• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே அசிடிட்டி பிரச்சனையை குணமாக்கலாம்!

வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே அசிடிட்டி பிரச்சனையை குணமாக்கலாம்!

நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சல்

நாள்பட்ட அமிலத்தன்மை ஓசோஃபேஜியல் புற்றுநோயை ஏற்படுத்தும். எனவே இதனை கண்டுகொள்ளாமல் விடுவது ஆபத்தில் முடியும் என்பதால் ஆரம்பத்திலேயே குணமாக்குவது நன்மை தரும்

  • Share this:
வயிற்றில் சுரக்கும் அமிலமானது உணவுக்குழாயில் திரும்ப மேல் நோக்கி வருவதால் ஏற்படக்கூடியதுதான் நெஞ்செரிச்சல். வயிறு அதிகப்படியான ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை உற்பத்தி செய்யும் போது அமிலத்தன்மை ஏற்படுகிறது, இதனால் மார்பு, கழுத்து பகுதி, மற்றும் வயிற்றில் எரியும் உணர்வு ஏற்படுகிறது, இது தான் நெஞ்செரிச்சல் என்று அழைக்கப்படுகிறது. இது இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் அல்லது GERD எனப்படுகிறது.

உடல் பருமன், புகைபிடித்தல், மது அருந்துதல், நேரத்துக்குச் சாப்பிடாமல் இருத்தல், அதிக உணவு உட்கொள்ளுதல், போன்றவை நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள். மேலும் கொழுப்பு மற்றும் காரமான உணவுகள் மற்றும் ஹெலிகோபாக்டர் பைலோரி என்ற பாக்டீரியா ஆகியவையும் நெஞ்செரிச்சலுக்கான முக்கிய காரணங்களாகும். நாள்பட்ட அமிலத்தன்மை ஓசோஃபேஜியல் புற்றுநோயை ஏற்படுத்தும். எனவே இதனை கண்டுகொள்ளாமல் விடுவது ஆபத்தில் முடியும் என்பதால் ஆரம்பத்திலேயே குணமாக்குவது நன்மை தரும்.

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிமையாக நெஞ்செரிச்சல் பிரச்சனையை சரி செய்ய முடியும். அவை என்னென்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.,

சமையல் சோடா

சோடியம் பைகார்பனேட் பொதுவாக பேக்கிங் சோடா என அழைக்கப்படுகிறது. இது கடுமையான அமில தன்மைக்கு தீர்வாக பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது இயற்கையில் காரமானது மற்றும் தண்ணீரில் கலக்கும்போது அமிலங்களை நடுநிலையாக்குகிறது, ஆனால் இது தற்காலிக தீர்வாகும். அதிகப்படியான அமிலத்தன்மையின் காரணமாக நீண்டகாலம் நெஞ்செரிச்சல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இரைப்பைக் குடலியல் நிபுணரை அணுக வேண்டும். பேக்கிங் சோடாவிலும் உப்புக்கள் அதிகம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்கள் இதனை எடுத்து கொள்ள வேண்டாம்.

சீரகம்

சீரகம் இயற்கையில் காரமானது, எனவே இது பேக்கிங் சோடாவை போலவே அமிலங்களை நடுநிலையாக்குகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் சீரக தண்ணீர் அமிலத்தன்மையை கட்டுப்படுத்துவதாக அறியப்படுகிறது. தண்ணீரை சூடு செய்து அதில் ஒரு கைப்பிடி அளவு சீரகத்தை போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின்னர் அந்த தண்ணீரை வடிகட்டி குடிக்க வேண்டும். இது அஜீரணத்தை போக்கவும், இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும் உதவுகிறது. மேலும் கருப்பு சீரகம் சாறு இரைப்பை புண்களை குணப்படுத்த உதவும் என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இஞ்சி

இஞ்சி காரத்தன்மை கொண்டது மற்றும் அமிலத்தன்மையைக் குறைக்க உதவுகிறது. மேலும் இஞ்சியை சட்னி, டீ, ஜூஸ்களில் கலந்து உண்டு வந்தால் உடலில் ஆசிட் ரிஃப்ளக்ஸ் ஓசோபாகிடிஸ் எனப்படும் ஒரு நிலையை ஏற்படுத்துகிறது. இது நெஞ்செரிச்சலை குறைத்து அமிலத்தன்மையை கட்டுப்படுத்துகிறது. இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை இரைப்பை புண்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

நெஞ்செரிச்சல்


துளசி

மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.

துளசி இலைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, இரும்பு மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இவை உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தொற்று நோய்களை தடுக்கவும் உதவுகிறது. துளசிக்கு இரைப்பை புண்களுக்கு குணப்படுத்தும் பண்புகள் உள்ளன. இது வயிற்று மற்றும் உணவுக்குழாயில் ஏற்படும் அமில சுரப்பை கட்டுப்படுத்த உதவுகிறது மேலும் துளசியில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன.

மஞ்சள்

மஞ்சளில் குர்குமின் எனப்படும் கலவை உள்ளது. குர்குமின் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும், இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது அதிகப்படியான அமில சுரப்புகளிலிருந்து வயிற்றைப் பாதுகாக்க உதவுகிறது புற்றுநோய்க் கட்டிகள் உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: