எய்ம்ஸ் இதயவியல் துறை நடத்திய ஆய்வில் பலவீனமான இதய செயல்பாடுகளை கொண்டவர்களுக்கு அல்லது இதய செயலிழப்பு பாதிப்பு கொண்டவர்களுக்கு ஃபுளூ வேக்சின் போட்டுக்கொள்வதால் பாதிப்பு குறைவதற்கான வாய்ப்பு உண்டு என கூறுகிறது.
லான்சென்ட் இந்த வருடம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வை மருத்துவர் அம்புஜ் ராய் வழிநடத்தியுள்ளார். இவர் எய்ம்ஸ் இதயவியல் துறையின் பேராசிரியராவார். இந்த ஆய்வு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்ரிக்கா என 16 நாடுகளில் 30 மையங்களில் ஆய்வை மேற்கொண்டுள்ளது. அதில் 7 மையங்கள் இந்தியாவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கிட்டத்தட்ட 5129 பேர் பங்கேற்றுள்ளனர். கிட்டத்தட்ட 2015 முதல் 2021 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்டுள்ளது.
ஃபுளூ வேக்ஸின் என்றால் என்ன..?
இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசிகள், ஃப்ளூ ஷாட்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் ஏற்படும் தொற்றுக்கு எதிராக பாதுகாக்கும் தடுப்பூசிகள் ஆகும். இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் வேகமாக மாறும் என்பதால் அதை எதிர்த்து போராடுவதற்கு ஏற்ப, வருடத்திற்கு இரண்டு முறை புதிய தடுப்பூசி மருந்துகளை உருவாக்கி செலுத்தப்படும்.
பருவகாலத்தில் ஏற்படும் காய்ச்சல், சளி தொற்றுகளையே இன்ஃப்ளூயன்ஸா தொற்று என்று அழைப்பார்கள். அப்படி இந்த இன்ஃப்ளூயன்ஸா தொற்றுகள் இதய நோய் பாதிப்பு கொண்டவர்களை எளிமையாக தாக்கும் ஆபத்து இருப்பதால் அவர்களுக்கு மரணம் வரை கொண்டு செல்லும் பாதிப்பு அதிகம். எனவே இதை தவிர்க்க இதுபோன்ற கடுமையான காலங்களில் ஃபுளூ வேக்சின் போட்டுக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள். அவ்வாறு அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் அவர்களின் பாதிப்பு 28% குறைவதாக சொல்லப்படுகிறது. இதனால் மாரடைப்பு , பக்கவாதம் அல்லது மற்ற இதய நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயங்களை தடுக்கிறது.
Also Read : அடிக்கடி காலின் பின்புறம் இழுத்துப்பிடித்து வலி ஏற்படுகிறதா..? கொலஸ்ட்ரால் அறிகுறியாக இருக்கலாம்..!
குறிப்பாக ஏற்கெனவே இதய செயலிழப்பு அல்லது மாரடைப்பை கொண்டவர்கள் கட்டாயம் இந்த ஃபுளூ வேக்சின் எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர் ராய் கூறுகிறார்.
” இந்த ஃபுளூ வேக்சின் போட்டுக்கொள்வதால் உடலின் இரத்த ஓட்டம் பாதிப்பு அல்லது ஆக்ஸிஜனை கொண்டு செல்வதில் தடை இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருப்பது தெரிய வந்தது. அதோடு நடுத்தர நாடுகள் அல்லது பின் தங்கிய நாடுகளில் உள்ள இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வேக்சினை தொடர்ச்சியாக கொடுத்த போது அவர்களுக்கு பாதிப்பு குறைந்திருந்தது. அதோடு இந்த தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் 50% மேலும் இதய செயலிழப்பு ஏற்படாமல் தடுக்கவும் உதவுவதை நாங்கள் கண்டறிந்தோம்” என ராய் கூறுகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Flu Vaccine, Heart attack, Heart Failure