Home /News /lifestyle /

6 வாரங்களில் சுமார் 4 கிலோ எடையை குறைத்த நடிகை ஜெனிலியாவின் ஃபிட்னஸ் ஜர்னி - வைரலாகும் இன்ஸ்டா வீடியோ.!

6 வாரங்களில் சுமார் 4 கிலோ எடையை குறைத்த நடிகை ஜெனிலியாவின் ஃபிட்னஸ் ஜர்னி - வைரலாகும் இன்ஸ்டா வீடியோ.!

Genelia

Genelia

Genelia Deshmukh | சில வாரங்களுக்கு முன்பு 59.4 கிலோ எடையுடன் தனது ஃபிட்னஸ் பயணத்தைத் தொடங்கிய நடிகை ஜெனிலியா, தனது வொர்கவுட் தருணங்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து கொண்டார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mumbai, India
துறுதுறுவென்று இருக்கும் பெண்களை ஜெனிலியா போல என்று குறிப்பிடும் பழக்கம் இன்றும் நம்மிடையே இருக்கிறது. தமிழ் திரைதுறையில் டைரக்டர் சங்கரின் பாய்ஸ் மூலம் அறிமுகமான நடிகை ஜெனிலியா, விஜய், பரத், ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் ஸ்பெஷல் இடம் பிடித்து உள்ளார்.

பிற நடிகைகளை போலவே நடிகை ஜெனிலியா தேஷ்முக்-கும் இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். ஃபிட்னஸில் கவனம் செலுத்தி வரும் நடிகை ஜெனிலியா சமீபத்தில் தனது உடல் எடையை கணிசமாக குறைக்க முடிவு செய்தார். சில வாரங்களுக்கு முன்பு 59.4 கிலோ எடையுடன் தனது ஃபிட்னஸ் பயணத்தைத் தொடங்கிய நடிகை ஜெனிலியா, தனது வொர்கவுட் தருணங்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து கொண்டார்.

இது அவரது ஃபாலோயர்ஸை பின்னடைவுகளைப் பொருட்படுத்தாமல் தங்கள் இலக்குகளை நோக்கி தொடர்ந்து முன்னேற தூண்டி உள்ளது. ஜிம் வொர்கவுட் மூலம் தனது எடை குறைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை காட்ட சமீபத்தில் வீடியோவை ஷேர் செய்தார். ஆச்சர்யமூட்டும் விதமாக 6 வாரங்களில் சுமார் 4.1 கிலோ வரை எடையை குறைத்துள்ளதாக கூறி நெட்டிசன்களை கவர்ந்துள்ளார். 59.4 கிலோவிலிருந்து 55.1 கிலோவுக்குச் செல்வது என்பது எளிதானது அல்ல.

ஜெனிலியா இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ள வீடியோவில் தனது எடை குறைப்பில் 6 வாரங்களில் நிகழ்ந்த மாற்றங்களை வரிசையாக பட்டியலிட்டு உள்ளார். அதே போல ஜெனிலியா இந்த 6 வார சவாலை ஏற்று கொள்வது குறித்த தனக்கு ஏற்பட்ட தயக்கம் மற்றும் தடுமாற்ற எண்ணங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Genelia Deshmukh (@geneliad)






59.4 கிலோவிலிருந்து 55.1 கிலோ வரை என்று கேப்ஷன் கொடுத்துள்ள ஜெனிலியா, 6 வார சவாலை நிறைய சந்தேகங்கள், தயக்கத்துடன் தான் தொடங்கினேன். ஆனால் இன்று இலக்கை அடைந்து விட்டதுடன் அதிக நம்பிக்கையுடனும், ஒழுக்கம் மற்றும் உற்சாகத்துடன் கட்டமைக்கப்பட்டதாக நான் உணர்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். ஃபிட்னஸ் எனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஒவ்வொரு முறையும் நான் மனம் சோர்ந்து போகாமல் இருக்க விரும்புகிறேன்.

Also Read : உடல் எடையை குறைக்க வெறும் வயிற்றில் அருந்த வேண்டிய பானங்கள்.!

ஃபிட்னஸ் பயணத்தில் எடை மட்டுமல்ல மாறாக தசை வளர்ச்சி, சுறுசுறுப்பு, நெகிழ்வுத்தன்மை ஆகியவையும் முக்கியமானது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் என குறிப்பிட்டு உள்ளார். எனவே என்னால் முடிந்தவரை வெளிப்படைத்தன்மையுடன் இந்த ஃபிட்னஸ் பயணத்தை தொடரப் போகிறேன், நல்ல நாட்களை முன்னோக்கி கொண்டு வருகிறேன், விரைவில் சந்திப்போம் என்று தனது போஸ்ட்டை முடித்துள்ளார் நடிகை ஜெனிலியா. 2 குழந்தைகளுக்கு தாயான ஜெனிலியா தனது ஃபிட்னஸ் பயணத்தை வெற்றியடையச் செய்வதில் தனக்கு சமமான பங்கை நிலையான ஆதரவு மூலம் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் வழங்கிய இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
Published by:Selvi M
First published:

Tags: Fitness, Genelia D’Souza, Lifestyle, Workout

அடுத்த செய்தி