முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / 40-வயதை நெருங்கும் பெண்களா நீங்கள்..? உடல் எடையை குறைக்க கடினமாக இருந்தால் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

40-வயதை நெருங்கும் பெண்களா நீங்கள்..? உடல் எடையை குறைக்க கடினமாக இருந்தால் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

Easy Exercises for women

Easy Exercises for women

உடற்பருமன் என்பது உடல் அளவிலும், மனதளவிலும் மனிதர்களுக்கு பாதிப்பை உண்டாக்குகின்றன. வளர்சிதை மாற்ற நோய்கள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகின்றன. மேலும் இவற்றால் உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு நோய் போன்றவைகளு,ம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உடற்பருமன் என்பது உடல் அளவிலும், மனதளவிலும் மனிதர்களுக்கு பாதிப்பை உண்டாக்குகின்றன. வளர்சிதை மாற்ற நோய்கள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகின்றன. மேலும் இவற்றால் உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, நீரிழிவு நோய் போன்றவைகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

ஆண்களைவிடப் பெண்களுக்கு உடல் பருமன் பிரச்சினை அதிகம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஏனெனில் தற்போது பெண்களிடையே உடல் உழைப்பு பெரிதும் குறைந்துவிட்டது எனக்கூறலாம்.  உட்கார்ந்துகொண்டே வேலை செய்வது, தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே உணவை உட்கொள்வது, வீட்டு வேலைகளை செய்ய நவீன மின்சாதனங்கள் வந்துவிட்டது போன்றவை பெண்களுக்கு உடல் பிரச்சினையை உருவாக்குகின்றன.

மேலும், சில பெண்களுக்குக் குழந்தை பிறந்த பிறகு, ஹார்மோன்களின் அதீத விளைவால் உடல் பருமன் ஏற்படுவதுண்டு. அதிலும் 40 வயதை நெருங்கும் பெண்கள் குடும்பத்தை கவனிப்பதிலும், வேலைக்குச் செல்வதிலும் கவனம் செலுத்தி தங்கள் உடல் நலனில் அக்கரைகாட்டாமல் இருந்துவிடுகின்றனர். இதனால் உடல் பருமனை குறைக்க நேரமில்லாமல் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.

இந்த பதிவில் உடல் எடையை குறைக்க விரும்பும் 40 வயது நெருங்கும் அல்லது கடந்த பெண்களுக்கு எற்ற 5 வகையான பயிற்சி வழிமுறைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

நடை பயிற்சி : தினமும் 30-40 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடப்பது, ஆரோக்கியமாக இருக்க சிறந்த வழியாகும். தினமும் வாக்கிங் செல்வதன் மூலம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதத்தால் அபாயம் குறையும் ஆய்வுகளும் வயதான காலத்தில் வாக்கிங் செல்வதால் இறப்பு சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறுகின்றன.

கூடுதலாக, இது மன அழுத்தத்தை குறைக்கவும் உங்கள் மனநிலையை மேம்படுத்தவும் உதவும். தினமும் 30-40 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடப்பது 150 கலோரிகளை எரித்து உடல் எடையை குறைக்க உதவும். காலையில் வேலை செய்ய முடியாதவர்கள் மாலையில் நடைபயிற்சி செய்யலாம்.

Also Read : ஜில்லென தண்ணீர் குடித்தால் மெட்டபாலிசம் அதிகரித்து எடை குறையுமா.?

ஜாக்கிங் : உடல் எடையை குறைப்பது என்பது ஒரு சவாலான செயலாகும், அதற்கு மிகுந்த அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் போது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் உடற்பயிற்சி முக்கியமல்ல; அதனால் கிடைக்கும் உடல்நல பயன்கள் தான் முக்கியம். ஓட்டம் என்பது நீங்கள் விரும்பிய எடை இலக்கை அடைய உதவும் ஒரு பயனுள்ள உடற்பயிற்சி வடிவமாகும். தொடர்ந்து 30 நிமிடங்கள் ஓடினால் 671 கலோரிகள் வரை எரிக்கப்படும்.

ஜம்பிங் ஜாக்ஸ் : ஜம்பிங் ஜாக் ஒரு வழக்கமான கார்டியோ ரொட்டினை பராமரிக்க ஒரு சிறந்த உடற்பயிற்சி ஆகும். கால்களையும், கைகளையும் மேல்நோக்கி உயர்த்தி துள்ளிக்குதிக்கும் ‘ஜம்பிங் ஜாக்ஸ்’ பயிற்சியை மேற்கொள்வது எலும்பு ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் விரைவாக பலன் தேடித்தரும்.

ஜம்பிங் ஜாக்ஸ் பயிற்சியை விரைவாகவும், எளிதாகவும் கற்றுக்கொள்ளலாம். ஆரம்பநிலைக்கு, ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்கள் இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும், ஏனெனில் 10 நிமிட ஜம்பிங் ஜாக்ஸ் உங்களுக்கு 80-100 கலோரிகளை எரிக்க உதவும்.

ஏரோபிக்ஸ்: ஏரோபிக் என்ற வார்த்தைக்கு ஆக்ஸிஜன் என்று பொருள். அதாவது காற்றில் உள்ள சுவாசிக்கும் ஆக்ஸிஜனை எடுத்து அதைத் தசைகளுக்கு செலுத்தி தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க எரிபொருளாக செயல்படுகிறது. இந்த பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும்.

இதய நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கிறது, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது, கெட்ட கொழுப்புகளை நீக்கி நல்ல எச். டி. எல் கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்கிறது. வழக்கமான உடல் செயல்பாடு இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்தவும், இரத்த சர்க்கரையை குறைக்கவும் உதவுகிறது, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும்.

வாரத்திற்கு 2 முதல் 3 முறை 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஏரோபிக் உடற்பயிற்சி உரிய முறையில் செய்வதன் மூலம் உங்கள் உடல் எடையையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். ஜூம்பா அல்லது நடனம் போன்ற ஏரோபிக் பயிற்சிகள் பெண்களின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Also Read : ஒர்க் அவுட் செய்த பின் என்ன சாப்பிடுவது என குழப்பமா..? உங்களுக்கான உணவுப்பட்டியல் இதோ..!

ஸ்குவாட்ஸ் (குந்துதல்) : உங்கள் இழப்புக்கான சிறந்த பயிற்சிகளில் ஒன்று ஸ்குவாட்ஸ். இது அனைத்து முக்கிய தசைகளையும் செயல்படுத்த உதவுகிறது. குந்துதல் பயிற்சியை முடிக்க, நீங்கள் உங்கள் மூச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். பயிற்சியை தொடங்கும் ஒவ்வொரு முறையையும் ஆழ்ந்த மூச்சை இழுத்து எடுத்து, பின்னர் மூச்சை வெளியேற்ற வேண்டும்.

நமது உடலை ஆரோக்கியமாக வைக்க கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கால்சியம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சீரான உணவு முக்கியம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க வழக்கமான உடற்பயிற்சி மட்டும் அல்லாமல் சீரான உணவினை 40-ஐ நெருங்கும் அல்லது 40-ஐ கடந்த பெண்கள் எடுத்துக்கொள்வது அவசியம்.

First published:

Tags: Exercise, Health tips, Healthy Life, Weight loss