முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பூண்டும் புற்று நோயும்- மருத்துவம் கூறுவது என்ன?

பூண்டும் புற்று நோயும்- மருத்துவம் கூறுவது என்ன?

புற்றுநோயைத் தடுக்கும் அல்லது புற்று நோய் வாய்ப்பை குறைக்கும் சாத்தியக்கூறுகள் பூண்டுக்கு இருக்கிறதா என்பதை எண்ணற்ற ஆய்வுகள் ஆராய்ச்சி செய்துள்ளன. இந்த ஆய்வின் முடிவுகள் பூண்டின் மருத்துவ நன்மைகள் குறித்து, புற்று நோய் தடுப்பு குறித்து ஊக்கமளிக்கும் விதமாகவே அமைந்துள்ளன.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :

புற்றுநோயைத் தடுக்கும் அல்லது புற்று நோய் வாய்ப்பை குறைக்கும் சாத்தியக்கூறுகள் பூண்டுக்கு இருக்கிறதா என்பதை எண்ணற்ற ஆய்வுகள் ஆராய்ச்சி செய்துள்ளன. இந்த ஆய்வின் முடிவுகள் பூண்டின் மருத்துவ நன்மைகள் குறித்து, புற்று நோய் தடுப்பு குறித்து ஊக்கமளிக்கும் விதமாகவே அமைந்துள்ளன.

பச்சைப் பூண்டு அல்லது சமைக்கப்பட்ட பூண்டு தான் புற்று நோய் ஏற்படும் சாத்தியக்கூறுகளை குறைக்கிறது, பூண்டு சத்து உள்ள மருந்து மாத்திரைகள் இந்தச் சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளதா எனும் ஆய்வுகள் இன்னும் தீர்க்கமான முடிவுகளை எட்டவில்லை. பூண்டின் புற்று நோய்க்கு எதிரான மருத்துவ குணங்கள் குறித்த மேம்பட்ட ஆய்வுகள் கூறுவதென்னவெனில் வாரம் ஒன்றிற்கு 6 அல்லது அதற்கு மேற்பட்ட பூண்டுப்பல் எடுத்து வந்தால் பெருங்குடல் மலக்குடல் புற்று நோய் சாத்தியத்தை 30% குறைக்கிறது.

ஒரு பல் பூண்டு எடுத்துக் கொண்டால் வயிற்றுப்புற்று நோய் ரிஸ்க்கை 50% குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் தற்போதைய சூழ்நிலையில் ஆண்களை அச்சப்பட வைக்கும் முக்கிய நோய்களுள் ஒன்று புரோஸ்டேட் புற்றுநோய் (prostate cancer - விதைப்பை புற்றுநோய்) இருக்கின்றது. இந்த புரோஸ்டேட் சுரப்பியில் வரும் புற்றுநோய் பலவகையில் பரவுகிறது இது குறிப்பாக புகைப்பிடித்தல் மூலமாக பரவுகிறது என்று கூறுகின்றனர். இந்த புரோஸ்டேட் கேன்சர் ரிஸ்க்கையும் பூண்டு குறைக்கிறது என்கிறது ஆய்வுகள்.

ஷாங்காய் தேசிய புற்றுநோய் ஸ்தாபனம் தன் ஆய்வில் தினமும் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் புரோஸ்டேட் கேன்சர் சாத்தியங்கள் 50% குறைகிறது என்று கூறியுள்ளது. ஆனாலும் புற்றுநோய் எதிர்ப்புச் செயல்பாடுகளை தூண்ட நாளொன்றுக்கு எவ்வளவு பூண்டு சாப்பிட வேண்டும் என்ற அளவில் இன்னும் ஆய்வாளர்கள் மத்தியில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

அதே போல் பச்சைப்பூண்டு சிறந்ததா, சமைத்த பூண்டு சிறந்ததா என்பதிலும் ஆய்வு கருத்தொற்றுமை ஏற்பட்டதாகத் தெரியவில்லை, ஆனால் பூண்டின் முழு ஊட்டச்சத்துப் பலனை அடைய அதை நறுக்கியோ அல்லது நசுக்கியோ சமைக்கும் முன் 10 நிமிடங்கள் வெறுமனே விட்டுவைக்க வேண்டும் என்பதே சரி என்று ஆய்வாளர்கள் கூறுவதில் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பூண்டில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியான அலிசின் மற்றும் அதிலிருந்து பெறப்படும் சத்துக்களின் முழுப்பயனை அடைய முடியும்.

பூண்டின் உடல்நலப் பயன்கள்:

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும், உயர் ரத்த கொழுப்பைக் குறைக்கும்.

சில வகை புற்று நோயை தடுக்கும், அல்லது எதிர்த்துப் போராடும்.

பூண்டில் உள்ள பாக்டீரியாவுக்கு எதிரான வைரஸுக்கு எதிரான சத்துக்கள் இந்த கிருமியின் விளைவுகளை திறம்பட தடுக்கும்.

மூக்கடைப்பைப் போக்கும்.

பூண்டின் பாதகங்கள்:

வாய் நாற்றம்.

சில சமயங்களில் பச்சைப்பூண்டு சீரணமாகாது.

நேரடியாகக் கையாள்வது சருமத்தில் பிரச்சனைகளையும் சளிச்சவ்வுகளையும் பாதிக்கலாம்.

மூலிகை மருத்துவர்களும் நாட்டுப்புற மருத்துவர்களும் காலங்காலமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பூண்டைக் கொண்டு எண்ணற்ற நோய்களைக் குணப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. பண்டைய எகிப்தியர்கள் உடல் வலுவை அதிகரிக்க பூண்டை பயன்படுத்தியுள்ளனர். கிரேக்கர்கள் பூண்டை மலமிளக்கியாகப் பயன்படுத்தியிருக்கின்றனர். சீனர்கள் காலங்காலமாக ரத்த அழுத்தத்தை குறைக்க பூண்டை மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

மத்திய காலங்களில் அதிகமாக பூண்டு சாப்பிடுவதன் மூலம் பிளேக் நோயைத் தடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இன்றைய ஆய்வுகளில் பூண்டின் மருத்துவப் பயன்களில் புற்று நோய் தடுப்பு/எதிர்ப்புக்கூறுகளையும் ரத்தக்கட்டு தன்மைகளை குறைப்பதையும், பூஞ்சைக்கு எதிரானதாகவும், உயர் ரத்த அழுத்தத்துக்கு எதிராகவும், வைட்டமினாகவும், கொழுப்பை குறைக்கும் சத்தாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில ஆய்வுகள் சாதாரண சளி, ஃப்ளூ காய்ச்சல், மற்றும் பிற கிருமித்தொற்றுகளுக்கும் பூண்டின் குணப்படுத்தும் குணங்களை நிரூபித்துள்ளனர். பூண்டு கொலஸ்ட்ராலை குறைக்காது என்று வேறு சில எதிர் ஆய்வுகள் வந்தாலும் இருதய நோய்க்கு பூண்டின் மருத்துவக் குணங்களை ஆய்வு செய்திருக்கின்றனர். இதில் உள்ள அலிசின் என்ற ஒரு பொருள் ரத்தக்கட்டு தொடர்புடைய இருதய நோய்களை, ரத்தக்குழாய் நோய்களைத் தடுப்பதாகவே கூறுகின்றனர்.

First published:

Tags: Garlic, Health, Health Benefits