ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மூட்டைப் பூச்சிகளைக் கொல்ல அவசர தொலைபேசி எண் அறிவித்த பிரான்ஸ்..! என்ன காரணம்..?

மூட்டைப் பூச்சிகளைக் கொல்ல அவசர தொலைபேசி எண் அறிவித்த பிரான்ஸ்..! என்ன காரணம்..?

மூட்டை பூச்சி

மூட்டை பூச்சி

  • News18
  • 1 minute read
  • Last Updated :

பிரான்ஸ் தற்போது எதிர்கொண்டு வரும் தலையாயப் பிரச்னை வினோதமானது. மூட்டைப் பூச்சிகளால் தொந்தரவுகளை சந்தித்து வருகிறது. இதற்காக அவசர தொலைபேசி எண்ஒன்றை அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து படுக்கை எதிர்ப்பு இயக்கத்தையும் முன்னெடுத்து வருகிறது.

அதாவது, படுக்கும் மெத்தைகளைக் குறிவைக்கும் இந்த மூட்டைப் பூச்சிகள் உடல் ஆரோக்கியத்திற்கு பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதனால் வீடு மற்றும் ஹோட்டல்களில் இருக்கும் மெத்தைகளில் அதிக மூட்டைப் பூச்சிகளைக் கண்டால் உடனே இந்த அவசர எண்ணிற்குத் தொடர்பு கொண்டு உதவியைப் பெறலாம் என்று கூறியுள்ளது.

மேலும் மூட்டைப் பூச்சிகளை ஒழிக்கும் வரை மெத்தை மற்றும் சோஃபாக்களைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள் எனவும் எச்சரித்துள்ளது.

இந்த மூட்டைப் பூச்சிகள் கொசுக்களைப் போல் மனிதர்களைக் கடிக்கும் தன்மைக் கொண்டது. ஒரு இரவில் 90 முறைக் கடிக்குமாம். இவை எந்த நோய்த் தொற்றையும் உண்டாக்காது என்று குறிப்பிட்டுள்ளது. இருந்தாலும் அவை கடிக்கும் இடங்களில் கொசு கடித்தால் உண்டாவது போல் தோல் சிவத்தல், அரிப்பு, வீக்கம் போன்றவை ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் பிரான்ஸ் முன்னெடுத்துள்ள படுக்கை எதிர்ப்புப் போராட்டத்தின் மூலம் 100 நாட்களுக்குள் அனைத்து மூட்டைப் பூச்சுகளையும் ஒழிக்க வேண்டும் என சபதம் எடுத்துள்ளது. பிரான்ஸில் சில ஹோட்டல்கள் மூட்டைப் பூச்சிக் காரணமாக தற்காலிகமாக மூடு விழா நடத்தியுள்ளன. 2018 ஆண்டு மட்டும் வீடு, அப்பார்ட்மெண்டுகள், ஹோட்டல்கள் என 400,000 மூட்டைப் பூச்சிகளை அழித்துள்ளதாக கூறியுள்ளது.

First published:

Tags: France