மனிதர்களின் ஆயுள் மற்றும் ஆரோக்கியமான வாழ்நாள் எதிர்பார்ப்பு என்பது 6 ஆண்டுகளுக்கு அதிகரித்துள்ளது. இந்த மாற்றம் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்டதாகும். நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து, உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது தான் இதற்கு காரணமாகும். ஆராய்ச்சிகளின் மூலமாக அறிவியல் உலகம் நோய்களை முறியடிப்பதற்கு ஏற்ப மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
அதேபோன்று வளர்ப்பு பிராணிகளுக்கும் நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாக அவற்றின் ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
சுமார் 70 சதவீத நாய்களுக்கு மரபணு ரீதியான நோய்கள் உருவாகக் கூடிய அபாயம் உள்ளது என்றும், வெவ்வேறு வயதில் இதன் காரணமாக நோய்கள் உண்டாகக் கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து Urban Animal என்ற விலங்கு நல அமைப்பின் நிறுவனர் ஆகாஷ் முரளி கூறுகையில், “நாய்களுக்கு நோய் எப்படி உருவாகிறது என்பதை நாம் கண்டறிந்து விட்டால், அவற்றை தடுப்பது மற்றும் குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகளை நாம் கண்டறிந்து விடலாம். உதாரணத்திற்கு ஊட்டச்சத்து தேவைகள், மருந்துகள், சிறிய அளவிலான வாழ்வியல் மாற்றங்கள் போன்றவற்றை மேற்கொள்வதன் மூலமாக நாய்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும்’’ என்று தெரிவித்தார். இந்தப் பரிசோதனையானது அனைத்து நாய் இனங்கள், வயது, நாட்டு இனங்கள் உள்பட எத்தகைய வேறுபாடும் இல்லாமல் இந்த பரிசோதனை அமையும் என்றும் அவர் கூறினார்.
மரபணுக்களே காரணம் :
வளர்ப்பு பிராணிகளுக்கு நோய்கள் ஏற்பட மரபணுக்கள் தான் பொதுவான காரணமாக அமைகிறது. சில சமயம் இந்த நோய்கள் கண்டறியப்படாமல் மிகுந்த தீவிரத்தன்மை கொண்ட பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. இதுகுறித்து கால்நடை மருத்துவர் சாய்ராம் கூறுகையில், “வளர்ப்பு பிராணிகளுக்கு மரபணு அடிப்படையில் நோய்களுக்கான சாத்தியக்கூறுகளை கண்டறிவது கால்நடை மருத்துவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். குறிப்பாக கால்நடைகளின் இளம் வயதிலேயே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அந்த வகையில் அனைத்து நாய்களுக்கும் கட்டாயமாக மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
Also Read : திடீர் மாரடைப்பால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: கொரோனா தடுப்பூசி காரணம் இல்லையாம்..!
பிறப்பிலேயே தடுக்க யோசனை :
நாய்களுக்கு மரபணு பரிசோதனை செய்யப்படும் நிலையில், ஆரோக்கியமற்ற குட்டிகளை பிறப்பிலேயே தடுக்கவும், தேவையற்ற இனப்பெருக்கத்தை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதுகுறித்து ஆல்ஃபாபட் மருத்துவமனையின் மூத்த கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் வசந்த் குன்ச் கூறுகையில், “நாய்களை எந்த வகையை சேர்ந்தது என்பதை பொருத்து அதன் மரபணுக்களை சோதிக்கும் பட்சத்தில், எந்த கால சுழலில் அல்லது பருவ மாற்றத்தில் நாய்களுக்கு எத்தகைய நோய் வரும் என்பதை கண்டறிய முடியும்’’ என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dog Care, Pet animals