• HOME
 • »
 • NEWS
 • »
 • lifestyle
 • »
 • தொப்பை கொழுப்பை குறைக்க வேண்டுமா ? இதை செய்யுங்கள்..

தொப்பை கொழுப்பை குறைக்க வேண்டுமா ? இதை செய்யுங்கள்..

காட்சி படம்

காட்சி படம்

தொப்பை கொழுப்பை எளிதில் குறைப்பது எப்படி ?

 • Share this:
  வயிற்றின் உள்ளிருக்கும் உறுப்புகளை உறுதியோடு காத்து உடலோடு ஒட்டியிருந்தால் தான் அது வயிறு. அதுவே விரிந்து தொங்கும் அளவுக்கு அதிகமாகும் போது அதை தொப்பை என்று அழைப்பார்கள். சிலருக்கு தொப்பையானது வயிற்றுப்பகுதியைத் தாண்டி இடுப்பு பகுதியே தெரியாமலும் இருக்கும். தினமும் காலையில் எழுந்ததும், உங்கள் தொப்பையை பார்ப்பதற்க்கே அருவெறுப்பாக இருக்கிறதா? வேறொருவர் அதைப் பற்றி பேசவோ அல்லது கிண்டல் செய்வதற்கு முன்னர் நீங்கள் தொப்பை கொழுப்பை எளிதில் கரைக்க முடியும்.

  தொப்பை கொழுப்புகள் திருமணமான தம்பதிகளிடையே மோசமான வாதங்களுக்கு வழிவகுக்கும். மேலும் பல நேரங்களில் தொப்பை உள்ள நபர் தர்ம சங்கடமான துயரத்தை அனுபவிப்பார். தொப்பை கொழுப்பிலிருந்து எளிதாக நீங்கள் விடை பெறமுடியும். தினசரி ஒரு சில எளிய செயல்களை ஒருவர் பின்பற்றினாலே போதும்...

  நார்ச்சத்து நிறைந்த உணவு  : சமைப்பதன் மூலமும் எண்ணெய் விட்டு வறுப்பதன் மூலமும் உணவுகளில் உள்ள பல சத்துக்கள் குறைந்துவிடும். சில நேரங்களில் அந்த சத்துகள் அடியோடு போயும் விடுகின்றன. ஆனால், நார்ச்சத்துள்ள உணவுகளில் உள்ள சத்துக்கள், உடலுக்கு கிடைப்பதுடன், மற்ற உணவுகளில் இருந்து கிடைக்கும் சத்துக்களை தசைகள் உட்பட பல உறுப்புகளுக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் உதவியை செய்கிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், கொழுப்பு மிகாமல் பார்த்துக்கொள்ளவும் நார்ச்சத்து முக்கியம்.

  ஒரு வொர்க்அவுட்டிற்குப் பிறகு நாம் அதிக பசியுடன் இருப்போம். இருப்பினும், உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொப்பை கொழுப்பை எரிக்க விரும்புவோருக்கு ஏற்ற உணவு நார்ச்சத்து நிறைந்த உணவாகும் . இத்தகைய உணவுகள் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும், இதனால் உங்களுக்கு சட்டென்று பசிக்காது, மேலும் எடையைக் குறைக்கவும் இந்த உணவுகள் உதவுகின்றன. முழு தானியங்கள், ஓட்ஸ், கேரட், முள்ளங்கி மற்றும் பீட்ரூட் போன்ற காய்கறிகளும், ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் கொய்யா போன்ற பழங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.   குறிப்பாக ஆண்களுக்கு ஏற்படுகின்ற பல வித பிரச்சினைகளுக்கு இது தீர்வை தரவல்லது. எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பலமாக்க கிரீன் டீ சிறந்த ஆயுதம். உடல் எடையை குறைக்க வேண்டுமென்று வந்துவிட்டாலே நம் பலரும் கிரீன் டீயை முக்கியமாக கருத்தில் கொண்டு குடிக்கிறோம். அதுமட்டுமல்லாமல் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் பலரும் தினமும் அவர்கள் அருந்தும் தேநீருக்கு மாற்றாக கிரீன் டீ (Green Tea) குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இது ரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்பை கரைக்கிறது.


  நடைபயிற்சி : அதிகப்படியான வயிற்று கொழுப்பு உள்ளவர்களுக்கு இது மிகவும் பொதுவாகக் சொல்லப்படும் ஆலோசனையாகும், மேலும் இது சிறந்த ஆலோசனையாகும். நடைபயிற்சி உடலை வெப்பமாக்க உதவுகிறது, இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் கொழுப்பை எரிக்கிறது . குண்டாக இருப்பவர்களுக்கு தமனிகள் அடைப்பு மற்றும் இதய செயலிழப்பு அபாயம் அதிகம் உள்ளது. எனவே, நடைபயிற்சி அத்தகைய அபாயங்களைக் குறைக்க உதவுகிறது.
  மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல் என நமது உடல் உறுப்புகள் அனைத்தும் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்க இடைவிடாமல் ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன. அவை அனைத்தையும் தாங்கிப்பிடித்திருக்கும் நாம்தான் ஓடாமல், நடக்காமல் உள் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நாட்களை கடக்கிறோம். நடைப்பயிற்சி, உள் உறுப்புகளுக்குத் தேவையான ரத்த ஓட்டத்தையும், பிராண வாயு செறிவையும் ஏற்படுத்தி, நம்மைச் சிறப்பாகச் செயல்படவைக்கும்.  சைக்கிள் ஓட்டுதல் : சைக்கிள் ஓட்டுதல் (Cycling) என்பது ஒரு எளிய வகை உடற்பயிற்சி. வீட்டில் உள்ள அனைவராலும் செய்ய கூடிய ஒரு உடற்பயிற்சி. சைக்கிள் போக்குவரத்து வாகனமாகவும் இருப்பதால் பலவித நன்மைகளும் இதில் உண்டு. சில வருடங்களுக்கு முன்பு வரை நம் வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருந்த ஒரு பொருள் தான் இந்த சைக்கிள். கிராமம், நகரம் வேறுபாடுகளின்றி, எல்லோரும் தினமும் சைக்கிளில் தான் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.


  சைக்கிளில் பயணம் செலவில்லாதது என்பது ஒருபுறம் இருக்க, மிகச்சிறந்த உடற்பயிற்சியாகவும் அது இருந்தது. கால்கள், வயிற்று தசைகள் மற்றும் கொழுப்பு படிவுகளுக்கு சைக்கிள் ஓட்டுவதால் அழுத்தம் ஏற்படுகிறது, அதனால் சைக்கிளை மிதிப்பது தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும்  நமது கால் தசைகளை நன்றாக வலி இல்லாமல் வைத்துக்கொள்ளவும் சைக்கிள் ஓட்டுதல் ஒரு சிறந்த வழியாகும்.
   தொப்பை வர அன்றாடம் நாம் சாப்பிடும் உணவு முறைகள் ஒரு காரணமாக இருந்தாலும், வேலை செய்யாமல் ஒரே இடத்தில் இருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும். தொப்பையை குறைக்க நாள்தோறும் உடற்பயிற்சியும் செய்து வருவார்கள். இதற்காக அதிகாலை எழுந்து ஓடுவதையும், நடப்பதையும் வழக்கமாக கொண்டிருப்பார்கள். எனவே மேல்சொன்னவற்றை நீங்கள் பின்பற்றினால் விரைவில் தொப்பை கொழுப்பு குறைந்து நீங்களும் ஒல்லியாக மாறலாம்  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Tamilmalar Natarajan
  First published: