முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மலச்சிக்கல் தீர.. தொப்பை குறைய வேண்டுமா?.. இந்த வீட்டு வைத்தியத்தை ஃபாலோ பண்ணுங்க...!

மலச்சிக்கல் தீர.. தொப்பை குறைய வேண்டுமா?.. இந்த வீட்டு வைத்தியத்தை ஃபாலோ பண்ணுங்க...!

மாதிரி படம்

மாதிரி படம்

home tips for health | இனிமேல் இதை தினம் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும். மலச்சிக்கல் செரிமான பிரச்னை வராது. தொப்பை வேகமாக மளமளவென கரையும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து தொப்பையை மறைய செய்யவும் வயிற்றைச் சுற்றி உள்ள ஊளை சதையை குறைக்கவும், உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் இந்த பொடி பயன்படும். இந்த பொடியை நீங்கள் வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கலாம். இந்த பொடியை தயாரித்து தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து குடிக்க வேண்டும். இதனால் பானை போல இருந்த வயிறும் மள மளவென கரையை ஆரம்பிக்கும். மேலும் செரிமான பிரச்னை, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் வரவே வராது. இந்த பொடியை தயாரிக்கும் முறையை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்: 

சீரகம் - 1 கப்

ஓமம் - 1 கப்

சோம்பு - 1 கப்

செய்முறை

1. முதலில் ஒரு சிறிய கப் அளவு சீரகத்தை எடுத்துக் கொள்ளவும். அடுத்து இதில் ஓமம் சேர்க்க வேண்டும். ஓமத்தில் கால்சியம், பொட்டாசியம் என ஏராளமான சத்துக்கள் உள்ளன. அடுத்து சேர்க்கக்கூடிய பொருள் சோம்பு. மூன்றையும் ஒரே கப்பில் அளந்து எடுத்துக் கொள்ளவும்.

2. இந்த 3 பொருளையும் நன்றாக வாணலியில் வறுத்து ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ளவும். நன்றாக காற்று போக முடியாத பாட்டிலில் ஸ்டோர் செய்து வைக்கவும்.

3. இந்த பொடியை தினமும் காலை, மாலை உணவிற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

4. ஒரு டம்ளரில் சுடு தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் அரைத்த பவுடரை ஒரு ஸ்பூன் சேர்க்கவும். இதை உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.

5. உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற நோக்கம் இருப்பவர்கள் இந்த முறையை பின்பற்றலாம். இதனால் நீங்கள் எதிர்பார்க்காத அளவு எடை குறையும்.

குறிப்பு: இந்த பொடியை தண்ணீரில் கலந்து குடிப்பதினால் பயன் ஏராளமாக இருந்தாலும் பாதிப்புகள் ஏதும் வராத இயற்கையான வீட்டு குறிப்புகள்தான்.

First published:

Tags: Health, Lifestyle