• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • காலையில் எழுவதற்கு சோம்பேறித்தனமாக இருக்கிறதா? இதோ டிப்ஸ்..

காலையில் எழுவதற்கு சோம்பேறித்தனமாக இருக்கிறதா? இதோ டிப்ஸ்..

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

காலையில் நான் ஏன் நேரமாக எழ வேண்டும்? என்பது தான் முதலில் உங்களுக்குள் இருக்கும் கேள்வி. இந்தக் கேள்விக்கான விடை எளிதானது.

  • Share this:
சீக்கிரமாக தூங்கி, காலையில் நேரமாக எழுந்துவிட வேண்டும் என சொல்வார்கள். ஆனால் அதனை கடைபிடிப்பது தான் பலருக்கும் கஷ்டமாக இருக்கிறது. இந்தப் பிரச்சனை உங்களுக்கும் இருக்கிறதென்றால், கவலையை விடுங்கள். நீங்கள் நேரமாக எழுவதற்கு இந்த டிப்ஸைப் பாலோ பண்ணுங்க.

ஏன் எழ வேண்டும்?

காலையில் நான் ஏன் நேரமாக எழ வேண்டும்? என்பது தான் முதலில் உங்களுக்குள் இருக்கும் கேள்வி. இந்தக் கேள்விக்கான விடை எளிதானது. காலையில் நேரமாக எழும்போது, அன்றைய நாளின் அனைத்து விஷயங்களையும் முன்கூட்டியே திட்டமிடலாம். மனத்துக்கும், உடலுக்கும் போதுமான பயிற்சிகளை கொடுக்கும்போது மன அழுத்தம் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பீர்கள். பதட்டமில்லாமல், எந்தவொரு விஷயத்தையும் எளிதாக அணுகும் திறன் உங்களுக்கு கிடைக்கும். இவையெல்லாம் சரி என்றாலும், எழுவதற்கு என்ன செய்வது? என கேட்கிறீர்களா? இதோ டிப்ஸ்.

மார்னிங் நபர்கள்

மார்னிங் நபர்கள் என்றால், காலையில் நேரமாக எழுவதை வழக்கமாக வைத்திருப்பவர்கள். அவர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வீட்டில் இருப்பவர்களில் அம்மா, தாத்தா, பாட்டி என யாரோ ஒருவர் காலையில் நேரமாக எழுவதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். அவர்கள் எழும்போது, நீங்களும் எழுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இதுவே உங்களுக்குள் ஒருவிதமான தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.

காலையில் பாடல்களை கேளுங்கள்


மியூசிக்

காலையில் கண் விழித்தாலும், எழுவதற்கு மனமில்லாமல் படுத்திருப்பவர்கள் ஏராளம். அவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், பீட் அல்லது எனர்ஜிடிக் பாடல்களை ஒலிக்கச் செய்து கேளுங்கள். அந்த மியூசிக் மற்றும் பேஸ் பீட்கள் உங்களை படுக்கையில் இருந்து தானாக எழு வைத்துவிடும். நீங்களும் மிகவும் புத்துணர்ச்சியாக இருப்பீர்கள். எனர்ஜிடிக் சாங் காலை நேரத்தில் கேட்டால், அன்றைய நாள் முழுவதும் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

செல்லப்பிராணிகள்


வீட்டு விலங்குகள்

வீட்டு விலங்குகள், அதாவது நாய் மீது உங்களுக்கு பிரியம் இருந்தால் அதனை உங்கள் அறையிலேயே படுக்க வைத்துக் கொள்ளுங்கள். காலை நேரத்தில் அவை சீக்கிரம் எழுந்து உங்களையும் எழுப்பிவிடும். ஏனென்றால் அவை நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருக்க விரும்பாது. குறிப்பாக, காலை நேரம் என்றால் சிறிது தொலைவாவது ஓடி ஆட விரும்பும். இதனால், நாய் உங்களுடன் இருந்தால் நீங்கள் காலையில் சீக்கிரம் எழுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரவே தயாராதல்

காலையில் நீங்கள் நேரமாக எழ வேண்டும் என்றால், அதற்கு இரவே நீங்கள் தயாராக வேண்டும். சில ஸ்கின்கேர் கிரீம்களை அப்ளை செய்து கொண்டு படுத்தால் காலையில் சீக்கிரம் எழுந்து அவற்றை சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். இதனால், ஸ்கின்கேரும் பாதுகாக்கப்படுவதுடன், காலையில் சீக்கிரம் எழும் பழக்கமும் வந்துவிடும். மேலும், இரவு நேரங்களில் அதிக நேரம் மொபைல்களை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டால், காலையில் எழுவது உங்களுக்கு பிரச்சனையாக இருக்காது.

தியானம்


தியானம்

காலையில் சீக்கிரம் எழுந்து என்ன செய்யபோகிறேன்? என கேட்பவர்களுக்கு பதில் என்னவென்றால் தியானம் செய்யுங்கள், யோகா மற்றும் உடற்பயிற்சிகளை செய்யுங்கள். மனமும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும். தேவையற்ற எண்ணங்கள் சிந்தனையில் இருந்து விலகி முழு மனதுடன், புத்துணர்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் இருப்பது உங்களுக்கே விநோதமாக தெரியும்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: