ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நீங்கள் தினமும் சரியான நேரத்தில் தூங்கி எழுந்தாலே உடல் எடையை குறைக்கலாமா..?

நீங்கள் தினமும் சரியான நேரத்தில் தூங்கி எழுந்தாலே உடல் எடையை குறைக்கலாமா..?

எடை குறைத்தல்

எடை குறைத்தல்

உங்களால் தினசரி டயட் மற்றும் உடற்பயிற்சிகளை சரிவர பின்பற்ற முடியாவிட்டாலும், எடையை குறைக்க நீங்கள் தூக்க நுட்பங்களை (sleeping techniques) நம்பலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

உடல் பருமன் கொண்டவர்கள் மற்றும் கூடுதல் எடை கொண்டவர்கள் என பலரும் எடையை குறைத்து, மெலிந்த தோற்றத்தை பெற விரும்புகிறோம். உடற்பயிற்சிகள் மற்றும் டயட்டில் இருப்பது உள்ளிட்டவை எடை குறைப்பு இலக்குகளை அடைவதற்கான பொதுவான வழிகள் என்றாலும், உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் தூக்கமும் முக்கிய பங்கு வகிக்கிறது.

உங்களால் தினசரி டயட் மற்றும் உடற்பயிற்சிகளை சரிவர பின்பற்ற முடியாவிட்டாலும், எடையை குறைக்க நீங்கள் தூக்க நுட்பங்களை (sleeping techniques) நம்பலாம். இருப்பினும். எனினும் இது வளர்சிதை மாற்ற விகிதத்தை பொறுத்து நபருக்கு நபர் வேறுபடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் சுகாதாரம் மற்றும் மனித மேம்பாட்டுத் துறையின் ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஒரு ஆய்வில், தூக்கத்தில் மூச்சுத்திணறல் பிரச்சனை இருந்தவர்கள் சிகிச்சை எடுத்து கொண்டு சுமார் 1 வருடம் நல்ல தூக்கத்தை பெற்ற போது அதிக எடை மற்றும் கொழுப்பை இழந்தது கண்டறியப்பட்டது.

எடை இழப்பு இலக்கை அடைய உதவும் சிறந்த தூக்கத்தை பெறுவது எவ்வாறு?

தூங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் செட் செய்யுங்கள்:

நீங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்க செல்வதை வழக்கமாக பின்பற்றினால், உங்கள் உடல் அதே ஸ்லீப்பிங் டைமிற்கு பழக்கப்படும். நீங்கள் நாள் முழுவதும் சோர்வுடன் தூங்கச் சென்றால் உடனடியாக குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்கிவிடுவீர்கள். மேலும் 7 முதல் 8 மணிநேர ஆழ்ந்த தூக்கம் எடையை குறைக்க உதவியாக இருக்கும்.

எடை குறைப்பு Vs கொழுப்பு குறைப்பு... இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன..?

குறைந்த வெளிச்சம்:

நீங்கள் தூங்கும் போது அறையில் குறைந்தபட்ச ஒளி கொண்ட விளக்குகளை வைத்திருக்க நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஏனெனில் அதிக வெளிச்சம் தூக்கத்தைத் தொந்தரவு செய்யலாம். தொந்தரவு இல்லாத தூக்கத்திற்கு வசதியான படுக்கை மற்றும் சுத்தமான பெட்ஷீட்களில் தூங்கவும்.

சாப்பிட்ட சில மணி நேரம் கழித்து தூங்க செல்லுங்கள்..

இரவு உணவு சாப்பிட்ட உடனேயே தூங்க சென்றால், அது உங்கள் செரிமானத்தைப் பாதிக்கும். இதன் காரணமாக, உங்கள் வளர்சிதை மாற்றம் சரியாக வேலை செய்யாமல் போகலாம். படுக்கைக்கு முன் காஃபின் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.சாப்பிட்ட 2 முதல் 3 மணி நேரத்திற்கு பிறகு எப்போதும் தூங்க செல்ல வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

டயட் இருக்கும்போதுதான் அதிகமாக பசிக்குதா..? கட்டுப்படுத்தும் வழிகள் இதோ...

போர்வை இன்றி தூங்குங்கள்..

குளிர்ந்த வெப்பநிலையில் தூங்கும் போது, உங்கள் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். இது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. ஆராய்ச்சியின் படி, குறைக்கப்பட்ட அறை வெப்பநிலை நல்ல பிரவுன் ஃபேட்டின் அளவை அதிகரிக்கிறது. இது உடலில் கூடுதல் ரத்த சர்க்கரையை அகற்றவும் அதிக கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Sleep, Weight loss