ஊரடங்கு காலத்தில் இரட்டிப்பான மன அழுத்தம் - எளிய தீர்வுகள் இதோ..

மேற்பரப்புகளில் கொரோனா வைரஸ் நீண்ட நாட்கள் உயிர்வாழ்வதற்கு இது தான் காரணமாம்: ஆய்வில் தகவல்!

ஊரடங்கு காலம் உங்கள் மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் அதிகரித்துள்ள சூழலில், அவற்றைக் குறைக்கும் சில இயற்கை முறைகள் குறித்து நாம் அறிந்திருப்பது அவசியம்.

  • Share this:
கொரோனா ஊரடங்கின்போது இளைஞர்களின் மன அழுத்தம் இரட்டிப்பாகி இருப்பதற்கான புதிய ஆதாரங்கள் ஆய்வின் மூலம் வெளிவந்துள்ளன. பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் சைக்கியாட்ரியில் வெளியிடப்பட்ட ஆய்வில், கொரோனா தொற்றுநோய் மற்றும் ஊரடங்கின் ஆரம்பக் கட்டங்களில், பதட்டத்துடன் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை 13 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாக, அதாவது இரு மடங்காக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், ஜூன் மாதத்தில் ஊரடங்கின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோதும் மன அழுத்தம் தொடர்ந்து உயர்ந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் இந்த குளிர்காலத்தில் இதேபோன்ற நிலை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெண்கள், மனநல பிரச்னைகள் ஏற்கனவே எதிர்கொண்டவர், நிதிச் சுமை உள்ளவர்கள் முதலானோருக்கு இது இன்னும் மோசமாக இருக்கும் என்றும் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. எனவே, உங்கள் மன அழுத்தத்தையும் பதட்ட அளவையும் குறைக்கக்கூடிய சில இயற்கை முறைகள் குறித்து நாம் அறிந்திருப்பது அவசியம்.

1. பெப்பர்மின்ட் டீ

பெப்பர்மின்ட் நம் சமையலுக்கு மட்டுமல்லாது ஆரோக்கியத்துக்கும் மிகவும் முக்கியமானது. இது நமக்கு ஒரு புத்துணர்ச்சியூட்டும் சுவையையும் நறுமணத்தையும் வழங்கும் ஒரு பொருளாகத்தான் தெரியும். ஆனால் இதிலுள்ள சில மருத்துவ குணங்கள் பற்றி பலருக்கும் தெரியாது. பெப்பர்மின்ட் உங்களை நிதானமாக வைப்பதோடு உங்களை மன அழுத்தத்திலிருந்து விடுவிக்கும் ஆற்றல் கொண்டது. உண்மையில், மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் போக்குவதற்கு பெப்பர்மின்ட் டீ ஒரு சிறந்த பொருளாகும். மூலிகையில் உள்ள மெந்தோல் ஒரு தசை தளர்த்தியாக (muscle relaxant) அறியப்படுகிறது. மேலும் இது இயற்கையில் ஆண்டிஸ்பாஸ்மோடிக் ஆகும்.

2. ஷிலாஜித்

ஷிலாஜித் என்பது பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆயுர்வேத மருந்தாகும். இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் சாதகமான விளைவை ஏற்படுத்தக்கூடிய ஒரு பயனுள்ள, பாதுகாப்பான பொருளாகும். அதிகமான மருத்துவ குணங்களை இது கொண்டுள்ளது. வேலை தொடர்பான மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் பதட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள இளம் உழைக்கும் தொழில் வல்லுநர்கள் இதை கட்டாயம் முயற்சி செய்ய வேண்டும்.

ஏனெனில் இது துத்தநாகத்துடன் மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற முக்கியமான கூறுகளைக் கொண்டுள்ளது. உபகர்மா ஆயுர்வேதத்தின் தூய ஷிலாஜித் பிசின், ஆதாரின் ஸ்டே ப்ரோ-ஆக்டிவ் (Aadar's Stay Pro-Active) ஆகியவை உங்களுக்கு புத்துணர்வூட்டும் உதவும் சில தயாரிப்புகளாகும். இது உலகப் புகழ்பெற்ற இயற்கை மூலப்பொருள் என்று கூறலாம். ஆண்ட்ரோலோஜியா இதழ் நடத்திய ஆய்வு ஒன்றில் ஆண் உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை அதிகரிக்க ஷிலாஜித் உதவுகிறது என்று கூறியுள்ளது.

3. சில எண்ணெய் வகைகள்

அரோமாதெரபி என்பது பல உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்கும் எண்ணெயாகப் பயன்படுத்தப்படுகிறது. கவலை மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான இயற்கையான தீர்வாக இது அமைகிறது. லாவெண்டர் எண்ணெய், மல்லிகை, ரோஸ், பெர்கமோட் போன்ற சில ஆற்றல்மிகு எண்ணெய்கள் உங்கள் கவலையைப் போக்க உதவும் என்கிறார்கள்.

Also read: குளிர்கால தொண்டை வலி, இருமலை சரிசெய்ய உதவும் வீட்டு வைத்தியங்கள்..

4. அஸ்வகந்தா

அஸ்வகந்தா என்பது ஒரு "அடாப்டோஜென்" என வகைப்படுத்தப்பட்ட ஒரு பண்டைய மருத்துவ மூலிகையாகும். அதாவது, இது உங்கள் உடல், மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவும். கடுமையான வேலை அழுத்தத்தில் இருக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் இந்த மூலிகை, இது நரம்பு மண்டலத்தில் ரசாயன சமிக்ஞைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் மூளையின் இயக்கத்தை சீராக்குகிறது. மன அழுத்தம், கவலைகள் உள்ளவர்களுக்கு இது அறிகுறிகளைக் குறைக்கும் என்று பல ஆய்வுகள் ஏற்கனவே நிரூபித்துள்ளன.

உபகர்மா ஆயுர்வேதமானது சகிப்புத்தன்மையை ஏற்படுத்துவதற்கான தூய அஸ்வகந்தா காப்ஸ்யூல்கள், தாபூரின் அஸ்வகந்த சுர்ணா, இமயமலை அஸ்வகந்தா ஆகியவற்றை தந்து உள நலனில் சில அதிசயங்களை நிகழ்த்துகின்றன. ஆம், அஸ்வகந்தாவில் மன அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி நிரம்ப உள்ளது. நமக்கு ஏற்படும் பதற்றத்தினாலும் மன அழுத்தத்தினாலும் மனசோர்வு, உடல் சோர்வு ஏற்படும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பி அதிகரிக்க, இந்த அஸ்வகந்தா கிழங்கு பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அஸ்வகந்தா சோர்வை நீக்கி புத்துணர்ச்சியை அளிக்கிறது. இதிலுள்ள அடோப்டோஜினிக் மற்றும் ஊட்டச்சத்து சார் பண்புகள் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால் நம் மன அழுத்தமானது குறைந்து நிம்மதியான உறக்கம் கிடைக்கிறது.

5. தாவர அடிப்படையிலான தயாரிப்புகள்

தாவர அடிப்படையிலான தயாரிப்புகள் எப்போதும் ஊட்டச்சத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அங்கமாக இருந்து வருகின்றன. இவற்றில் புரோட்டீன், மல்டிவைட்டமின்கள், ஆயுர்வேத மூலிகைகள் இருப்பதால் இது நன்கு வேலை செய்யும். பல துறைசார் நிபுணர்களும் இந்த தயாரிப்புகளைத் தேர்வு செய்கிறார்கள். ஓசிவாவின் புரோட்டீன் & மூலிகைகள் குறிப்பாக பெண்களின் மன அழுத்தத்தை சமாளிக்க உதவுகின்றன.

கொரோனா வைரஸ் உலகெங்கும் குறிப்பிடத்தக்க அளவு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல் பாதிப்பைத் தாண்டி, பொதுவான மன ஆரோக்கியத்திற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும் மற்ற நாடுகளைப் போலவே, வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், நாடு தழுவிய ஊரடங்கைச் செயல்படுத்தியது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தைக் குறைக்க மேற்சொன்னவற்றைப் பின்பற்றினால் நிச்சயம் மனக்கவலை இன்றி ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழலாம்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: