முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உங்கள் பிரசவத்திற்குப் பிறகு உணவில் சேர்க்க வேண்டிய அத்தியாவசிய உணவு பொருட்கள்!

உங்கள் பிரசவத்திற்குப் பிறகு உணவில் சேர்க்க வேண்டிய அத்தியாவசிய உணவு பொருட்கள்!

மாதிரி படம்

மாதிரி படம்

ஜன்க் உணவுகள் உங்கள் தினசரி உணவிற்கு மாற்றாக இருக்கக்கூடாது. காபி மற்றும் ஆல்கஹாலை தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள்  முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

கர்ப்ப காலத்தில் உணவுகளில் பெண்கள் எப்படி கவனம் செலுத்த வேண்டுமோ, அதேப் போல் பிரசவம் முடிந்த பின்னும் பெண்கள் தாங்கள் உண்ணும் உணவுகளின் மீது கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் பிரசவம் முடிந்த பின் குழந்தையின் உணவான தாய்ப்பாலைக் கொடுப்பதால், அப்போது எந்த உணவுகளை தாய் உட்கொண்டாலும், அது குழந்தையையும் அடையும். இந்த கடினமான நேரத்தை சரியான சீரான உணவு மூலம் சமாளித்து உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஆரோக்கியத்தை சேர்த்து நலமுடன் வாழலாம். சில நேரங்களில் தாய்மார்கள் உட்கொள்ளும் உணவுகளால் குழந்தைகளுக்கு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. ஆகவே பிரசவத்திற்கு பின்னும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். இங்கு பிரசவம் முடிந்த பெண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகளின் டிப்ஸ்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 

அதிக திரவப் பொருட்கள்:

நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது உங்கள் உடலுக்கு அதிக  திரவங்கள் தேவை. உங்கள் அன்றாட உணவில் பால், பழச்சாறுகள் மற்றும் ஷேக்ஸ் போன்ற திரவங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த நேரத்தில் நீர் மிகவும் அவசியமான திரவமாகும், எனவே நீங்கள் குறைந்தது 6-8 கிளாஸ் தண்ணீரை தவறாமல் குடிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

புரதம் நிறைந்த உணவுகள்:

பிரசவத்திற்குப் பிறகு, உங்கள் உடல் பழைய நிலைக்கு மாற புரதங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உங்கள் உடல் எடையைப் பொறுத்து, வலிமையை மீண்டும் பெற நீங்கள் சரியான அளவு புரதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே எடை குறைவாக இருப்பவர்கள் கூடுதல் புரதத்தை உட்கொள்ள வேண்டும். மீன், முட்டை, சிக்கன் போன்றவை தாய்ப்பாலின் ஊட்டச்சத்துக்களின் அளவை அதிகரிக்க உதவுவதோடு, அதில் அதிகப்படியான தெர்மோஜெனிக் அளவு உள்ளதால், அதிகளவு கலோரிகளை எரிக்க உதவும். அதுமட்டுமின்றி, மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்:

தினசரி உணவில் குறைந்தது பாதி அளவிற்காவது பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பது முக்கியம். புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆரோக்கியத்தை அள்ளித் தரும். அவற்றில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. ப்ளூபெர்ரி பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது மற்றும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் வளமாக உள்ளது. ஒருவேளை உங்களுக்கு ப்ளூபெர்ரி பழங்கள் சாப்பிட கிடைக்காவிட்டால், வைட்டமின் சி அதிகம் நிறைந்த பழங்களான் நெல்லிக்காய், ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு போன்றவற்றை உட்கொள்ளுங்கள். காய்கறிகளில் பலவற்றை சாப்பிடலாம். முடிந்தவரை டாக்டரின் ஆலோசனையை பெற்று சாப்பிடுவது முக்கியம்.

ப்ரிநெட்டல் வைட்டமின்கள்:

நீங்கள் தாய்ப்பாலை கொடுக்கும்முன், ப்ரிநெட்டல் வைட்டமின் சப்ளிமெண்ட்ஸை தொடர்ந்து உட்கொள்ளவது முக்கியம். இதைப்பற்றி மேலும் அறிய உங்கள் ஆஸ்த்தான டாக்டரை அணுகவும்.

Also read... Pandian stores : ”குழந்தை பிறந்த பிறகு இந்த டயட்தான் ஃபாலோ பன்றேன்” - பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமாவின் டயட் சீக்ரெட்

காபி மற்றும் ஆல்கஹாலை தவிர்க்கவும்:

ஜன்க் உணவுகள் உங்கள் தினசரி உணவிற்கு மாற்றாக இருக்கக்கூடாது. காபி மற்றும் ஆல்கஹாலை தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள்  முற்றிலும் தவிர்க்க வேண்டும். காபி குழ்நதையின் வளர்ச்சியை பாதிக்கிறது மற்றும் ஆல்கஹால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் அதனால் அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கு ஒருசில உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டியிருக்கும். அதேப் போல் குழந்தைப் பிறந்த பிறகு, ஒருசில உணவுகளின் மீது ஆசை அதிகம் எழும். அதிலும் அத்தகைய உணவுப் பொருட்கள் அனைத்தும், கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடக்கூடாதவையாக இருக்கும். ஆனால் மேற்சொன்னவற்றை  நீங்கள் கண்டிப்பாக சாப்பிடவேண்டும்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Post pregnancy diet