முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கொரோனா பாதிப்பால் தென்கிழக்கு ஆசியாவில் ஐந்தில் நான்கு பேரை மனநல உதவிக்காக அணுக முடியவில்லை

கொரோனா பாதிப்பால் தென்கிழக்கு ஆசியாவில் ஐந்தில் நான்கு பேரை மனநல உதவிக்காக அணுக முடியவில்லை

மனநல ஆலோசனை

மனநல ஆலோசனை

உலக மக்கள் தொகையில் கால் பகுதிக்கும் அதிகமானோர் வாழ்கின்ற ஒரு நாட்டில், ஒவ்வொரு 1,00,000 மக்களுக்கும் ஒரு மனநல மருத்துவருக்கும் குறைவாகவே உள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தில் மனநல சேவைகள் தேவைப்படும் ஐந்தில் நான்கு பேரை அணுக முடியவில்லை என்று தென்கிழக்கு ஆசியாவின் உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனரான டாக்டர். பூனம் கேத்ரபால் சிங் கடந்த சனிக்கிழமையன்று தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் ஒரு கணக்கெடுப்பின்படி, உலகளவில் 93 சதவீத நாடுகளின் முக்கியமான மனநல சுகாதார சேவைகளை கொரோனா நோய்த்தொற்று பாதித்துள்ளது. மனநலம், உலகளாவிய மனநல கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக களங்கத்திற்கு எதிராக வாதிடுவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒட்டுமொத்த நோக்கத்துடன், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ஆம் தேதியன்று 'உலக மனநல தினம்' அனுசரிக்கப்படுகிறது.

"மனநல சுகாதார ஊழியர்களின் மிகக்குறைந்த எண்ணிக்கையை இப்பகுதி கொண்டுள்ளது. தரமான மனநல சுகாதாரத்தில் முதலீடுகளை அளவிடுவதன் மூலம், பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் மன ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் பின்னடைவை கணிசமாக மேம்படுத்த முடியும்" என்று டாக்டர் கேத்ரபால் கூறினார். மேலும் அவரின் கூற்றுப்படி, உலகளவில் 10 பேரில் ஒருவருக்கு மனநல நிலை உள்ளது. பெரும்பாலான மனநல நிலைமைகளின் ஒப்பீட்டளவில், குறைந்த செலவில் திறம்பட சிகிச்சையளிக்க முடியும்.

coronavirus paramedical

ஆனால், உலக மக்கள் தொகையில் கால் பகுதிக்கும் அதிகமானோர் வாழ்கின்ற ஒரு நாட்டில், ஒவ்வொரு 1,00,000 மக்களுக்கும் ஒரு மனநல மருத்துவர் குறைவாக உள்ளனர் என்றார். "கொரோனா நோய்த் தொற்றானது, பரந்த சமூக மற்றும் பொருளாதார தாக்கத்தால் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் தரமான மனநல சுகாதாரத்தில் முதலீடு செய்ய வேண்டிய முக்கியமான தேவையை எடுத்துக்காட்டுகிறது. மேலும், இது சுகாதார செலவினங்களின் ஒட்டுமொத்த அதிகரிப்பின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும்" என்றும் மனநல மருத்துவங்களுக்கான சேவைகள் மற்றும் மனநல மருந்துகளுக்கான அணுகல் உட்பட, சமீபத்திய மாதங்களில் குறிப்பிடத்தக்க இடையூறுகளை சந்தித்துள்ளன.

கொரோனா விதிமுறைகளை பெண்கள்தான் அதிகம் ஃபாலோ பண்றாங்க - ஆய்வில் தகவல்

இது டெலிமெடிசின் போன்ற புதுமையான சேவை விநியோக மாதிரிகள் மற்றும் மருந்துகளுக்கான வீட்டு விநியோகங்கள் போன்ற அணுகல் ஆகிய புதிய வழிகள் மூலம் உலக சுகாதார அமைப்பானது, உறுப்பு நாடுகளுக்கும் ஆதரவளித்து வருகிறது என்றும் டாக்டர். கேத்ராபால் கூறினார். "கோவிட் -19 மறுமொழி முழுவதும் தேவை. குறிப்பிட்ட, கலாச்சார ரீதியான உணர்திறன் மிக்க மனநலப் பாதுகாப்பு மற்றும் சிகிச்சைகள் வழங்குவதை வலுப்படுத்த பிராந்தியத்தின் நாடுகளுக்கும், பங்குதாரர்களுக்கும் உலக சுகாதார அமைப்பு தனது முழு ஆதரவைத் தொடர்ந்து வழங்கும்.

மேலும், தயார்நிலை மற்றும் மறுமொழி திட்டமானது பிராந்தியத்தின் முன்னுரிமைகள், உலக சுகாதார அமைப்பின் "மூன்று பில்லியன்" இலக்குகள் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளாகும்". தென்கிழக்கு ஆசியா பிராந்திய இயக்குனரான அவர் மேலும் கூறுகையில், நெருக்கடி ஏற்பட்டதால் தான் வாய்ப்பு கிடைக்கிறது. ஆகையால் பிராந்தியத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஆரோக்கியமாகவும், நெகிழ்ச்சியுடனும் இருக்க அவர்களுக்கு தேவையான மனநல சுகாதார மற்றும் பயனுள்ள சிகிச்சைகளை அணுக முடியும் என்பதை உறுதி செய்வதில் முன்னேற்றத்தை துரிதப்படுத்த இந்த உலக மனநல தினத்தை நாம் கைப்பற்ற வேண்டும்.

மேலும் தற்கொலை தடுப்பு, ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறுகள் மற்றும் மது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பயன்பாடு குறித்த குறிப்பிட்ட பிராந்திய உத்திகள், முதன்மையான சேவைகளை வலுப்படுத்துவது மற்றும் பன்முகத்தன்மைகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகின்றன. "அவசரகால அமைப்புகளில் மனநலம் மற்றும் உளவியல் ஆதரவு சேவைகளை வழங்குவதில் இப்பகுதி ஒரு உலகளாவில் முக்கிய கவனம் பெறுகிறது.

இதற்காக உலக சுகாதார அமைப்பின் எம்ஹெச் ஜி.ஏ.பி திட்டமானது மதிப்புமிக்கதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.அனைவருக்கும் ஒரு கடுமையான நிகழ்வைத் தொடர்ந்து   குறிப்பிட்ட, கலாச்சார ரீதியாக உணர்திறன் மிக்க மனநல பராமரிப்புக்கான அணுகல், ஒரு வலுவான சமூக மற்றும் பொருளாதார மீட்சியை ஊக்குவிப்பதற்கும், சேவை வழங்கலின் அனைத்து மட்டங்களிலும் மனநலப் பாதுகாப்பு முக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கும் இன்றியமையாதது" என்றார்.

First published:

Tags: Mental Health