சில சமயங்களில் சில உணவுப் பொருட்களை உட்கொண்டதும் உடனடியாக தலைவலி ஏற்படுவதை உணர முடியும். முக்கியமாக சர்க்கரை பொருட்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டால் இந்த பிரச்சனை ஏற்படுவதை கவனித்திருக்கலாம்.
பல்வேறு மக்கள் தங்களுடைய மன அழுத்தத்தினால் தங்களுக்கு தலைவலி ஏற்படுவதாக நினைத்துக் கொண்டுள்ளனர். அவ்வாறு தலைவலி இருக்கும் போது சில குறிப்பிட்ட உணவு வகைகளை உட்கொள்ளும் போது அவர்களின் தலைவலி இன்னும் மோசமாக ஆவதை அவர்கள் உணர்ந்து இருப்பார்கள்.
இதை கண்டறிய சில குறிப்பிட்ட உணவு வகைகளை உண்டவுடன் உங்களுக்கு தலைவலி அடிக்கடி ஏற்பட்டால் அந்த உணவை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்று உறுதியாக சொல்ல முடியும்.
இதைப் பற்றி பேசிய ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முக்கர்ஜி கூறுகையில் “சில நேரங்களில் பருவநிலை மாற்றங்களினாலும், அடர்த்தியான வாசனைகளினாலும், பர்ஃபியூம்கள், அதிக வெளிச்சம் உள்ள ஒளி மற்றும் மாதவிடாய் காலங்களின் போதும் அதிகமான தலைவலி உண்டாகும். இவற்றில் பல விஷயங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் உணவின் மூலம் தலைவலி உண்டானால் அதனை நம்மால் ஓரளவுக்கு தடுக்க முடியும். அந்த வகையில் தலைவலி ஏற்பட காரணமான உணவு வகைகளை கண்டறிந்து அவற்றை தவிர்க்கும் வழியை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
ரெட் ஒயின்: ரெட் ஒயின் குடிப்பது அதிகப்படியான நேரங்களில் தலைவலியை உண்டாக்கும்.
சீஸ்: சீஸில் டைரமைன் எனப்படும் ஒரு வகையான வேதிப்பொருள் உள்ளது. சீஸை உண்ணும் போது இந்த வேதிப்பொருள் ரத்தத்தில் கலந்து ரத்த நாளங்களை சுருங்கச் செய்கிறது. இதனால் அந்த நபருக்கு தலைவலி உண்டாகிறது.
Also Read : டயட் மற்றும் ஒர்க்அவுட்டிற்கு குட்பை சொல்லுங்க...உடல் எடையை குறைக்க இந்த 8 விஷயத்தை ஃபாலோ பணுங்க..!
சாக்லேட்: ஒரே நேரத்தில் 4-5 சாக்லேட்களையோ அல்லது அதற்கு அதிகமான சாக்லேட்களையோ உட்கொள்ளும் போது தலைவலி உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது. ஏனெனில் அதில் உள்ள கேப்பை மற்றும் தைரமைன் இரண்டுமே தலைவலியை உண்டாக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
பால்: தலைவலி அதிகம் இருக்கும் சமயங்களில் பாலை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். சில நேரங்களில் உடல் ஆரோக்கியம் இல்லாமல் இருக்கும் போது பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பாலில் உள்ள லாக்டோஸ் தலைவலியை உண்டாக்கும். சிலருக்கு இந்த லாக்டோஸினால் ஒவ்வாமை ஏற்படும் தன்மை இருக்கும். அவர்கள் கண்டிப்பாக பால் குடிப்பதை தவிர்ப்பதன் மூலம் தலைவலி உண்டாவதை தவிர்க்கலாம்.
சிட்ரஸ் : சிட்ரஸ் பழங்களில் உள்ள ஆக்டோபமைன் என்ற வேதிப்பொருள் தலைவலியை உண்டாக்குகிறது. அமிலத்தன்மை நிறைந்த பழங்களை உட்கொள்ளும் போது ஒவ்வாமை ஏற்படும் தன்மையை உடையவர்கள், இந்த சிட்ரஸ் பழங்களை உட்கொள்வதே தவிர்க்க வேண்டும். முக்கியமாக ஆரஞ்சு எலுமிச்சை திராட்சை போன்ற பழங்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
செயற்கை இனிப்புகள்: இந்த செயற்கை இனிப்புகளில் ஆஸ்பர்டேம் என்ற வேதிப்பொருள் உடலில் உள்ள டோபமைன் அளவை குறைத்து தலைவலியை அதிகப்படுத்துகிறது.
இதர உணவுகள்: முட்டைகோஸ், கத்தரிக்காய், இறைச்சி வகைகள், டின்னில் அடைக்கப்பட்ட மீன், வேர்க்கடலைகள் ஆகியவையும் சில சமயங்களில் தலைவலி ஏற்பட காரணமாக உள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Headache