இதன் காரணமாக இந்த பிரச்னை தற்காலிகமா இருந்தால் ஆச்சரியமில்லை. ஒருவேளை தற்காலிகம் எனில் எவ்வளவு காலம் நீடிக்கும் என்கிற சந்தேகமே தற்போது எழுகிறது என மதர்ஸ் லேப் IVF மையத்தின் இயக்குநர் ஷோபா குப்தா கூறுகிறார். எனவே இது குறித்த கூடுதல் ஆய்வுகளை சேகரிக்க வேண்டும் என கூறுகிறார்.
ஆண்கள் மீன் எண்ணெய் சாப்பிடுவது குறித்து யோசித்தால் உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்துவிட்டு உட்கொள்வது நல்லது.
மீன் எண்ணெய் சாப்பிடுவது இளம் ஆண்களின் விந்தணுக்களை ஆரோக்கியமாக்குவதோடு குழந்தை பாக்கியத்தை விரைந்து கொடுக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது. அதேசமயம் குழந்தையின்மை பிரச்னைக்கும் உதவும் என கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் மொத்தம் 1,679 இளம் ஆண்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களில் 6% பேர் மீன் எண்ணெய் மாத்திரைகளையும் , 54% பேர் மீன் எண்ணெய்யை நேரடியாகவும் 60 நாட்களுக்கு சாப்பிட்டுள்ளனர். பின் அவர்களின் இரத்த மாதிரி மற்றும் விந்தணுக்களை சோதனை செய்துள்ளனர்.
அதில் மீன் எண்ணெய் சாப்பிட்டத்தற்கு முன் பின் என கணக்கிட்டதில் 60 நாட்களில் அவர்களின் விந்தணுக்கள் அதிகரித்துள்ளன. இதில் மீன் எண்ணெய் மாத்திரைகள் சாப்பிட்டாலும் அல்லது நேரடியாகப் பயன்படுத்தினாலும் பலன் ஒன்றுதான் என்பதையும் கண்டறிந்துள்ளனர்.
அதேபோல் இந்த மீன் எண்ணெய் சாப்பிடுவதால் அவர்கள் உட்கொள்ளும் மற்ற வைட்டமின், புரதச்சத்துகளை பாதிக்காது என்பதையும் கண்டறிந்துள்ளனர்.
எனவே ஆண்கள் சமையலிலும் மீன் எண்ணெய் கொண்ட பொருட்களை சேர்த்து சாப்பிடுவது அவர்களின் விந்தணுக்களை அதிகரிக்க உதவும் அதோடு அந்த விந்தணுக்களின் செல்களும் ஆரோக்கியமானதாக இருக்கும். அவை நீந்தி கருப்பையை அடையும் ஆற்றல் வேகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் கரு நிற்றல் வேகமாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆய்வை ஆழமாக எடுத்துச்சென்று கூடுதல் தகவல்களை சேகரிக்க குழு முற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியின் தலைவர் கூறியுள்ளார்.
எனவே ஆண்கள் மீன் எண்ணெய் சாப்பிடுவது குறித்து யோசித்தால் உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்துவிட்டு உட்கொள்வது நல்லது.
பார்க்க :
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.