• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கர்ப்பகாலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகள்..!

கர்ப்பகாலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகள்..!

மாதிரி படம்

மாதிரி படம்

உங்களுக்கு மட்டுமல்லாது உங்கள் குழந்தையின் வளர்ச்சியையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதால், ஆரோக்கியமற்ற அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை கட்டாயம் தவிர்த்து விட வேண்டும்.

  • Share this:
கர்ப்பமாக இருக்கும்போது பெண்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு மட்டுமல்லாது உங்கள் குழந்தையின் வளர்ச்சியையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதால், ஆரோக்கியமற்ற அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை கட்டாயம் தவிர்த்து விட வேண்டும். மேலும், ஒரே நேரத்தில் அதிகப்படியான உண்பதை தவிர்த்து, சில மணி நேர இடைவெளியில் கொஞ்சமாக உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

ஆர்கானிக் உணவுகள்

இயற்கையாக வளர்ந்த உணவுகளை நீங்கள் எடுத்துகொள்வது நல்லது. உதாரணமாக, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவாக எடுத்துகொள்ளலாம். கீரைகளை நன்கு வேக வைத்து சூப்பாகவும், குழம்பாகவும் செய்து சாப்பிடலாம். ஒரே பழங்களை எடுத்துக்கொள்வதைவிட, பல்வேறு பழங்களின் கூட்டுக் கலவையை சாப்பிட்டால் சுவையும் சூப்பராக இருக்கும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளும் கிடைக்கும். போதுமான அளவில் மட்டும் சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். கூடவோ அல்லது குறையவோ சாப்பிட வேண்டாம்.

தானிய உணவுகள்

கர்ப்ப காலத்தில் தானியங்களை உணவாக எடுத்துகொள்வது மிகவும் ஆரோக்கியமானதாகும். பல்வேறு தானியங்களை அரைத்து வைத்து கூலாக சாப்பிடலாம். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று தானியங்களை ஒன்றாக சேர்த்து வேக வைத்து எடுத்துக்கொள்ளலாம். பச்சைப் பயிறு, சுண்டல் ஆகியவற்றை ஊற வைத்து முளைக்கட்டிய பயிர்களாக சாப்பிடலாம். பேரிட்சை, பாதாம், முந்திரி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து ட்ரை ப்ரூட் ஜூஸை குடிக்கலாம். தானிய உணவுகள் உங்களுக்கு போதுமான ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின்களை கொடுப்பதுடன், புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். குழந்தையின் வளர்ச்சிக்கும் உதவும்.



இனிப்பு மற்றும் பானங்களுக்கு 'NO'

பேக்கரி சார்ந்த இனிப்பு உணவுகளை எடுத்துகொள்வதை தவிர்த்து விடுங்கள். ஏனென்றால், அதிகப்படியான சுவையை கொடுப்பதற்காக பல்வேறு சுவையூட்டிகளை அதில் சேர்த்திருப்பார்கள். கிரீம் உணவுகளும் சுவையூட்டிகள் நிரம்பியதாக இருக்கும். அதனை முற்றிலும் தவிர்த்து விடுவது உங்களின் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. கர்ப்ப காலத்தில் உங்களது உடல் ஏற்கனவே பல்வேறு ஹார்மோன் மாற்றங்களை சந்தித்துக்கொண்டிருக்கும் என்பதால், இதுபோன்ற ஆரோக்கியமற்ற உணவுகள் உடல் உபாதைகளை அதிகப்படுத்த உதவியாக இருந்துவிடும். மேலும், செயற்கையாக தயாரிக்கப்பட்ட குளிர் பானங்களுக்கும் 'நோ' சொல்லிவிடுங்கள்.

கர்ப்பகாலத்தில் யோகா செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..?

மாமிசம் மற்றும் மீன்

கர்ப்ப காலத்தில் மாமிசம் மற்றும் மீன் போன்ற அசைவ உணவுகளை எடுத்துக்கொள்வதில் தவறில்லை. அவற்றிலும் உடலுக்கு தேவையான புரதசத்துகள் உள்ளன. கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அதிகப்படியாக எடுத்துகொள்ளக் கூடாது. மாமிச உணவுகள் செரிப்பதற்கு அதிக ஆற்றலை எடுத்துக்கொள்ளும் என்பதால், கர்ப்ப காலத்தில் வயிற்றில் வளரும் குழந்தைக்கும், உங்களுக்கும் தேவையற்ற அசௌகரியங்களை ஏற்படுத்திவிடும். உணவு செரிக்கவில்லை என்றால் வாந்தி வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. உங்களின் உடலின் தன்மையை அறிந்து அளவாக எடுத்துகொள்ளுங்கள்.

மூலிகை டீ

ஏற்கனவே கூறியது போல் சோடா போன்ற செயற்கை குளிர்பானங்களை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும். இஞ்சி, புதினா போன்றவற்றில் வைக்கப்படும் டீயை சாப்பிடலாம். மூலிகை இலைகளில் கொதிக்க வைத்து டீ மற்றும் க்ரீன் டீ போன்ற மூலிகை டீயை மிதமான சூட்டில் எடுத்துக்கொள்ளலாம்.



உப்பு நிறைந்த உணவுகள்

உப்பு நிறைந்த உணவுகள் எதுவாக இருந்தாலும் எடுத்துக்கொள்ளாதீர்கள். ஏனென்றால், உப்பு நிறைந்த உணவுகள் கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் உருவாக வழி வகுத்துவிடும். எண்ணெயில் பொறித்த அல்லது வறுத்த உணவுகளையும், கடையில் விற்பனை செய்யப்படும் எண்ணெய் பலகாரங்களையும் தவிர்த்து விடுவது நல்லது

பச்சை உணவுகள்

இயற்கையான மற்றும் மூலிகை உணவுகளை எடுத்துக்கொள்வது கர்ப்ப காலத்தில் சிறந்தது. அரிசி, மைதா, கோதுமை போன்றவற்றில் செய்யப்படும் உணவுகளை குறைத்து பச்சைக் காய்கறிகள், பழங்கள், தானியங்களை உணவாகவும், ஜூஸாகவும் எடுத்துகொள்ளலாம். உங்களுக்கும், கருவுக்கும் போதுமான வைட்டமின்களும், புரதங்களும் அதில் இருந்து கிடைக்கும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: