முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கோவிட் மற்றும் ஃப்ளூ இரட்டை வைரஸ் தாக்குதல் : ஃப்ளூரோனா என பரவும் கொடிய வைரஸ்

கோவிட் மற்றும் ஃப்ளூ இரட்டை வைரஸ் தாக்குதல் : ஃப்ளூரோனா என பரவும் கொடிய வைரஸ்

, இஸ்ரேல் நாட்டில் முதல் முறையாக ஒரு கர்ப்பிணி இரண்டு வைரஸ்களால் ஒரே நேரத்தில் தொற்று பாதிப்புக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

, இஸ்ரேல் நாட்டில் முதல் முறையாக ஒரு கர்ப்பிணி இரண்டு வைரஸ்களால் ஒரே நேரத்தில் தொற்று பாதிப்புக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

, இஸ்ரேல் நாட்டில் முதல் முறையாக ஒரு கர்ப்பிணி இரண்டு வைரஸ்களால் ஒரே நேரத்தில் தொற்று பாதிப்புக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

கொரோனா தாக்கம் குறையத் தொடங்குகிறது என்று நினைப்பதற்குள், அடுத்தடுத்த வேரியன்ட்கள் உருவாகி, உலகம் முழுவதும் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே, ஒமைக்ரான் வைரஸ் பல நாடுகளை மீண்டும் ஊரடங்கு அறிவிக்கச் செய்யும் வகையல் அச்சுறுத்தியுள்ளது. ஒமைக்ரானால் முடங்கிய நாடுங்களில் பிரேசிலும் அடங்கும். தற்போது, மற்றொரு அச்சுறுத்தலாக, கோவிட் வைரஸ் மற்றும் சளி மற்றும் காய்ச்சல் உண்டாக்கும் மற்றொரு ஃப்ளூ வைரஸ் ஆகிய இரண்டின் கலவையாக புதிய ஃப்ளூரோனா வைரஸ் பிரேசிலைத் தாக்கி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் பலரும், அடுத்தடுத்த தொற்றுகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அல்லது, ஃப்ளூரோனா என்று அழைக்கப்படும் ஒரே நேரத்தில் இரண்டு விதமான வைரஸ்களாலும் தொற்று பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பிரேசிலில், இது வரை மூன்று மாநிலத்தில் இது போல பல நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தற்போது ஒமைக்ரான் அதிகரித்து வரும் நிலையில், ஒரே நேரத்தில் இரண்டு வைரஸ்களால் பாதிக்கப்படுவது அதிகரிக்கக்கூடும் என்று கூறுகின்றனர்.

பிரேசில் தவிர்த்து, இஸ்ரேல் நாட்டில் முதல் முறையாக ஒரு கர்ப்பிணி இரண்டு வைரஸ்களால் ஒரே நேரத்தில் தொற்று பாதிப்புக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

"முகக்கவசங்கள் மற்றும் சமூக இடைவெளிகளை பின்பற்றுவதில் மக்கள் கவனமும் செலுத்தாமலும் அக்கறையும் இல்லாமலும் இருக்கிறார்கள். எனவே, தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் நேரத்தில் பிரேசிலில் இரண்டு வைரஸ்களால் தொற்று பாதிப்பு ஏற்படுத்துவது ஆச்சரியம் இல்லை" என்று சாவ் பாலோ மாநிலத்தின் ஹெல்த் செக்ரட்டரி ஜீன் கோரின்ச்டெய்ன் கூறியுள்ளார்.

பிரேசிலின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம் சாவ் பாலோவ் ஆகும். இந்த மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களிடம் பரிசோதனை செய்யும் போது, அவர்களில் 60 சதவீத நோயாளிகள் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கபப்ட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இரண்டு வாரங்களில் இது தீவிரமாக மாறலாம் என்றும் கூறப்படுகிறது.

இரண்டு கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு ஏற்படும் 7 வகை ஒமைக்ரான் அறிகுறிகள் : அலட்சியம் வேண்டாம்...

அதே நேரத்தில், ஒரே நேரத்தில் இரண்டு வைரஸ்களால் பாதிப்பு ஏற்பட்டாலும், சிகிச்சை அளிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் வெவ்வேறு வைரஸ்களால் ஏற்படும் நோய்த்தொற்றுகளால் உடல் நலம் எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பது பற்றி இன்னும் பெரும்பாலும் அறியப்படவில்லை. தொற்றுநோய்ப் பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நாளொன்றுக்கு 1 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அது பத்தாயிரம் என்ற எண்ணிக்கையில் குறைந்திருந்தது.

ஆனால், கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கொண்டாட்டம் என்று சுற்றுலாத் சுற்றுலாத் தலங்கள் கடந்த சில நாட்களாக நிரம்பி வழிவதால், வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தேசிய சுகாதார அமைப்பின் முன்னாள் இயக்குநரான, மற்றும் பொது சுகாதார மருத்துவரான கிளாடியோ மைரோவிச், வெவ்வேறு வைரஸ்கள் தனித்தனியாக வெவ்வேறு விதமாக உடலை பாதிக்கின்றன; மேலும், ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு கோவிட் வேரியன்ட்களால்தொற்று ஏற்படுவது மிகவும் கடுமையான பாதிப்புகளை உண்டாக்கலாம் என்று தெரிவித்தார்.

இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட் வைரஸ்களால் நோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படும். அதே நேரத்தில், இரண்டு வைரஸ்களால் தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும், அறிகுறிகள் தீவிரமாக இல்லையென்றால் வீட்டிலேயே தனிப்படுத்திக் கொள்ளவும் பிரேசில் அரசாங்கம் கூறியுள்ளது. ஒரு சில நாடுகளில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இரட்டை வைரஸ் தொற்று, மற்ற நாடுகளிலும் பாதிப்பை உண்டாக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

First published:

Tags: Delta Variants, Omicron