின் உடல் மீட்பை பொறுத்தே கால இடைவெளி அமைகிறது. நீங்கள் உடலளவில் தயாராக இருக்கிறீர்கள் என்பதை உணரும் போது மீண்டும் கருத்தரிக்கும் முயற்சியில் தாராளமாக ஈடுபடலாம். எவ்வாறாயினும், இந்த விஷயத்தில் சிக்கல்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த உங்கள் மருத்துவரை அணுகுவது சிறந்தது.

ஏனெனில் கருச்சிதைவுக்கு பிறகு கருப்பையில் வடு, நஞ்சுக்கொடி துண்டுகள் அல்லது குறிப்பிடத்தக்க இரத்த கசிவு இருந்தால், நீங்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். கருச்சிதைவுக்கு பிறகு கருப்பையில் எந்த சிக்கல்களும் இல்லையென்றாலும், உங்கள் உணர்ச்சிகளைச் செயல்படுத்த விரும்பும் வரை காத்திருங்கள். பொதுவாக, கருச்சிதைவுக்குப் பிறகு இரண்டு வாரங்கள் உடலுறவு வைத்துக்கொள்ள கூடாது என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.



கருச்சிதைவுக்குப் பிறகு கருத்தரிப்பது கடினமா?

கருச்சிதைவுக்கு பிறகு மீண்டும் கருத்தரிப்பதை பற்றி கவலைப்படுவது இயல்பானது. ஆனால் நீங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், எதை பற்றியும் கவலைப்படத்தேவையில்லை. கருச்சிதைவுக்குப் பிறகு ஒரு பெண் கர்ப்பமாவது, எந்த சிக்கலும் இல்லாமல் சாதாரணமாக கர்ப்பமாகும் பெண்களை போல எளிதானதாகவோ அல்லது கடினமாகவோ இருக்காது.

செக்ஸ் இல்லாமல் நம்மால் வாழ முடியாதா ?

கடந்த 2016 ஆம் ஆண்டு மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வுப்படி, கருச்சிதைவு ஏற்பட்ட மூன்று மாதங்களுக்குள் சுமார் 70 சதவீதம் பெண்கள் கருத்தரிக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் கருச்சிதைவுக்கு பிறகு உங்கள் உடல் ஆரோக்கியத்தை மீட்கும் செயலில் ஈடுபடும் போது, நீங்கள் உங்கள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அடிப்படை காரணங்களை நிர்வகிப்பதோடு, உங்கள் கருச்சிதைவுக்கு முதலில் காரணமாக அமைந்த வாழ்க்கை முறை ஆபத்து காரணிகளை மாற்ற வேண்டும். அது ஆரோக்கியமான கருத்தரிப்பின் வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.



எதிர்கால கருச்சிதைவு அபாயத்தைக் குறைப்பதற்கான டிப்ஸ்:

உங்கள் அடிப்படை சுகாதார நிலையை நிர்வகிக்கவும்: நீங்கள் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தால் கருத்தரிக்க முயற்சிக்கும் முன் முழு உடல் பரிசோதனையை செய்து கொள்ளுங்கள். அவற்றை கட்டுக்குள் கொண்டுவர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

விறைப்பு செயலிழப்பை உருவாக்கும் கோவிட் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

உங்கள் எடையை நிர்வகிக்கவும்: அதிக எடையுடன் இருப்பது கருச்சிதைவுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது முக்கியம். எனவே உடல் பருமனை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஆரோக்கியமாக சாப்பிடுங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யுங்கள்: ஆரோக்கியமாக சாப்பிடுவது மட்டுமல்லாமல் குழந்தையின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியமாக கருத்தரிப்பதற்கும் உடற்பயிற்சி அவசியம். எனவே, அதற்கேற்ப உங்கள் தினசரி வழக்கத்தில் மாற்றங்களைச் செய்யுங்கள்.



உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிக்க வேண்டும்: மன அழுத்தம் கருத்தரிப்பதை கடினமாக்கும் மற்றும் அதிக ஆபத்துள்ள கர்ப்பத்திற்கு வழிவகுக்கும். நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால் யோகா, தியானம், ஆழ்ந்த மூச்சு மற்றும் அக்குபஞ்சர் மருத்துவம் ஆகியவற்றை முயற்சி செய்யலாம். உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இதைப் பற்றி பேசுங்கள், தேவைப்பட்டால் தொழில்முறை ஆலோசனையை கூட நீங்கள் பெறலாம்.

புகைபிடித்தல் மற்றும் குடிப்பதை நிறுத்துங்கள்: நீங்கள் புகைபிடித்தாலோ அல்லது மது அருந்தினாலோ ஆரோக்கியமான கர்ப்பத்தை பெற முடியாது. எனவே கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்கள் இந்த பழக்கத்தை விட்டு விட வேண்டும். அதிகப்படியான புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் ஆண் மற்றும் பெண் இருவரில் கருவுறுதலை பாதிக்கும்.

 
Published by:Sivaranjani E
First published: