Home /News /lifestyle /

ஆன்லைன் வழியாக இலவச ஒமைக்ரான் டெஸ்ட் - முற்றிலும் போலி... ஏமாற வேண்டாம்..!

ஆன்லைன் வழியாக இலவச ஒமைக்ரான் டெஸ்ட் - முற்றிலும் போலி... ஏமாற வேண்டாம்..!

ஆன்லைன் வழியாக இலவச ஒமைக்ரான் டெஸ்ட்

ஆன்லைன் வழியாக இலவச ஒமைக்ரான் டெஸ்ட்

கொரோனா பாதிப்புகளால் நாம் அனைவரும் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், சைபர் கிரிமினல்கள் ஒமைக்ரான் பரவலை திருடுவதற்கான ஒரு வாய்ப்பாக மாற்ற முயற்சிக்கின்றனர். 

உலகம் முழுவதும், புதிய கோவிட்-19 வேரியண்ட் ஆன ஓமிக்ரானின் விளைவாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளால் நாம் அனைவரும் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், சைபர் கிரிமினல்கள் ஒமைக்ரான் பரவலை திருடுவதற்கான ஒரு வாய்ப்பாக மாற்ற முயற்சிக்கின்றனர்.

அதாவது ஆன்லைன் வழியாகவே இலவசமாக ஒமைக்ரான் சோதனையை வழங்குவதாக உறுதியளித்து, அறிகுறிகள் உள்ளவர்களையும், சாத்தியமான பாதிப்பு இருக்கலாம் என்கிற அச்சத்தினை கொண்டவர்களையும் சைபர் குற்றவாளிகள் குறிவைப்பதாக உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs - MHA) எச்சரிக்கை விடுத்துள்ளது.

சைபர் கிரிமினல்கள் மற்றும் ஆன்லைன் மோசடி செய்பவர்கள் ஒமைக்ரான் சோதனைக்கான பிசிஆர் டெஸ்ட் தொடர்பான போலி மின்னஞ்சல்களை மால்வேர் லின்க்ஸ் மற்றும் பைல்ஸ் உடன் (அதாவது தீங்கிழைக்கும் இணைப்புகள் மற்றும் கோப்புகளுடன்) அனுப்புகின்றனர்.

"சுகாதார நெருக்கடியின் மீது அதிக கவனம் செலுத்துவதன் காரணமாக இணைய பாதுகாப்பின் மீது அரசாங்கத்தால் அதிக கவனம் செலுத்தமுடியாத நேரத்தை, சைபர் குற்றவாளிகள் மற்றும் ஆன்லைன் மோசடிக்காரர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.இப்படியான சைபர் குற்றவாளிகள் குடிமக்களை ஏமாற்றுவதற்கு புதிய வழிகளைக் கண்டுபிடிப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. வழக்கமான ஒன்றுதான்; ஆனால் ஒமைக்ரான் போன்ற மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விடயங்களிலும் கூட சைபர் குற்றங்கள் நடப்பது சற்று வருத்தம்.

சமீப காலமாக ஒமைக்ரான் வேரியண்ட்டை தொடர்புடைய சைபர் கிரைம்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன. சைபர் கிரைம் குற்றவாளிகள் பலவிதமான யுக்திகளை பயன்படுத்தி சைபர் கிரைம்களை லாபகரமாக பயன்படுத்துகின்றனர், இது ஒமைக்ரான் பரவல் போன்ற சூழ்நிலையையிலும் கையாளப்பட்டு, அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்" என்று எம்எச்ஏ-வின் சைபர் மற்றும் தகவல் பாதுகாப்புப் பிரிவின் ஆலோசனை அறிக்கை கூறுகிறது.

தொற்று அதிகரிக்கும் சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கும் இந்த 3 செயல்களை தவிருங்கள்...

ஒமைக்ரான் சோதனை என்கிற பெயரில் நடத்தப்படும் இதுபோன்ற ஆன்லைன் மோசடிகள், அரசு மற்றும் தனியார் சுகாதார சேவைகளின் அடையாளத்தை அப்படியே பின்பற்றி, அப்பாவி மக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் ஒரு முயற்சியாகும்.

எடுத்துக்காட்டிற்கு, அறிகுறிகள் உள்ளவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் ஆன்லைன் வழியாக கோவிட்-19 ஒமைக்ரான் சோதனையை முன்பதிவு செய்ய, அரசு அல்லது தனியார் சுகாதார சேவைகளின் யூஸர் இன்டர்பேஸை (UI) பிரதிபலிக்கும் ஒரு போலி வலைத்தள இணைப்புகளை பெறுவர், இந்த போலி இணைப்புகளே மால்வேர் லின்க்குகள் ஆகும், இது உங்களுக்கு சைபர் குற்றவாளிகளின் வழியே வந்து சேரும். அவைகளை கிளிக் செய்தால் உங்களுக்கான பிரச்சினை ஆரம்பம் ஆகும்.உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின் படி, ஆன்லைன் வழியாக இலவச ஒமைக்ரான் பிசிஆர் சோதனை என்கிற பெயரின் கீழ் நடக்கும் இந்த மோசடியானது முழுக்க முழுக்க மக்களின் நிதி சார்ந்த தகவல், தனிப்பட்ட தகவல் மற்றும் வங்கிச் சான்றுகளை திருடுதல், அடையாள திருட்டு உட்பட பல வகையான சைபர் குற்றங்களைச் செய்வதையே நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த உணவுப் பொருட்களை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் நஞ்சாகும் : கவனமாக இருங்கள்...

ஆன்லைன் வழியாக இலவச ஒமைக்ரான் டெஸ்ட் என்கிற இந்த சைபர் க்ரைம் வலையில் விழாமல் இருப்பது எப்படி?

01. சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட, இணையதளத்தின் டொமைன் பெயர் மற்றும் யூஆர்எல் -ஐ முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.

2. 'இலவசம்' என்கிற வார்த்தை குறித்து ஜாக்கிரதையாக இருக்கவும்! பெரும்பாலான போலி மற்றும் மால்வேர் இணைப்புகள் அல்லது இணையதளங்கள் இலவசம் அல்லது தள்ளுபடி சலுகைகளை வழங்குவதன் வழியாகவே மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடப்படுகின்றன.

3: இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான ஆன்லைன் செயல்பாடுகளை கண்டால், உடனடியாக இந்திய அரசாங்கத்தின் சைபர் கிரைம் போர்ட்டலில் - cybercrime.gov.in புகார் அளிக்கவும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Corona positive, Omicron

அடுத்த செய்தி