ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

BMI மற்றும் BMR பற்றி தெரிஞ்சுக்கிட்டா ஈசியா உடல் எடையை குறைக்கலாமா..? கண்டறியும் வழிகள்...

BMI மற்றும் BMR பற்றி தெரிஞ்சுக்கிட்டா ஈசியா உடல் எடையை குறைக்கலாமா..? கண்டறியும் வழிகள்...

உடல் பருமன்

உடல் பருமன்

உங்கள் BMI மற்றும் BMR ஐக் குறைப்பதற்கு வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் செய்ய வேண்டும். தவறாமல் உடற்பயிற்சி செய்தல், ஆரோக்கியமாக சாப்பிடுதல் ஆகியவை அடங்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைக்கு பெரும்பாலான மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் உடல் பருமன் அதிகரிப்பு. எந்த நோய் நொடியும் இன்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால், ஒருவர் உடல் எடையை சரியாகப் பராமரிக்க வேண்டும். இதற்காக உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, டயட் போன்ற முறைகளைப் பின்பற்றினாலும் பல நேரங்களில் தோல்வியைத் தான் சந்திக்கின்றனர்.

இதற்கு முக்கியக் காரணம் நாம் டயட்டில் இருக்கிறோம் என்றாலும் நாம் எந்தளவறிற்கு உணவை எடுத்துக்கொள்கிறோம் என்பதில் தான் தவறு செய்கிறோம். இது போன்ற நிகழ்வுகள் இனி ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் BMI மற்றும் BMR ஆகியவை உங்களுக்கு உதவியாக இருக்கும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். எனவே இந்நேரத்தில் BMI மற்றும் BMR? என்பது குறித்து அறிந்து கொள்வோம்.

BMI( body mass index) - உடல் நிறை குறியீட்டெண்:

உடல் நிறை குறியீட்டெண் எனப்படும் பிஎம்ஐ உடல் எடையை குறைக்கும் முயற்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதவாது நீங்கள் எவ்வளவு கலோரிகளை உண்ண வேண்டும் மற்றும் எடையைக் குறைக்க உதவும் கலோரி பற்றாக்குறையை நீங்கள் பராமரிக்க வேண்டும் என்பதைக் கண்டறிய உதவும் குறியீடாகும். உங்கள் பிஎம்ஐ அல்லது உடல் நிறை குறியீட்டெண் என்பது உங்கள் உயரம் மற்றும் எடையின் அடிப்படையில் உடல் கொழுப்பின் அளவைக் கணக்கிடும் அளவீடு ஆகும். எனவே நீங்கள் உங்கள் பிஎம்ஐ அளவீட்டைத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால், உங்களது எடையை உயரத்துடன் மீட்டர் சதுரத்தில் வகுக்க வேண்டும்.

பிஎம்ஐ நிர்வகிக்கும் முறை:

உங்களது பிஎம்ஐ நிர்வகிக்க வேண்டும் என்றால் நீங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதோடு காலை உணவை எக்காரணம் கொண்டும் சாப்பிடாமல் இருக்கக்கூடாது. இது தான் நமது உடலுக்கு ஆற்றலைத் தருகிறது. பொதுவாக காலையில் சாப்பிடுவதைத் தவிர்க்கும் போது மதியம் அதிகமாக சாப்பிட தோன்றும். இதனாலும் நமது உடல் எடை அதிகரிக்கிறது. இதோடு ஆரோக்கியமான உணவுமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு மேற்கொள்ளும் போது பிஎம்ஐ அளவிற்குள் நமது உடலைக் கட்டுக்குள் வைத்து உயர் இரத்த அழுத்தம், நீரழிவு, இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற அதிக எடையுடன் தொடர்புடைய உங்கள் ஆபத்தைக் குறைக்க உதவும்.

BMR -(Basal Metabolic Rate) - அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம்..

பிஎம்ஆர் எனப்படும் அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம் என்பது உங்களது உடல் செயல்படுவதற்குத் தேவையான கலோரிகளின் எண்ணிக்கையாகும். எனவே இவற்றின் மூலம் எடை இழக்க மற்றும் உங்கள் தினசரி கலோரி அளவை நீங்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உங்கள் மொத்த தினசரி கலோரி தேவைகளிலிருந்து 300 கலோரிகளை குறைப்பதன் மூலம் நீங்கள் தொடங்கலாம். இது நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Also Read : உடல் எடையை மளமளவென குறைக்க நெல்லிக்காயை இப்படி சாப்பிடுங்க.!

உங்கள் BMI மற்றும் BMR ஐக் குறைப்பதற்கு வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் செய்ய வேண்டும். தவறாமல் உடற்பயிற்சி செய்தல், ஆரோக்கியமாக சாப்பிடுதல் ஆகியவை அடங்கும். எனவே உடல் எடையை நிர்வகிக்க தினமும் நீங்கள் 75 நிமிட தீவிர ஏரோபிக் உடற்பயிற்சி, 150 நிமிட மிதமான ஏரோபிக் உடற்பயிற்சி அல்லது இரண்டின் கலவையும் ஒவ்வொரு வாரமும் தவறாமல் நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Obesity, Weight gain, Weight loss