முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பருவமழை தொடங்கிருச்சு... கூடவே சளி, காய்ச்சலும் பாடாய்படுத்துதா..? நிவாரணம் தரும் 3 உணவுகள்

பருவமழை தொடங்கிருச்சு... கூடவே சளி, காய்ச்சலும் பாடாய்படுத்துதா..? நிவாரணம் தரும் 3 உணவுகள்

மழைக்கால தொற்று

மழைக்கால தொற்று

சளி, காய்ச்சல் போன்ற உடல்நலப்பிரச்சனைகளுக்கு எல்லாம் மருத்துவமனைக்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வீட்டிலேயே இந்நோயைக்குணப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் குறிப்பிட்ட உணவுகளை நம்முடைய அன்றாட வாழ்வில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பருவகாலங்களில் ஏற்படும் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவற்றைக்குணப்படுத்துவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சூப், பூண்டு, இளநீர் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

கோடைக்கால வெயில் வாட்டிவதைத்த நிலையில், உடலுக்கும் மனதிற்கும் இதமளிக்கும் விதமாக ஆரம்பமாகிறது பருவமழை. தற்போது நாட்டின் பெரும்பாலானப் பகுதிகளில் பருவமழைக்காலம் ஆரம்பமாகிவிட்டது. ஆனால் கூடவே பருவநிலை மாற்றங்களால் சில உடல்நலப்பிரச்சனைகளும் தொடங்கிருச்சு..ஆம் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையினால் சளி, காய்ச்சல், இருமல் போன்ற உடல்நல அசௌகரியங்களும் நமக்கு ஏற்படுத்துகிறது.

இப்பிரச்சனைகளை சரிசெய்வதற்காக மருத்துவமனைகளுக்குச் சென்றாலும் தற்போது உள்ள காலக்கட்டத்தில் பரிசோதனை செய்துப்பார்த்தால், கொரோனா தொற்று பாதிப்பு என்று சொல்லிவிடுவார்களோ? என்ற அச்சத்தில் பெரும்பாலான மக்கள் மருத்துமவனைக்கு செல்வதே இல்லை. இதுப்போன்ற சூழலில் சளி, காய்ச்சல் போன்ற உடல்நலப்பிரச்சனைகளுக்கு எல்லாம் மருத்துவமனைக்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வீட்டிலேயே இந்நோயைக்குணப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் குறிப்பிட்ட உணவுகளை நம்முடைய அன்றாட வாழ்வில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

பருவகால தொற்றுகளைக் குணப்படுத்தும் உணவுமுறைகள்:

மழைக்காலங்களில் அதிகளவில் சளி தொல்லைத்தான் ஒரு வாரகாலத்திற்கு மக்களைப் பாடாய்படுத்தும். எப்படா… இதிலிருந்து விடுபடுவதற்குக் கீழ்வரும் உணவுமுறைகளைக் கொஞ்சம் மறக்காமல் பாலோ பண்ணுங்க…

முதலில் சூப்:

பருவமழைக்காலங்களில் ஏற்படும் சளி தொல்லையைக் குணப்படுத்துவதற்கு நீங்கள் சூடானப் பானங்களை உட்கொண்டால் தொண்டைக்கு இதமாக இருக்கும். குறிப்பாக காய்கறிகள், மட்டன், நண்டு போன்ற சூப்களை பருகும் போது வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நமது உடலுக்கு கிடைக்கிறது. இது ஓரளவிற்கு சளிப்பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது.

தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு தும்மல் , சளி வர என்ன காரணம்..? மருத்துவர்கள் விளக்கம்!

பூண்டு :

நம்முடைய அனைத்து சமையலறைகளில் கிடைக்கும் மசாலா வகைகளில் ஒன்று தான் பூண்டு. இதில் உள்ள பல்வேறு மருத்துவக்குணங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி மற்றும் காய்ச்சலின் தீவிரத்தைக்குறைக்கிறது. எனவே பூண்டை அப்படியே சாப்பிடாமல், சளி தொல்லை உள்ளவர்கள் முதலில், 10,15 பூண்டுப்பற்களை உரித்து 50 மில்லி பாலுடன் அதே அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். பின்னர் அதில் சிட்டிகை மஞ்சள் தூள், மிளகுப்பொடி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி நன்றாக கடைய வேண்டும். பின்னர் இனிப்பிற்கு பனங்கற்கண்டு சேர்த்து இரவு தூங்கும் போது அருந்தினால் மூக்கடைப்பு, நெஞ்சு சளி போன்றவற்றை குணமாக்கிவிடும்.

இளநீர்:

பருவகாலங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவும் போது தண்ணீர் குடிக்க தோன்றுவதில்லை. இது போன்ற சூழலில் இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் உங்களது உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக உள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா... நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 யோகாசனங்கள்...

மேற்கண்ட இந்த உணவுப்பொருள்களை தவிர சிக்கன், முட்டை, பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என ஊட்டச்சத்து நிபுணர் தெரிவிக்கின்றனர். இது நிச்சயம் பருவகாலங்களில் ஏற்படும் நோய் தொற்றிலிருந்து உங்களை குணப்படுத்த உதவியாக இருக்கும். எனவே வரும் மழைக்காலங்களில் இது போன்ற உணவுமுறை உள்கொண்டு உங்களது உடல் ஆரோக்கியத்தை நீங்கள் பாதுகாத்து கொள்ளுங்கள்…

First published:

Tags: Fever, Home remedies, Monsoon Diseases