Home /News /lifestyle /

கொலஸ்ட்ராலை குறைக்க ஆரோக்கிய உணவுகள் சிறந்த மருந்தாக செயல்படும் : ஆய்வு

கொலஸ்ட்ராலை குறைக்க ஆரோக்கிய உணவுகள் சிறந்த மருந்தாக செயல்படும் : ஆய்வு

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால்

ஸ்டெப் ஒன் ஃபுட்ஸ் என்பவை எல்.டி.எல் கொழுப்பைக் குறைப்பதற்கு ஏதுவாக துல்லியமாக வடிவமைக்கப்பட்ட உணவு தயாரிப்புகள் ஆகும்.

இதய நோய்க்கான முக்கிய ஆபத்து காரணியாக அதிக கொலஸ்ட்ரால் இருக்கிறது. அமெரிக்காவில், இது கிட்டத்தட்ட 94 மில்லியன் மக்களையும், 50 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களில் இருவரில் ஒருவரையும் பாதித்து இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் பெரும்பாலான மருத்துவர்கள் கொலஸ்ட்ராலை குறைக்க statins போன்ற மருந்துகளை அதிகம் பரிந்துரைக்கின்றனர்.

இருப்பினும், ஒரு புதிய ஆய்வில் உணவை மருந்து அணுகுமுறையாக பயன்படுத்திய நபர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு வெகுவாக குறைந்து நல்ல பலனை தந்துள்ளது தெரிய வந்துள்ளது.

உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க கடுமையான வாழ்க்கை முறை மாற்றங்கள் தேவையில்லை மாறாக கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கான மருந்துகளைப் போலவே ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் சிறந்தது என்பதை சமீபத்திய ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வு முடிவு ‘ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மினசோட்டாவின் ரோசெஸ்டரில் உள்ள மயோ கிளினிக் மற்றும் மனிடோபாவின் வின்னிபெக்கில் உள்ள மனிடோபா பல்கலைக்கழகத்தில் உள்ள ரிச்சர்ட்சன் மையத்தில் நடத்தப்பட்டது.

மாயோ கிளினிக்கில் உள்ள ஸ்டேடின் இன்டலரன்ஸ் கிளினிக்கின் இயக்குனர் மற்றும் இதய நோய் நிபுணரான ஸ்டீபன் கோபெக்கி ஆய்வு குறித்து பேசுகையில், "எங்கள் ஆய்வில் காணப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் ஆரோக்கிய மற்றும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உணவுகளை மருந்து அணுகுமுறையாகப் பயன்படுத்துவது மருத்துவ நிபுணர்கள் மற்றும் நோயாளிகளுக்கான விருப்பங்களை விரிவுபடுத்துகிறது.



ஸ்டாடின் மருந்துகளை (statin drugs) எடுத்து கொள்ள விரும்பாத அல்லது எடுக்க முடியாத பல நோயாளிகள் தங்களின் உயர் கொழுப்பு அல்லது ஹைப்பர்லிபிடெமியாவை ஒரு யதார்த்தமான உணவு அடிப்படையிலான தலையீட்டின் மூலம் நிர்வகிக்க இந்த ஆய்வு முடிவுகள் உதவலாம்" என்றார்.

இந்த உணவுகளை சாப்பிட்ட பிறகு தவறி கூட தண்ணீர் குடிச்சிடாதீங்க... அதனால் பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள்..

ஹைப்பர்லிபிடெமிக் நோயாளிகள் தங்கள் டயட்டை ஸ்டெப் ஒன் ஃபுட்ஸ் மூலம் மாற்றியமைத்த போது, விரைவான மற்றும் மிகவும் குறிப்பிடத்தக்க கொலஸ்ட்ரால் குறைவை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஸ்டெப் ஒன் ஃபுட்ஸ் என்பவை எல்.டி.எல் கொழுப்பைக் குறைப்பதற்கு ஏதுவாக துல்லியமாக வடிவமைக்கப்பட்ட உணவு தயாரிப்புகள் ஆகும்.

இந்த பிரத்யேக உணவுகளை எடுத்து கொண்ட பங்கேற்பாளர்களுக்கு 30 நாட்களுக்குள் எல்.டி.எல் (கெட்ட) கொழுப்பில் சராசரியாக 9% குறைந்தது. இன்னும்சிலர் சிலர் 30 சதவிகிதத்திற்கும் அதிகமான எல்.டி.எல் கொலஸ்ட்ரால் குறைப்பை பெற்றனர்.



ஆய்வின் போது உணவு தலையீட்டு கட்டத்தில் பங்கேற்பாளர்கள் சாக்லேட் பார்கள் மற்றும் ஸ்மூத்திஸ் போன்ற ஸ்டெப் ஒன் உணவுகளிலிருந்து முழு உணவு அடிப்படையிலான தின்பண்டங்களைச் சாப்பிட்டனர். இந்த உணவுகள் கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்காக அறியப்பட்ட வால்நட்ஸ் போன்ற பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டன. பங்கேற்பாளர்கள் ஏற்கனவே உட்கொள்ளும் அதே போன்ற உணவுகளுக்கு ஈடாக இந்த சிற்றுண்டிகளை உட்கொள்ள அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரு சிறிய உணவு அடிப்படையிலான தலையீட்டிலிருந்து இத்தகைய குறிப்பிடத்தக்க கொலஸ்ட்ரால் குறைப்பை அடைவதன் மூலம் 30 நாட்களில் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கூறி இருக்கிறார்கள்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Cholesterol

அடுத்த செய்தி