முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கர்ப்ப காலத்தின் 4-வது ட்ரைமெஸ்டர் பற்றி தெரியுமா..? கவனிக்க தவறும் விஷயங்கள்...

கர்ப்ப காலத்தின் 4-வது ட்ரைமெஸ்டர் பற்றி தெரியுமா..? கவனிக்க தவறும் விஷயங்கள்...

4-வது ட்ரைமெஸ்டர்

4-வது ட்ரைமெஸ்டர்

அப்பாடா ஒருவழியாக குழந்தை நல்லபடியாக பிறந்துவிட்டது, இனி ஒரு கவலையும் தேவையில்லை என்று கருதும் பெண்கள் இந்த 4ஆவது ட்ரைமெஸ்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், இந்தக் காலமும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொதுவாக ஒரு பெண்ணின் கர்ப்ப காலத்தை 3 மாத கால அடிப்படையில் ஓர் ட்ரைமெஸ்டர் என பிரிக்கின்றனர். அந்த வகையில் குழந்தையை பெற்றெடுக்கும் வரையில் 3 ட்ரைமெஸ்டர்களும் கணக்கிடப்படுகின்றன. 4ஆவது ட்ரைமெஸ்டர் என்பது குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்களை குறிக்கிறது.

அப்பாடா ஒருவழியாக குழந்தை நல்லபடியாக பிறந்துவிட்டது, இனி ஒரு கவலையும் தேவையில்லை என்று கருதும் பெண்கள் இந்த 4ஆவது ட்ரைமெஸ்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், இந்தக் காலமும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இந்த சமயத்தில் என்னெனென்ன கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

4-வது ட்ரைமெஸ்டர் என்றால் என்ன..?

குழந்தை பிறந்த சோர்வில் இருந்து மீள்வதும், அதற்கு அடுத்து பச்சிளம் குழந்தை மீது அதிக கவனம் கொள்வதும் இந்த 4ஆவது ட்ரைமெஸ்டரின் முக்கிய தேவையாகும். கர்ப்ப காலத்தைப் போலவே இந்த சமயத்திலும் குழந்தையை பராமரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக 9 மாதங்கள் தாயின் கருவறையில், பனிக்குட நீர் சூழ இருந்த குழந்தையின் உடலானது, வெளியுலகச் சூழலுக்கு ஏற்றாற்போல தன்னை மாற்றிக் கொள்வதில் மிகுந்த சவால்களை சந்திக்கும். இரவு, பகல் என்பதெல்லாம் குழந்தைக்கு தெரியாது. எப்போது வேண்டுமானாலும் தூங்குவதும், பால் குடிப்பதும், இயற்கை உபாதைகளை வெளியேற்றுவதுமாக இருக்கும்.

அரவணைப்பு மற்றும் தாளாட்டு

தாயின் அரவணைப்பும், தாலாட்டும் தான் ஒரு குழந்தைக்கு சொர்க்கம், அருமருந்து எல்லாமே. இதைச் செய்யும்போது தான் கருவறைக்குள் கிடைத்த அதே பாதுகாப்பு வெளியிலும் கிடைப்பதாக குழந்தை உணரத் தொடங்கும். நம் தோளில் குழந்தையை அரவணைத்துக் கொள்ளும்போது, அது பாதுகாப்பாக உணருகிறது.

குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடும் முன் தம்பதிகள் எடுக்க வேண்டிய முக்கியமான பரிசோதனைகள்..!

தாய்க்கு 4ஆவது ட்ரைமெஸ்டர் எப்படி..?

கடந்த 9 மாதங்களாக குழந்தையை வயிற்றில் சுமக்கும்போது எத்தகைய சவால்களை ஒரு தாய் எதிர்கொண்டாரோ, அதேபோல 4ஆவது ட்ரைமெஸ்டர் என்பதும் சவால் மிகுந்தது தான். குறிப்பாக, ஒரு தாய் சரியான நேரத்திற்கு சாப்பிட்டு, தூங்கி எழுந்திருக்க முடியாது.

நேரம் காலம் பார்க்காமல் குழந்தைக்கு பாலூட்டுவது, குழந்தையை தாளாட்டி தூங்க வைப்பது, அதன் இயற்கை உபாதைகளை சுத்தம் செய்வது என்று அடுத்தடுத்த கடமைகளால் ஒரு தாய் சோர்ந்து விடுவார்.

உதவி கேட்க தயங்க வேண்டாம் :

பல சிக்கல்கள், இன்னல்களுக்கு மத்தியில் தன்னையும் கவனித்துக் கொண்டு, குழந்தையையும் கவனித்துக் கொள்வது ஒரு தாய்க்கு மிகுந்த மனச்சோர்வு மற்றும் உடல்சோர்வு ஆகியவற்றை கொடுக்கும். இத்தகைய தருணங்களில் எல்லாவற்றையும் நாமே செய்துவிட முடியும் என்று எண்ணிக் கொண்டிருக்காமல் தயக்கமின்றி வீட்டில் உள்ள பிறருடைய உதவியை நாடலாம்.

குறிப்பாக, நீங்கள் ஓய்வெடுக்க வேண்டிய சமயத்தில் குழந்தையை மற்றொருவர் பொறுப்பில் விட்டுவிட்டு நன்றாக தூங்கி எழ வேண்டும்.

First published:

Tags: Pregnancy care, Pregnancy changes