அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் வசிப்பவர் 21 வயதான மைக் க்ரம்ஹோல்ஸ். இவர் இரவு நன்றாக தூங்கிவிட்டு காலையில் எழுந்து பார்த்தபோது, அவரது கண் மோசமான ஒவ்வாமையால் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியது போல் உணர்ந்துள்ளார். உடனடியாக அவர் கண் மருத்துவரைச் சந்தித்த பின்னரும் அந்த பிரச்சனைகள் தீராததால், வெவ்வேறு கண் மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக சென்றுள்ளார். பின்னர் கார்னியா நிபுணர்களின் சோதனைக்கு பிறகு, அவரது கண்ணில் மிகவும் அரிதான அகந்தமோபா கெராடிடிஸ் என்ற ஒருவகை ஒட்டுண்ணி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை ஒட்டுண்ணி மனிதனின் சதைகளை சிதைத்துண்ணும் தன்மை கொண்டவை. இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அந்த இளைஞர், தனக்கு பாதிக்கப்பட்ட கண்ணில் 2 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாகவும், அந்த சிகிச்சையின் பெயர்கள் பிடிடி கான்ஜூன்டிவல் ஃபிளாப்பின் டிரான்ஸ்பார்ம் மற்றும் கார்னியல் மாற்று அறுவை சிகிச்சை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அறுவை சிகிச்சை முடிந்த பிறகும் அவருக்கு பாதிக்கப்பட்ட கண்ணில் முற்றிலும் பார்வை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தனது நோக்கம் என தெரிவித்துள்ள அவர், தான் அனுபவிக்கும் மோசமான அனுபவத்தை யாரும் அனுபவிக்கக்கூடாது என தெரிவித்துள்ளார். மேலும், "காண்டாக்ட் லென்ஸ்கள் அணிந்திருக்கும் போது நீச்சல் குளத்தில் குளிப்பது, தூங்குவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அவர் பதிவிட்டுள்ளார்.
கான்பூரில் உள்ள ரீஜென்சி மருத்துவமனையின் கண் மருத்துவத்தின் ஆலோசகர் டாக்டர் நீரதி ஸ்ரீவஸ்தவா, மக்கள் இரவு முழுவதும் கான்டாக்ட் லென்ஸ்கள் அணிவதைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், இது பார்வைக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.காண்டாக்ட் லென்ஸ்கள் அணிபவர்கள் பின்பற்ற வேண்டிய சில குறிப்புகளை, ஹைதராபாத்தின் ஹை-டெக் சிட்டி, , கேர் மருத்துவமனைகளின் கண் மருத்துவர், டாக்டர் தீப்தி மேத்தா பகிர்ந்துள்ளார்.
அதில் உங்கள் லென்ஸ்களைப் பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும் தினமும் சுத்தப்படுத்துதல் செய்வது அவசியம் என தெரிவித்துள்ளார். கண்களில் எரிச்சல், வலி அல்லது கண்களில் நீர் வடிதல் போன்றவற்றை உணர்ந்தவுடன் லென்ஸ் அணிவதை தவிர்ப்பது நல்லது என தெரிவித்துள்ளார். கண்களில் சிறிதளவு வலி அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வலியுறுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Eye Problems