அம்மாக்கள் கவனத்திற்கு : மகள் பூப்படைதலைப் பற்றி முன்கூட்டியே கூறி பக்குவப்படுத்துங்கள்..!

உன் கனவுகளுக்கு தடையாக இதைக் கருத வேண்டாம் எனத் தெளிவாகப் புரிய வைத்துப் பக்குவப்படுத்துங்கள்..!

news18
Updated: May 30, 2019, 1:51 PM IST
அம்மாக்கள் கவனத்திற்கு : மகள் பூப்படைதலைப் பற்றி முன்கூட்டியே கூறி பக்குவப்படுத்துங்கள்..!
தாய் மகளிடம் பூப்படைதல் பற்றி பேசுதல் அவசியம்
news18
Updated: May 30, 2019, 1:51 PM IST
மகள்களைப் பெற்ற ஒவ்வொரு அம்மாவிற்குக்கும் தங்கள் மகள் 10 வயதைக் கடந்துவிட்டாலே ஒருவித பயம் வந்துவிடும். தன் குழந்தை வயதிற்கு வந்துவிட்டால் அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி இருக்குமா... அந்தக் காலகட்டத்தில் அவளை எவ்வாறு கவனித்துக் கொள்வது என்பன போன்ற பல கேள்விகள் அவர்களுக்குள் எழும்.

பூப்படைந்த பின் மகள் அதை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறாள் என்று பயப்படுவதை விட அவளை அதற்கு முன்னரே தயார்படுத்தி, பக்குவப்படுத்தினால் அந்தக் குழந்தைக்கும் அதை ஏற்றுக்கொள்வதற்குக் பக்குவம் வரும்.
இன்றைய காலகட்டத்தில் உணவுப்பழக்கத்தால் 10 முதல் 12 வயதிற்குள்ளேயே நிறைய பெண்கள் பூப்படைந்துவிடுகின்றனர். இதனால் முன் கூட்டியே உங்கள் குழந்தைக்கு முதல் மாதவிடாய் குறித்து பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டியக் கட்டாயம் இருக்கிறது.
முதலில் உங்கள் மகளுக்கு மாதவிடாய் குறித்து பேசும்போது ஒரு தோழியாகவோ அல்லது பள்ளியில் ஆசிரியர் பாடத்தை விளக்குவது போன்றோ விரிவாகச் சொல்லிக் கொடுங்கள். அப்போதுதான் உங்கள் மகளுக்கு ஏதேனும் கேள்விகள் , சந்தேகங்கள் இருந்தால் வெளிப்படையாகக் கேட்பார்.
”நம் இந்தியக் கலாச்சாரத்தில் மாதவிடாய் என்பது வெளியே சொல்லக் கூடாத விஷயமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. முதலில் அது குறித்த தெளிவை அளியுங்கள்” என்கிறார் கௌரி சிங்ஹல். இவர் ’FLOH Tampons' நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார்.

Loading...

”மாதவிடாய் என்பது ஒவ்வொரு மாதமும் நிகழக் கூடிய சாதாரண விஷயமே. கருவுறுதலை எவ்வாறு இந்த சமூகம் கொண்டாடுகிறதோ அதேபோல் இந்த மாதவிடாயையும் ஒரு சாதாரண விஷயமாகக் கடந்து செல்ல வேண்டும்.
இந்த தவறானக் கண்ணோட்டத்தை தாய் கூறினால்தான் மகளும் சரியாக புரிந்துகொள்வார். இனி வரும் தலைமுறையிலாவது இந்த மாதவிலக்கின் கண்ணோட்டம் மாறட்டும்” என கூறுகிறார் கௌரி.

10 வயது என்பது இரத்தத்தைப் பார்த்தாலே பதறக் கூடிய வயது என்பதால் முதலில் உதிரப் போக்கு பற்றித் தெளிவாக விளக்குவது அவசியம். மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கு என்பது மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு வரும். அதன் அளவு 30 முதல் 60 மி.லி வரும். சிலருக்கு 80 மி.லி கூட வரலாம். இதை உங்கள் மகளுக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.அதேபோல் ”இந்த விளம்பரங்களில் காட்டக் கூடிய நீல நிறம் போன்று இரத்தம் வராது. அது மாதவிடாய் இரத்தத்தை அசிங்கமாக கருதுவதுபோல் உள்ளது. எனவே உங்கள் மகளுக்கும் அதுபோன்ற எண்ணம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். அசிங்கமாகக் கருத வேண்டாம். அது எல்லோருக்கும் வரும் இரத்தம்போல் சிவப்பாகவே வரும் என விளக்குங்கள்.இந்த மாதவிடாய் என்பதை உங்கள் மகளுக்கு மட்டுமல்ல உடன் சகோதரர் இருந்தாலும் அவருக்கும் இது குறித்த விழிப்புணர்வை அளித்தல் அவசியம்” என்கிறார் கௌரி.

இந்தக் காலகட்டத்தில் உங்கள் மகளின் சுத்தம் குறித்தும் பேசுவதும் அவசியம் என்கிறார். ”மாதவிடாய் நாட்களில் உடல் ஆரோக்கியத்தைப் பேணுதல் அவசியம். அடிக்கடி பேட் மாற்றுவது அவசியம் . குறைந்தது ஒரு நாளைக்கு 4 மணி நேரத்திற்கு ஒரு முறை பேட் மாற்ற வேண்டும். கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும். உள்ளாடைகளை சரியாக பராமரிக்க வேண்டும். பேட் மாற்றியவுடன் அதை சரியாக பேப்பர் அல்லது பைகளில் போட்டு குப்பைத் தொட்டியில்தான் போட வேண்டும்” என விளக்குங்கள் என்கிறார்.அதேபோல் மாதவிடாய் நாட்களில் ஏற்படக் கூடிய உடல் மாற்றம், வயிறு வலி, தலை வலி, முதுகு வலி, உடல் அசௌகரியம் போன்றவற்றையும் எடுத்துச் சொல்வது அவசியம். இது பற்றிச் சொல்லும் போது சாதரணமாகச் சொல்லுங்கள். பயமுறுத்துவது போல் சொல்லாதீர்கள்.

”அந்த பேட் வைக்கும்போது அசௌகரியமாக உணர்ந்தாலும் அதை உங்களிடம் தெரியப்படுத்தச் சொல்லுங்கள். மாதவிடாய் நாட்களில் எந்த வேலையும் செய்யக் கூடாது என்றில்லை. எல்லாவற்றையும் செய்யலாம். அது சோர்ந்து அமர்ந்து கொள்ள நோய் அல்ல. அது நம் உடலை சுத்திகரிக்கும் நிலைதான் எனக் கூறுங்கள். நீ நினைத்ததை செய்யலாம். ஓடலாம், ஆடலாம், நீச்சல்கூட அடிக்கலாம். உன் கனவுகளுக்கு தடையாக இதைக் கருத வேண்டாம் எனத் தெளிவாகப் புரிய வைத்துப் பக்குவப்படுத்துங்கள் என நிறைவாகப் பேசுகிறார் கௌரி சிங்ஹல்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...