ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தொடர்ச்சியாக டைப்பிங் செய்வதால் விரல்களில் வலியா..? இதை செய்தால் சரியாகும்...

தொடர்ச்சியாக டைப்பிங் செய்வதால் விரல்களில் வலியா..? இதை செய்தால் சரியாகும்...

விரல் வலி

விரல் வலி

கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் தொடர்ச்சியாக டைப் செய்வதன் விளைவாக நம் கை, தோள்பட்டை மற்றும் முதுகில் வலி ஏற்படலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கொரானா வைரஸ் தொற்று, கடந்த இரண்டு ஆண்டுகளாக, நம்மில் பெரும்பாலானோரை வீட்டுக்குள்ளேயே இருக்கும்படியான நிலைக்கு தள்ளியுள்ளது. கொரானா தொற்றுநோயின் கடும் பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டன; எதுவாக இருந்தாலும் வீட்டில் இருந்தபடியே செய்யுங்கள் என்கிற, சற்றும் பழக்கமே இல்லாத 'நியூ நார்மல்' அறிமுகமானது.

இணையம் நம் வாழ்வின் இன்றியமையாத ஒரு அங்கமானது. உடன் வொர்க் ப்ஃரம் ஹோம் செய்யும் அனைவரின் அன்றாட வாழ்க்கையிலும் மொபைல் போன்கள் மற்றும் கம்ப்யூட்டர் / லேப்டாப்களின் பயன்பாடு முக்கிய பங்காக உருமாறின.

குழந்தைகளுக்கான ஆன்லைன் வகுப்புகள், விர்ச்சுவல் ஆபிஸ் மீட்டிங் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்தல் போன்ற முயற்சிகளை / வேலைகளை மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டர் / லேப்டாப் போன்ற சாதனங்கள் இல்லாமல் நினைத்துக்கூட பார்க்க முடியாத - தற்போதைய - சூழ்நிலை உருவானது.

இந்த இடத்தில் குறிப்பிட்ட சூழலின் மற்றொரு பக்கத்தை பற்றியும், அதாவது இந்த நியூ நார்மல் வழியாக நமக்கு தெரியாமலே நாம் சந்திக்கும் சில ஆரோக்கியம் சார்ந்த பாதிப்புகளை பற்றியும் பேசியாக வேண்டும்.

கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் தொடர்ச்சியாக டைப் செய்வதன் விளைவாக நம் கை, தோள்பட்டை மற்றும் முதுகில் வலி ஏற்படலாம். உடன் கண் பார்வை சார்ந்த சில பிரச்சனைகளும் ஏற்படலாம்.

ஒரு நாள் முழுவதும் மாங்கு மாங்கென்று டைப் செய்வதன் விளைவாக ஏற்படும் விரல் வலியைப் போக்கும் சில எளிய மற்றும் அனைவரும் முயற்சி செய்யக்கூடிய டிப்ஸ்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

அறிகுறிகளின்றி தாக்கும் இதய நோய்: இதயத்துக்கான சிறந்த உணவு பழக்கம் எது?

பல நேரங்களில் நாம், கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் எத்தனை மணி நேரம் செலவு செய்கிறோம் என்பதை சற்றும் கவனிக்காத அளவுக்கு வேலையில் மூழ்கிவிடுகிறோம். இருப்பினும், பிற்காலத்தில், அது நம் உடலையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. எனவே தான், நீண்ட நேரம் வேலை செய்யும் எவரும், தாம் செய்யும் வேலைக்கு ஏற்ப அவ்வப்போது ஓய்வு எடுப்பதும் அவசியம்.

அப்படியாக உங்களுக்கு நீங்களே கொடுக்கும் பிரேக்கில், உங்கள் விரல்களை ஸ்ட்ரெட்ச் செய்ய, அதாவது நீட்டி மடக்கி சுடக்குகள் எடுத்துக்கொள்ள மறக்க வேண்டாம். மேலும் ஒரு நாள் முழுவதும் வேலை செய்பவர்கள் அவ்வப்போது தங்களது கை முட்டியை நீட்டி மடக்குவதன் மூலம் விரல்களில் ஏற்படும் வலியைப் போக்கலாம்.

எங்கெல்லாம் அமர முடியுமோ அங்கெல்லாம் அமர்ந்து வேலை செய்யும் பழக்கத்தால் நம் உடல் மட்டுமல்ல, விரல்களும் பாதிக்கப்படுகின்றன. எனவே, கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் டைப் செய்வதில் சிரமம் இல்லாத இடங்களில் அவைகளை வைத்து வேலை செய்வது நல்லது. இதற்கு, ஒரு மேஜை மற்றும் ஒரு நாற்காலி, ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

நம்மில் பலர், படுக்கையில் படுத்துக்கொண்டு அல்லது மிகவும் வசதியாக இருக்கும் இடத்தில் அமர்ந்து கொண்டு வேலை செய்யத் தொடங்குகிறோம். இதன் விளைவாக, நமக்கு தெரியாமலேயே நம் கைகளில் அழுத்தத்தை உருவாக்குகிறோம், இது விரல் வலிக்கு வழிவகுக்கிறது. அதனால்தான் விரல்கள் மிகவும் சிரமப்படாமல் வேலை செய்ய நாம் நமது கைகளின் நிலையிலும் கவனம் செலுத்த வேண்டும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Computer, Health issues, Office