Home /News /lifestyle /

உடல் எடை குறைந்து விட்டதாக உற்சாகத்தில் ஜெனிலியா... எவ்வளவு கிலோ குறைத்தார் தெரியுமா?

உடல் எடை குறைந்து விட்டதாக உற்சாகத்தில் ஜெனிலியா... எவ்வளவு கிலோ குறைத்தார் தெரியுமா?

ஜெனிலியா

ஜெனிலியா

சினிமாவில் என்டரி ஆகாமல் இருந்தாலும் அவ்வப்போது தனது கணவருடன் இணைந்து மேற்கொள்ளும் சில வேடிக்கையான வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டிருப்பதோடு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
கடுமையான உடற்பயிற்சியால் 6 வாரங்களில் தனது உடல் எடையை 59.4 கிலோவிலிருந்து 55.1 கிலோவாக குறைத்துவிட்டேன் என்று உற்சாகத்துடன் இணையத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை ஜெனிலியா.

இயக்குனர் சங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஜெனிலியா. எகிறி குதித்தேன் வானம் இடித்தது என்ற பாடலில் க்யூட்டாக வலம் வந்து முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் ஜெனிலியா டிசோசா. இதனைத் தொடர்ந்து விஜய் நடித்த சச்சின், வேலாயுதம் மற்றும் ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் தன்னுடைய சுட்டித்தனமான நடிப்பின் மூலம் பெரியவர்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அனைவரின் மனதை கொள்ளைக் கொண்டார் ஜெனிலியா. இப்படத்தையடுத்து தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைத்த ஜெனிலியா தமிழ், தெலுங்கு சினிமாவில் பிஸியாக வலம் வந்தார்.

பார்ப்பதற்கு ஒல்லியான தோற்றம், வசிகரமான முகம் என பார்ப்பதற்கே க்யூட்டாக இருக்கும் ஜெனிலியா கடந்த 2012 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும் நடிகருமான ரித்தேஷ் என்பவரைத் திருமணம் செய்துக் கொண்டு மும்மைபயில் செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் நடிப்பிற்கு ஓய்வு கொடுத்தார் ஜெனிலியா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், குடும்பத்திற்காக நடிப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்தார். இந்த நாள்களில் தமிழ் ரசிகர்கள் ஜெனிலியாவை அதிகளவில் மிஸ் பண்ணிய நடிகைகளில் ஒருவராக இருந்தார்.

சினிமாவில் என்டரி ஆகாமல் இருந்தாலும் அவ்வப்போது தனது கணவருடன் இணைந்து மேற்கொள்ளும் சில வேடிக்கையான வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டிருப்பதோடு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஜெனிலியா, 6 வாரங்களில் தனது உடல் எடையை கடுமையான உடற்பயிற்சியினால் 4 கிலோ வரை குறைந்த கதையைப் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ தற்போது இணையவாசிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது. 
View this post on Instagram

 

A post shared by Genelia Deshmukh (@geneliad)


தனது இன்ஸ்டா வீடியோவில், ஜெனிலியா தனது ஜிம் பயிற்சியாளருடன் கடுமையான பயிற்சிப் பெறுவதும் அதற்கு கணவர் ரித்தேஷ் தேஷ்முக்கும் நடிகர் ஜான் ஆபிரஹாமும் உதவுவதையும் காணலாம். இதோடு இந்த வீடியோவில் பேசிய ஜெனிலியா, தன்னுடைய உடற்பயிற்சியைத் தொடங்கும் போது தான் 59.4 கிலோவாக இருந்தேன் என தெரிவித்துள்ளார். எப்படியாவது உடல் எடையை குறைத்து விட வேண்டும் என உடற்பயிற்சியைத் தொடங்கினேன் என்றும் 6 வாரங்களில் 55.1 கிலோவாக குறைந்துவிட்டதாகவும் மகிழ்வுடன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த உடல் எடைக்குறைப்பு என்னை மிகுந்த உற்சாகம் அளிப்பதாகவும், என்னுடைய இலக்கை அடையும் வரை என்னுடைய உடல் உழைப்பை தொடர்ந்து பின்பற்றுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

வெயிட் லாஸ் ஆவதற்காக இதை மட்டும் செய்யாதீங்க.. மலச்சிக்கல் ஏற்படும்.. எச்சரிக்கும் மருத்துவர்!

இதோடு உணவுக் கட்டுப்பாடு குறித்து பேசிய ஜெனிலியா, என் உடல் எடையை அறிந்துக்கொண்ட போது குற்ற உணர்ச்சியாக இருந்தது எனவும் இதனால் தான் இது போன்று கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்வதாக மகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.இப்பதிவு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதோடு வைரலாகிறது. நடிப்பில் சற்று ஓய்வு எடுத்திருந்த ஜெனிலியா, தற்போது இந்தி, மராத்தி, தெலுங்கு போன்ற படங்களில் ஒப்பந்தமாகி மீண்டும் சினிமாவில் என்ட்ரி ஆகவுள்ளார்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Fitness, Genelia D’Souza

அடுத்த செய்தி