• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • 35 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளீர்களா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன..?

35 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளீர்களா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன..?

35 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ள டிப்ஸ்

35 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ள டிப்ஸ்

35 வயதிற்குப் பிறகு கருவுறுதலில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி கொல்கத்தாவில் உள்ள நோவா ஐவிஎஃப் மருத்துவமனையின் கருவுறுதல் ஆலோசகர் டாக்டர் அனந்திதா தெரிவித்துள்ளார்.

  • Share this:
20களின் இறுதிகளில் அல்லது 30களின் தொடக்கத்தில்தான் இப்போது பலரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்பவர்களும், 30 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று திட்டமிடுகிறார்கள். குடும்பத்தில் மற்றொரு புதிய உறுப்பினராக ஒரு குழந்தையை சேர்ப்பதற்கு முன் போதுமான பொருளாதார நிலைமை, நிதி வசதி, பணிச்சூழல் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக கருத்தரிப்பதை 35 வயது வரை ஒத்தி வைக்கிறார்கள்.

எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒரு தம்பதியின் அல்லது ஒரு பெண்ணின் தனிப்பட்ட முடிவு. எப்போது வேண்டுமானாலும் தாய்மை அடையலாம், குழந்தை பெற்றுக் கொள்வதற்கு திட்டமிடலாம். குழந்தை பெற்றுக் கொள்வதற்கு திட்டவட்டமான நேரம் எதுவும் இல்லை என்றாலும் குழந்தை பிறப்பை முப்பதுக்கு மேல் தள்ளிப்போடுவர்கள், உங்கள் உடல் ஆரோக்கியத்தில் இருந்து பல்வேறு விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

35 வயதிற்குப் பிறகு கருவுறுதலில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி கொல்கத்தாவில் உள்ள நோவா ஐவிஎஃப் மருத்துவமனையின் கருவுறுதல் ஆலோசகர் டாக்டர் அனந்திதா தெரிவித்துள்ளார். 35 வயது அல்லது அதற்கும் மேல் குழந்தை பெற்றுக் கொள்ளும் போது, கரு உருவாவதற்கான வாய்ப்புகள் குறையத் தொடங்கும் என்று கூறியுள்ளார். அடுத்ததாக இருபதுகளில் இருக்கும் ஒரு பெண் கரு உருவாகும் விகிதத்தை விட 30 இன் நடுப்பகுதிகளில் இருக்கும் பெண்ணின் கருவுறுதல் விகிதமும் வெகுவாகக் குறையும்.

சில கருவுறுவது சாத்தியம் ஆனாலும் கருச்சிதைவு ஏற்பட கூடிய ஆபத்தும் அதிகம். அது மட்டுமின்றி மகப்பேறு காலம் முழுவதும் முடியாமல் முன்கூட்டியே குழந்தை பிறந்து விடும் சிக்கல், குழந்தைக்கு டவுன்ஸ் சிண்ட்ரோம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் ஏற்படலாம். முப்பதுகளின் முற்பகுதிகளில் அல்லது இருபதுகளில் நீங்கள் குழந்தை பெற்றுக் கொண்டால் இத்தகைய சிக்கல்கள் இல்லை என்று சொல்லமுடியாது. ஆனால் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்படாது மற்றும் இதன் பாதிப்பு விகிதம் மிகவும் குறைவு.



30 களின் மத்தியில் நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்வது சாத்தியம் தான்

பல ஆய்வுகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளின் படி 35 வயதுக்கு முன் கருமுட்டையின் தரம் மற்றும் கருவுறுதல் விகிதம் இயல்பாக இருக்கும். நீங்கள் 35 வயதுக்கு மேற்பட்டு கருத்தரிக்க முடிவு செய்திருந்தால் உங்கள் உடல்நிலை மற்றும் மாதவிடாய் சுழற்சி பற்றி நீங்கள் மிகவும் கவனமாக இருக்கும். எனவே 35 வயது ஆகிவிட்டது இனிமேல் குழந்தை பிறக்க முடியாது என்று யாரேனும் கூறினால் அதை நம்ப வேண்டாம் அது போலி பொய்.

Parenting | குழந்தை வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கும் மாதவிடாய் புரிதல்… விளக்கும் குழந்தைகள் நல மருத்துவர்!

உங்கள் வயது மட்டுமல்ல உங்கள் பார்ட்னரின் வயதும் முக்கியம்

கருத்தரிப்பதில் உங்கள் வயது எவ்வளவு முக்கியமோ அதேபோல உங்கள் கணவரின் வயதும் முக்கியம். பெண்களைப் போலவே ஆண்களுக்கும் ஃபெர்டிலிட்டி பாதிப்பு வயது காரணமாக ஏற்படலாம்.



மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுவதில் மேலும் தாமதிக்காதீர்கள்

30 களின் நடுப்பகுதிகளில் நீங்கள் குழந்தை பெற முயற்சி செய்து கருத்தரிக்கவில்லை என்றால் உடனடியாக மருத்துவர்களை அணுகி காரணத்தை கண்டறிந்து, தேவையான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். இது குழந்தை பிறப்பை தள்ளிப் மேலும் போடுவதை தடுக்க உதவும்.

ப்ரீமெச்சூர் மெனோபாஸ் குறித்து தெரியுமா? ஏன் கவனிக்கப்பட வேண்டும்? அலர்ட் பதிவு- Explainer

கருவுறுதலுக்கான சிகிச்சை வயது சம்பந்தப்பட்ட கருவுறும் பிரச்சினையை தீர்க்காது

சினைமுட்டை பாதிப்பு, ஹார்மோன் கோளாறு, மாதவிடாய் சுழற்சி உட்பட கருத்தரிப்பில் பெண்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு வயது சார்ந்த கருவுறுதலில் வயது பிரச்சினைகள் ஏற்படும் போது, ஃபெர்டிலிட்டி சிகிச்சைகள் பலனளிக்காமல் போகும். உதாரணமாக ஐயூஐ எனப்படும் இன்ட்ரா யூட்டரின் இன்செமினேஷன் உங்கள் இருபதுகளில் மற்ற முப்பதுகளின் ஆரம்பத்தில் அதிகபட்ச சக்சஸ் ரேட் கொண்டுள்ளது.



ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ள வேண்டும்

இயல்பாகவே முப்பத்தி ஐந்து வயதுக்கு மேல் ஆரோக்கியம் குறைய தொடங்கும். எனவே உங்களின் ஒட்டுமொத்த உடல் மற்றும் மன ஆரோக்கியம் உங்கள் கருவுறும் தன்மையை பாதிக்கவிடாமல், அதற்கு ஏற்றது போல உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும். நீங்கள் குழந்தைப் பெற்றுக் கொள்வதை தள்ளிப்போடும் போது, அதை முன்கூட்டியே உங்கள் பார்ட்னருடன் கலந்தாலோசித்து உங்கள் இருவரின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: