Home /News /lifestyle /

சர்க்கரை நோயுள்ளவர்களும் வாய்க்கு ருசியாக சாப்பிடலாம்..எப்படி?.. டாக்டர் அட்வைஸ்

சர்க்கரை நோயுள்ளவர்களும் வாய்க்கு ருசியாக சாப்பிடலாம்..எப்படி?.. டாக்டர் அட்வைஸ்

சர்க்கரை நோயுள்ளவர்களுக்கான டயட்.

சர்க்கரை நோயுள்ளவர்களுக்கான டயட்.

Diabetes Diet: சர்க்கரை நோயுள்ளவர்கள் இதை செய்தால் வாய்க்கு ருசியாக கடைசி வரை சாப்பிடலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சர்க்கரை நோய் உள்ளவர்கள் தன்னுடைய உணவுப் பழக்கத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தால் வாழ்நாள் முழுக்க சர்க்கரை நோயால் எந்த பிரச்சினையும் இல்லாமல் தொடர்ந்து மகிழ்வான வாழ்வைத் தொடர முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    சர்க்கரை நோயுள்ளவர்கள் வாய்க்கு ருசியாக உணவு உட்கொள்ளமுடியாது, அவர்கள் மற்றவர்களைப் போல அதிகமாகச் சாப்பிடக்கூடாது எனத் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. இதை எப்படிச் சமாளிக்கலாம் என விளக்கமளித்துள்ளார் மருத்துவர் பிரசாந்த் அருண்.

    மூன்று வேளை உண்ணப்படும் உணவைச் சர்க்கரை நோயுள்ளவர்கள் ஆறு வேளையாகப் பிரித்து உண்ணலாம். காலை மதியம் இரவு என மூன்று வேளைக்கும் இடையே சிறிய அளவில் ஏதேனும் உட்கொண்டால் நாம் ஒரே வேளையில் அதிகம் உண்ணவேண்டிய தேவை ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும் கார்போஹைட்ரேட்(Carbohydrates), ஃபேட்(Fat), புரோட்டீன்(Protein), ஃபைபர்(Fiber) என அனைத்து சத்துகளும் இடம்பெறும் வகையிலான உணவை உட்கொள்ளவேண்டும் எனவும் உணவின் அளவு எவ்வளவு உட்கொள்கிறோம் என்பதும் மிக முக்கியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by News18 Tamil Nadu (@news18tamilnadu)






    அசைவ உணவுகளை உண்ணுகிறவர்கள் சிக்கின், மீன் போன்றவற்றை உட்கொள்ளலாம் ஆனால் அவற்றை எண்ணெய்யில் வருத்து உண்ணக்கூடாது எனவும், சர்க்கரை நோயாளிகள் மட்டன் மற்றும் பீப் போன்ற கொழுப்பு அதிகமாக உள்ள அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவை உட்கொள்ளும்போது அது இதய நோய்களை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளார்.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Diabetes, Doctor

    அடுத்த செய்தி