• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்று வீடு திரும்புவோர் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்..!

அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்று வீடு திரும்புவோர் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்..!

அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்று வீடு திரும்புவோர் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்..!

அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்று வீடு திரும்புவோர் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்..!

வெளியிலிருந்து கொண்டு வரும் பொருட்களை பிளீச் கலந்த நீரில் சுத்தம் செய்ய வேண்டும்.

  • Share this:
காய்கறிகள் வாங்க, மளிகை பொருட்கள் வாங்க , மருத்துவத் தேவைகள் என மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே சென்று வீடு திரும்பும் போது அப்படியே வீட்டிற்குள் நுழைந்துவிடாமல் அதற்கு முன் சில விஷயங்களைக் கையாளுவது அவசியம். அவை என்னென்ன என்பதை தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.

கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் : 

வீட்டில் இருந்து வெளியே செல்வதற்கு முன் முகக்கவசம் அணிவது வேண்டும். வெளியே செல்பவர்கள் வெளியிடங்களில் உள்ள கதவின் கைப்பிடி, லிப்ட் பட்டன் உள்ளிட்ட எந்த இடத்தையும் தொடுவதற்கு டிஷ்யூ பேப்பரை பயன்படுத்தலாம். பயன்படுத்திய டிஷ்யூ பேப்பரை குப்பைத் தொட்டிக்குள் உடனடியாக போட்டு விட வேண்டும்.

அவ்வப்போது கிருமி நாசினி கொண்டோ அல்லது சோப் பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

முகத்தில் கைகளை வைப்பதை தவிர்க்க வேண்டும்.

ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திய பிறகு கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தவும்.

பணி முடிந்து வீடு திரும்பும்போது காலணிகளை வெளியே கழற்றி விட வேண்டும்.

வீட்டிற்குள் நுழைந்ததும் எந்த ஒரு பொருளையும் பரப்பையும் தொடாமல் இருக்க வேண்டும்.

வெளி இடத்திற்கு எடுத்துச் சென்று பயன்படுத்திய வண்டி சாவி உள்ளிட்ட பொருட்களை ஏதாவது ஒரு பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்.

மொபைல் போனை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

அணிந்திருக்கும் உடைகளை உடனடியாக துவைக்க போட வேண்டும்.

வீட்டிற்குள் வந்ததும் வாய்ப்பு இருப்பின் குளிக்கலாம் அல்லது கை, கால், முகத்தை நன்றாக கழுவ வேண்டியது அவசியம்.

வெளியிலிருந்து கொண்டு வரும் பொருட்களை பிளீச் கலந்த நீரில் சுத்தம் செய்ய வேண்டும்.

கையுறைகளை அணிந்து இருந்தால் அவற்றை அகற்றி பின் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

பார்க்க :

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: