பருவம் அடைதல் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் நிகழக் கூடிய மிக முக்கியமான மாற்றமாகும். இயற்கை நியதியின்படி இனப்பெருக்கத்திற்கு தேவையான தகுதி அடைதல் மற்றும் கருமுட்டை உற்பத்தி தொடக்கம் ஆகியவற்றின் அடையாளமாக பருவம் அடையும் மாற்றம் நிகழுகிறது.
கர்ப்பப்பை உள் சுவர்களில் இருந்து ரத்தம் மற்றும் திசுக்கள் ஆகியவை பெண்ணுறுப்பின் வழியாக வெளியேற்றப்படுவது இதன் மாற்றங்களில் மிக முக்கியமானதாகும்.
தோராயமாக ஒரு பெண்ணுக்கு 12 வயது ஆகும்போது, அவள் பருவம் அடையத் தொடங்குகிறாள். அந்த சமயத்தில் தான் முதலாவது மாதவிலக்கு நிகழுகிறது. ஆகவே, பருவம் அடைதல் என்றால் என்ன, அந்த சமயத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழும், அவற்றை எதிர்கொள்வது எப்படி என்று பெற்றோர் தனது பெண் குழந்தைகளுக்கு இந்த வயதில் கற்பிக்க வேண்டும்.
குறிப்பாக, பருவம் அடையும் சமயத்தில் வீட்டில் இல்லை என்றால், அந்தச் சூழலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து எடுத்துரைக்க வேண்டும். இதனால், எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்திற்கு பெண் தயாராவதுடன், கடைசி நேர பதற்றம் மற்றும் கவலைகளை தவிர்க்க முடியும்.
முதல் மாதவிலக்கு நேரம்
முதலாவது மாதவிலக்கு அல்லது பருவம் அடைதல் என்பது ஒரு சில நாட்களில் நடக்கும் மாற்றம் கிடையாது. ஏறத்தாழ ஓராண்டாக இதற்கான மாற்றங்கள் நிகழத் தொடங்கி விடும். குறிப்பாக, பெண்களின் மார்புகள் வளர்ச்சி அடையத் தொடங்கும். அதைத் தொடர்ந்து அந்தரங்க பகுதிகள் மற்றும் அக்குள் பகுதியில் முடி வளர்ச்சி அடையும்.
பெண்ணின் உயரம் அதிகரிக்கும். உடல் தோற்றம் மாற்றம் அடையும். இவை எல்லாவற்றின் விளைவாக முதலாவது மாதவிலக்கு நடைபெறும்.
Pubic Hair Removal: பெண்கள் பிறப்புறுப்பில் வளரும் முடியை ஏன் நீக்கக்கூடாது..?
மாதவிலக்கு தொடக்கம்
முதலாவது மாதவிலக்கு காலத்தில் உடல் எதிர்கொள்ளும் சிக்கல்களை எதிர்கொள்ள பெண் தயாராக வேண்டும். முதல் மாதத்தில் வழக்கமான அளவில் உதிரப் போக்கு அல்லது மிக அதிகப்படியான உதிரப்போக்கு மற்றும் லேசான திட்டுக்கள் போன்றவை இருக்கலாம்.
இது தவிர, பெண்ணுறுப்பில் இருந்து நீர் கசிவு, அடிவயிறு வலி, வயிற்றுப் பிடிப்பு போன்ற அறிகுறிகள் தென்படும். முதலாவது மாதவிலக்கின்போது உதிரப்போக்கு என்பது அடர் பிரவுன் நிறத்தில் இருந்து அடர் சிவப்பு நிறமாக இருக்கும்.
எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்
முதலாவது மாதவிலக்கு கால தொந்தரவுகள் என்பது சில பெண்களுக்கு ஒரு சில நாட்கள் இருக்கலாம். சிலருக்கு 8 நாட்கள் வரையிலும் நீடிக்கும். இதுகுறித்து மகளிர் நல மருத்துவர்கள் கூறுகையில், “மாதவிலக்கு காலம் என்பது 2 முதல் 6 நாட்களுக்கு நீடிக்கலாம். அதே சமயம் 8 நாட்களுக்கு மேலாக மாதவிலக்கு நீடிப்பது அல்லது 15 தினங்களுக்குள் மாதவிலக்கு மீண்டும் வருவது போன்ற அறிகுறிகள் இருந்தாலும், தலைச்சுற்றல், மாதவிலக்கு காலத்தில் அதிகப்படியான வலி போன்ற தொந்தரவுகள் இருந்தாலும் மருத்துவர்களை ஆலோசனை செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.
முதல்முறை எப்படி எதிர்கொள்வது :
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Periods, Women Health