Home /News /lifestyle /

கருத்தடை முயற்சிகளை கொண்டால் பின்னாளில் கர்ப்பம் தரிப்பது பாதிக்கப்படுமா?

கருத்தடை முயற்சிகளை கொண்டால் பின்னாளில் கர்ப்பம் தரிப்பது பாதிக்கப்படுமா?

காட்சி படம்

காட்சி படம்

தேசிய குடும்பல நல ஆய்வு அண்மையில் மேற்கொள்ளப்பட்டதில், இந்தியாவில் நவீன கருத்தடை மருந்து பயன்பாட்டு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக, கருத்தடை மாத்திரைகளின் பயன்பாடு அதிகரித்திருப்பதால் மொத்த கர்ப்ப விகிதம் என்பது சரிவை கண்டுள்ளது. தேசிய குடும்பல நல ஆய்வு அண்மையில் மேற்கொள்ளப்பட்டதில், இந்தியாவில் நவீன கருத்தடை மருந்து பயன்பாட்டு எண்ணிக்கை என்பது 47.8 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 8.7 சதவீதம் அதிகரித்து, 56.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கொஞ்சம் குறையத் தொடங்கியுள்ளது என்ற வகையில் இது நல்ல செய்தி என்றாலும், குழந்தை பிறப்பு கட்டுப்பாடு மற்றும் குழந்தையின்மை ஆகியவற்றுக்கு இடையேயான விவாதங்கள் அதிகரிப்பதற்கு இது காரணமாக அமைந்துள்ளது.

இந்தியாவில் குழந்தையின்மை மற்றும் குழந்தை பிறப்பு கட்டுப்பாடு:

குழந்தையின்மை பிரச்சினை என்பது ஆண் அல்லது பெண் என இருவரில் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படக் கூடும். சிலர் ஒன்றிரண்டு மாத முயற்சிகளுக்கு பிறகு நல்ல செய்தி உறுதியாகவில்லை என்ற உடனேயே தங்களுக்கு குழந்தையின்மை குறைபாடு இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், உலக சுகாதார மையம் இதுதொடர்பான தெளிவான வரையறையை வெளியிட்டிருக்கிறது. அதாவது, ஆண், பெண் இருவரும் தொடர்ந்து 12 மாதங்கள் இணை சேர்ந்து அல்லது அவ்வபோது எந்தவித தடுப்புகளும் இல்லாமல் செக்ஸ் உறவு கொண்ட பிறகும் கூட குழந்தை உண்டாகவில்லை என்றால் மட்டுமே அது பிரச்சினைக்கு உரிய விஷயமாக கருதப்பட வேண்டும்.

also read : ஆய்வாளர்கள் கண்டுபிடித்த சூப்பர் ஐடியா… சிகிச்சை பெறும் குழந்தைகள் விரைந்து குணமாக இதை செய்யுங்கள்!

அதே சமயம், கர்ப்ப கட்டுப்பாடு முறைகளை நீங்கள் அடிக்கடி கடைப்பிடித்தாலும் கூட, குழந்தை பிறப்பு பாதிக்கப்படாது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக ஆணுறை, மாத்திரைகள், பெண்ணுறுப்பு வளையங்கள், கருத்தடை ஊசிகள் மற்றும் கருத்தடை சாதனங்கள் போன்றவையே குழந்தை கட்டுப்பாட்டு முறைகளாக அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்த கட்டுப்பாட்டு முறைகள் அனைத்துமே ரிவர்சிபள் ஆகும். அதாவது, இதற்குப் பிறகும் கூட நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். கர்ப்பம் அடைய விரும்பும் பெண் ஒருவர், பெரிதாக எது குறித்தும் கவலைப் படாமல், இந்த தடை முயற்சிகளை கைவிட்டு, ரெகுலர் முறைக்கு மாறினாலே போதுமானது.

also read : மகப்பேறுக்கு பிறகான மனச்சோர்வு என்றால் என்ன? பிரசவத்திற்குப் பிறகு எப்போது உடற்பயிற்சியை தொடங்கலாம்? மருத்துவர் அட்வைஸ்

கருத்தடை முயற்சிகளுக்குப் பிறகு மீண்டும் கர்ப்பம் அடைவது எப்படி :

கருத்தடை மாத்திரை அல்லது கருத்தடை ஊசிகள் போன்ற ஏதோ ஒன்றை நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்த நிலையில், தற்போது அதை கைவிட்டு கர்ப்பம் அடைய முயற்சி செய்கிறீர்கள் என்றால், அதுனுடன் சில வாழ்வியல் மாற்றங்களையும் கடைப்பிடிக்க வேண்டும். சீரான ஊட்டச்சத்து உணவை சாப்பிட வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். அளவில்லாத வகையில் புரதங்கள் எடுத்துக் கொள்வது அவசியம். தினசரி 8 மணி நேர தூக்கம் நல்ல புத்துணர்ச்சியை கொடுக்கும். இதற்குப் பிறகு நீங்கள் கர்ப்பம் அடையும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Pregnancy

அடுத்த செய்தி