முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Herbal Teas | வயிறு வீக்கத்தை குறைக்க உதவும் மூலிகை தேநீரின் செக்லிஸ்ட்!

Herbal Teas | வயிறு வீக்கத்தை குறைக்க உதவும் மூலிகை தேநீரின் செக்லிஸ்ட்!

எலுமிச்சை தேநீர் உலகில் மிகவும் பிரபலமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பானங்களில் ஒன்றாகும்.

எலுமிச்சை தேநீர் உலகில் மிகவும் பிரபலமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பானங்களில் ஒன்றாகும்.

எலுமிச்சை தேநீர் உலகில் மிகவும் பிரபலமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பானங்களில் ஒன்றாகும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

குடலில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகம் இருப்பது, அதிகளவு கார்போனேட்டட் பானங்களை அருந்துவது, அழற்சியை உண்டாக்கும் உணவுகளை உண்பது, தைராய்டு குறைபாடு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், எரிச்சல் கொண்ட குடல் நோய், அதிகளவு காற்றை விழுங்குதல், நெஞ்செரிச்சல், அதிக அமிலச்சுரப்பு மற்றும் அடிக்கடி வயிறு முட்ட உண்பது போன்றவை வயிறு வீக்கத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. ஆனால் இதுகுறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் வீட்டில் கிடைக்கும் மூலிகைகளை கொண்டே இதனை சரி செய்ய முடியும். உங்கள் அன்றாட உடற்பயிற்சியுடன் நீங்கள் சூடான மூலிகை தேநீரை அருந்தி வந்தாலே போதுமானது.

பெருஞ்சீரக தேநீர்:

உங்கள் உடலில் அதிக சோடியம் , வாயு மற்றும் நீர்ச்சத்து அதிகரிப்பதால் தான் வயிற்று பகுதியில் வீக்கம் ஏற்படுகிறது. அஜீரணமும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. பெருஞ்சீரக தேநீர் தற்போது வந்த புதிய நடைமுறை அல்ல, பழங்காலத்திலிருந்தே, பெருஞ்சீரகம் வாயு, அமிலத்தன்மை மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. எனவே தினமும் பெருஞ்சீரக தேநீர் அருந்தி வந்தால் வயிற்று வீக்கம், மலச்சிக்கல், அஜீரணத்திற்கு நிவாரணம் அளிக்கிறது. இதிலுள்ள அனெத்தோல், ஃபென்சோன் மற்றும் எஸ்ட்ராகோல் மலச்சிக்கல், வீக்கம், அஜீரணத்தை குணப்படுத்துவதற்கான ஒரு முக்கிய ஆதாரமாக செயல்படுகிறது.

பெருஞ்சீரகம் தேநீர் தயாரிக்க ஒரு டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரக விதைகளை நசுக்கி, 10 நிமிடம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, மிதமான சூட்டில் பருகவும். விரும்பும் இருந்தால் தேன் சேர்த்து கொள்ளலாம்.

இஞ்சி தேநீர்:

இஞ்சி தேநீர் வீக்கத்தை குறைக்க ஒரு சிறந்த வழியாகும். குறிப்பாக குடலில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து, உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தேவையான அளவு தண்ணீரை எடுத்து, அதில் தோல் நீக்கிய இஞ்சி துண்டுகளை 20 நிமிடம் கொதிக்க வைத்து, சுவைக்கு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து, சுடச்சுட ஒரு கப் இஞ்சி தேநீர் அருந்துவது, மனதுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு உங்கள் உடலுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பயனளிக்கும். குறிப்பாக வயிறு சார்ந்த கோளாறுகளை தீர்க்கக்கூடியதாகும். வீக்கம், மலச்சிக்கல், மற்றும் குமட்டல் ஆகியவற்றை இஞ்சி தேநீர் எளிதாகக் குணப்படுத்துகிறது.

Must Read | தாய்ப்பால் குறைவாக சுரக்க என்ன காரணம்? சரி செய்வது எப்படி?

எலுமிச்சை தேநீர்:

எலுமிச்சை தேநீர் உலகில் மிகவும் பிரபலமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பானங்களில் ஒன்றாகும். எலுமிச்சை தேநீர் புற்றுநோயை கூட எதிர்த்து போராட உதவுகிறது. நீங்கள் வீக்கத்தை குறைக்க விரும்பினால், தினமும் எலுமிச்சை தேநீர் அருந்தலாம். மேலும் ஐரோப்பிய மருத்துவ முகமையில் வெளியிட்ட ஒரு ஆய்வின்படி, எலுமிச்சை செரிமான பிரச்சினைகளை குணப்படுத்தும் திறன் கொண்டது, மேலும் இது வீக்கத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது என தெரியவந்துள்ளது.

கெமோமில் தேநீர்:

கெமோமில் தேநீரை செய்ய, கெமோமில் மலர்கள் நன்கு காய வைத்து உலர்ந்த பின் பயன்படுத்தப்படுகின்றது. பின் இதனை சுடு தண்ணீரில் அல்லது கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தேநீர் போன்று செய்து அருந்துகின்றனர் இதில் காஃபின் இல்லாததால், க்ரீன் டீ அல்லது மற்ற தேநீர் வகைகளை விட அதிகம் மக்களால் விரும்பி தேர்ந்தெடுத்து அருந்தப்படுகின்றது. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும், வயிறு வீக்கத்தையும் குறைக்க உதவுகிறது.

மிளகுக்கீரை தேநீர்:

தேநீரில் மிளகுக்கீரை சேர்ப்பது நிச்சயமாக உங்கள் தேநீர் சுவையை அதிகரிக்கும். மிளகுக்கீரை தேநீரை அருந்துவது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை ஆதரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஆக்ஸிஜனேற்ற, ஆன்டிகான்சர், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் தடுப்பு பண்புகளை கொண்டுள்ளது. மிளகுக்கீரையின் குளிர்ச்சியான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பண்புகள் வீக்கத்தை குணப்படுத்த சிறந்த தீர்வாக செயல்படுகிறது, இது அமிலத்தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. மேலும் வயிற்றுப் பகுதியில் பிடிப்பு இருந்தால் மிளகுக்கீரை தேநீர் அருந்திவர விரைவில் குணமாகும்.

First published:

Tags: Ginger Tea, Healthy Life, Herbal Tea